வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

''இந்தியாவுடன் அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும்.. தேவையான உதவிகளை செய்வோம்;; ஜோ பைடன் உறுதி!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியாவுக்கு ரெம்டெசிவிர் மருந்து, உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் கொரோனா கோரத் தாண்டவமாடி வருகிறது. உலக அளவில் கொரோனா தினசரி பாதிப்பிலும், தினசரி உயிரிழப்பிலும் இந்தியா தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது.

தமிழ்நாடு, கேரளா, மகாரஷ்டிரா, டெல்லி என ஏறக்குறைய பாதிப்பு அதிகம் இல்லாத மாநிலங்களே இல்லை என்று கூறலாம். ஒரு பக்கம் தொற்று அதிகரித்து வருவதால் பல மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

 ''அமெரிக்கா மீண்டும் முன்னேற்றத்தை நோக்கி நகர்கிறது''.. வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பிடன் பெருமிதம் ''அமெரிக்கா மீண்டும் முன்னேற்றத்தை நோக்கி நகர்கிறது''.. வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பிடன் பெருமிதம்

பல்வேறு நாடுகள் உதவி

பல்வேறு நாடுகள் உதவி

இது தவிர நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகக் கடுமையாக இருப்பதால் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் ஏராளமான நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்கள் ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தியாவின் நிலையை பார்த்து பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

அமெரிக்கா உதவி

அமெரிக்கா உதவி

ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என்று இந்தியாவுக்கு உதவி செய்யும் நாடுகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் மூலப் பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்ட்டுள்ளதால் இந்த தடையை நீக்கும்படி இந்தியா அமெரிக்காவிடம் வலியுறுத்தியது. ஆனால் தடையை நீக்க மறுத்த அமெரிக்கா கொரோனா பாதிப்புள்ள நாடுகளுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்வோம் என்று கூறியது.

துணை நிற்போம்

துணை நிற்போம்

அதன்பின்னர் சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியிடம் பேசிய ஜோ பைடன், ''இந்தியாவுக்கு அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும்'' என்று தெரிவித்தார். இந்த நிலையில் இந்தியாவுக்கு மீண்டும் உதவி செய்வதாக ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன் கூறியதாவது:-

ஜோ பைடன் உறுதி

ஜோ பைடன் உறுதி

கொரோனா தொற்றின் ஆரம்ப காலத்தில் அமெரிக்கா சிரமப்பட்டபோது, இந்தியா மிகப்பெரிய உதவி செய்தது. எனவே இந்தியாவுக்கும் உதவி செய்வோம். இந்தியாவுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்து ,மருத்துவ உயிர் காக்கும் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் உட்பட அனைத்தும் இந்தியாவுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்று ஜோ பைடன் தெரிவித்தார்.

English summary
US President Joe Biden has said that Remtacivir will be shipped to India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X