காசா அமைதி வாரியத்தில் உறுப்பினராக இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த டிரம்ப்.. அமெரிக்காவோட பிளானை பாருங்க
வாஷிங்டன்: காசா - இஸ்ரேல் போரை நிறுத்துவதற்கான அமைதி வாரியத்தை ஏற்படுத்துவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அதன் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளதாக கூறினார். டிரம்ப் ஏற்படுத்தியிருக்கும் இந்த அமைதி வாரியத்தில் சேர இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல் - காசா இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது. பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் எல்லையில் அவ்வப்போது தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடியாக இஸ்ரேல் தாக்குவதும் என மத்திய கிழக்கில் ஒரே பதற்றமான பல ஆண்டுகளாக நிலவியது.

இஸ்ரேல் ஹமாஸ்
இந்த சூழலில்தான், கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் சரமாரி தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பணய கைதிகளாக அவர்கள் பிடித்து சென்றனர். இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டாமல் ஓய மாட்டோம் எனக்கூறி காசா மீது போர் தொடுத்தது. 2 ஆண்டுகளாக நீடித்த இந்த போரில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
எனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த விவகாரத்தில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து எகிப்தில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சந்திப்பின்போது இருதரப்பு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த அமைதி ஒப்பந்தம் மூலம் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
20 அம்ச அமைதி திட்டம்
ஆனால் ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம் சாட்டிய காசா, இந்த விவகாரத்தில் தலையிடுமாறு டிரம்பை வலியுறுத்தியது. இதையடுத்து, போர் நிறுத்தத்தின் இரண்டாவது கட்டமாக காசா அமைதி வாரியத்தை அமைத்த டிரம்ப் அதன் தலைவராகவும் பொறுப்பேற்றார். இதன்மூலம் பாலஸ்தீனத்தை நிர்வகிக்கப் போவதாகவும் கூறி உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், காசாவில் 20 அம்ச அமைதி திட்டத்தின் இரண்டாவது கட்டத்துக்கு நுழைந்து விட்டோம். எனவே எகிப்து, துருக்கி, கத்தார் ஆதரவுடன் காசாவில் ஆயுத குறைப்பு ஒப்பந்தம் அமல்படுத்தப்படும். அதன்படி ஆயுத குறைப்பு, உயிரிழந்த பணய கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைப்பது உள்ளிட்ட அனைத்து நிபந்தனைகளையும் ஹமாஸ் அமைப்பினர் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் உறவு
காசா மக்கள் போதுமான அளவுக்கு துன்பப்பட்டு விட்டனர். எனவே போரை நிறுத்த இதுவே சரியான நேரம் என்றார். அமெரிக்க அதிபர் டிரம்ப் உருவாக்கிய இந்த அமைதி வாரியத்தில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அமெரிக்க வெளியுறவு செயலர் மார்க் ருபியோ, டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியாவுக்கு டிரம்ப் அழைப்பு
இதற்கிடையே, இந்த அமைதி வாரியத்தில் இடம் பெறுமாறு இந்தியாவுக்கும் டிரம்ப் அழைப்பு விடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்களுக்கும் அழைப்பு விடுத்து இருப்பதாக பாகிஸ்தான் ஏற்கனவே கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. இந்தியாவை பொறுத்தவரை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இருநாடுகளுடன் வரலாற்று ரீதியிலான உறவை கொண்டுள்ளது.
இஸ்ரேலுடன் மிக முக்கியத்துவம் வாய்ந்த உறவை இந்தியா கொண்டுள்ள நிலையில், பாலஸ்தீனத்திற்கும் மனிதாபிமான உதவிகளை அளித்து வருகிறது. இத்தகைய சூழலில் டிரம்பின் அழைப்பு மிகவும் முக்கியத்தும் பெற்றுள்ளது. டிரம்ப் விடுத்து இருக்கும் அழைப்புக்கு இதுவரை ஹங்கேரி மட்டுமே எந்த வித கேள்வியும் எழுப்பாமல் சம்மதம் தெரிவித்துள்ளது.
-
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை












Click it and Unblock the Notifications