இன்னும் ஒரே வாரம்.. வெடிக்க போகுது அமெரிக்க அரசியல்.. உற்று பார்க்கும் டிரம்ப் & கமலா! என்ன மேட்டர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் தேர்தல் ஆண்டுகளில் நவ. மாதம் வந்தாலே அதிபர் வேட்பாளர்களுக்குப் பயம் வந்துவிடுவோம். அது பிரச்சாரத்தை நினைத்தோ அல்லது தேர்தல் நெருங்குகிறதோ என்பதே நினைத்தோ இல்லை. அதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது.. அதுதான் அக்டோபர் சர்ப்ரைஸ் (October Surprise). இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவில் இந்தாண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

இன்னும் ஒரு வாரத்தில் அக். மாதம் பிறக்கும் சூழலில், இரு தரப்பும் அச்சத்தில் உள்ளனர். அதற்குக் காரணம் அக்டோபர் சர்ப்ரைஸ். அதென்ன அக்டோபர் சர்ப்ரைஸ். இரு தரப்பும் இந்தளவுக்கு அச்சப்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம்.
அக்டோபர் சர்ப்ரைஸ்: இந்த அக்டோபர் சர்ப்ரைஸ் என்பது அமெரிக்க அதிபர் தேர்தலை முற்றிலும் புரட்டிப் போடும் ஒரு கேம் சேஞ்சிங் நிகழ்வாகும். அதாவது அமெரிக்காவில் எப்போதும் அதிபர் தேர்தல் நவ. மாதம் நடக்கும். அதற்கு முந்தைய மாதம் அதாவது அக். மாதம் அமெரிக்க அரசியலைப் புரட்டிப் போடும் செய்திகள் வெளியாகும். இது பல நேரங்களில் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவையே மாற்றித் தேர்தல் முடிவுகளை மாற்றுவதே இருக்கும்.
அக்டோபர் சர்ப்ரைஸ் என்பது அமெரிக்க அதிபர் தேர்தலின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது எனச் சொல்லலாம். அந்தளவுக்கு அது பிரச்சாரத்தின் பாதையை மாற்றி, வரலாற்றையே மாற்றி எழுதுகிறது.
தாக்கத்தை ஏற்படுத்தும்: அதன் நேரம், அரசியல் அரங்கில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் மற்றும் அரசியல் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பொறுத்து அக்டோபர் சர்ப்ரைஸ் பல வழிகளில் இருக்கும். ஊழல்கள் அல்லது சர்ச்சைகள், பொருளாதார கொள்கை அறிவிப்புகள், வெளியுறவுக் கொள்கை, விவாதங்கள், விசாரணை முடிவுகள், நீதிமன்ற தீர்ப்புகள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.. எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் அது அமெரிக்க அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தித் தேர்தலை முடிவுகளையே மாற்றுவதாக இருந்தால் அதைத் தான் அக்டோபர் சர்ப்ரைஸ் என்கிறார்கள்.
கடந்த காலங்கள்: கடந்த காலங்களில் அதிபர் தேர்தல் நெருங்கும் போது பல நேரங்களில் இது தேர்தலைப் புரட்டிப் போடுவதாக இருந்துள்ளது. கடந்த 2016 தேர்தல் சமயத்தில் கூட ஹிலாரி கிளிண்டனின் மெயில் குறித்து எஃப்.பி.ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமியின் கடிதம் பூதாகரமாக வெடித்தது. அதிபர் தேர்தலில் வெல்லும் வாய்ப்பு கிளண்டனுக்கு இருந்த நிலையில், அதை இந்த அக்டோபர் சர்ப்ரைஸ் தான் தவிடுபொடியாக்கியது.
இதுபோல 1972இல், வியட்நாம் அமைதி ஒப்பந்தம் குறித்த நிக்சனின் அறிவிப்பு, 1980இல் ஈரான் பணயக்கைதிகள் விவகாரத்தில் ரொனால்ட் ரீகன் செயல்பாடுகள் அவர்களுக்குச் சாதகமான அக். சர்ப்ரைஸாக மாறியது. இப்படிப் பல நிகழ்வுகளை நாம் லிஸ்ட் போட்டுச் சொல்லலாம்.
உண்மை இல்லை: அதேநேரம் அனைத்து அக்டோபர் சர்ப்ரைஸ்களும் உண்மையாகவே இருக்கும் எனச் சொல்ல முடியாது. பல நேரங்களில் அது பொய்யாகவும் ஊதி பெரிதாக்கப்பட்ட நிகழ்வுகளாகவும் இருந்துள்ளது. உதாரணமாக கிளிண்டனின் மெயில் சர்ச்சையை எடுத்துக் கொள்வோம். அவர் தனிப்பட்ட மெயிலில் ரகசியத் தகவல்களை அனுப்பிய போதிலும், அது தேர்தலுக்கு முன்பு பூதாகரமாக்கப்பட்ட அளவுக்குப் பெரிய பிரச்சினை இல்லை என்பது பின்னர் தான் தெரிய வந்தது.
ஆனால், எப்போதும் உண்மையை விட பொய்களும், மிகைப்படுத்தப்பட்ட செய்திகளுமே வேகமாகப் பரவும். அதுவும் உலக வல்லரசின் தலைமை பதவிக்கான தேர்தலில் வெல்ல இரு தரப்புமே இதுபோன்ற பொய்யான மிகைப்படுத்தப்பட்ட செய்திகளே வேண்டுமென்றே பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்தாண்டு அக். மாதத்திற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த முறை என்ன செய்தி வெடிக்குமா.. அது யாருக்குச் சாதகமாக முடியப் போகிறது என்பது எல்லாம் தெரிந்துவிடும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications