நம்மதான் தோளில் சுமக்கனும்..பைடனிடம் பேசிய ஜி ஜின்பிங்.. உக்ரைன் போரால் கழற்றி விடப்படுகிறதா ரஷ்யா?
வாஷிங்டன் : உக்ரைன் விவகாரம் தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசிய நிலையில், பேச்சின் போது போரை நிறுத்தும்படி ரஷ்யாவுக்கு சீனா அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவரிடம் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை பொதுமக்கள் தரப்பில் 816 பேர் கொல்லப்பட்டதாகவும், 1333 பேர் காயமடைந்ததாகவும் ஐநா சபை தெரிவித்துள்ளது.
இன்று மரியுபோல் நகரில் பொதுமக்கள் தங்கியிருந்த தியேட்டர் மீது ரஷியா தாக்குதல் நடத்திய கட்டிட இடுபாடுகளில் இருந்து இதுவரை 130 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் போர்
இந்நிலையில் லிவிவ் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள விமான பராமரிப்பு ஆலை மீது இன்று காலையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. லிவிவ் நகரம், போலந்து எல்லையிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது. லிவிவ் நகர் மீது கருங்கடல் பகுதியில் இருந்து ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. 6 ஏவுகணைகள் ஏவப்பட்ட நிலையில், அதில் 2 ஏவுகணைகளை அழித்துவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

கடும் தாக்குதல்
தென்கிழக்கு நகரமான மரியுபோல், ரஷிய படைகளின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். உக்ரைன் மீதான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் மேற்குலக நாடுகளின் தடைகளில் இருந்து ரஷியாவை காப்பாற்றினால், சீனா அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் எச்சரிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

சீனா அமெரிக்கா பேச்சு
உக்ரைன் விவகாரம் தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் சுமார் ஒன்றரை மணி நேரம் பேசிய நிலையில், பேச்சின் போது போரை நிறுத்தும்படி ரஷ்யாவுக்கு சீனா அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவரிடம் ஜோபைடன் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமைதிக்கான சர்வதேசப் பொறுப்புகளை சீனாவும், அமெரிக்காவும் தோளில் சுமக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்
உலக அமைதிக்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக உலகின் முதல் இரண்டு பொருளாதார நாடுகளுக்கு இடையிலான உறவுகள் சரியான பாதையில் முன்னேற வேண்டும் என்ற சீன அதிபர் ஜி ஜின்பிங், போர் யாருடைய நலனுக்காகவும் இல்லை என்றும் மாநிலத்துக்கும் மாநிலத்துக்கும் இடையிலான உறவுகள் இராணுவப் பகை நிலைக்குச் செல்ல முடியாது எனவும் ஜின்பிங் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அமைதியும் பாதுகாப்பும் சர்வதேச சமூகத்தின் மிகவும் மதிப்புமிக்க பொக்கிஷங்கள் என்ற ஜின் பிங், உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் தாக்குதலை அவர் நேரடியாக விமர்சித்தாரா என்பது தெரியவில்லை.
-
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications