"ஓம் சாந்தி சாந்தி.." கமலா ஹாரிஸ் கூட்டத்தில் இந்து மந்திரம்! திடீரென மேடையேறிய தமிழக பூசாரி! அடடே
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு இப்போது நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த மாநாட்டில் திடீரென மேடையில் இந்து மந்திரம் ஒலித்துள்ளது. அங்கே மேடையேறிய கோயில் பூசாரி, மந்திரங்களைச் சொல்லி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். மேலும், உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற வேத கருத்தை அமெரிக்கா பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சிகள் சார்பில் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இதற்கிடையே இப்போது சிகாகோ மாநாட்டில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு அரசியல் தலைவர்களும் பேசினர்.
ஓம் சாந்தி சாந்தி: இதற்கிடையே இந்த சிகாகோ மாநாட்டில் யாரும் எதிர்பார்க்காத நிகழ்வு நடந்தது. அதாவது இந்த மாநாட்டின் 3வது நாளில் திடீரென மேடையேறிய ஒரு இந்து மத கோயில் பூசாரி ஒருவர் "ஓம் சாந்தி சாந்தி" என்று சொல்லி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். அப்போது அனைத்து தலைவர்களும் அதற்கு மரியாதை செலுத்தினர்.
மேரிலாந்தில் உள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோவிலில் பூசாரி ராகேஷ் பட் என்பவர் தான் ஓம் சாந்தி சாந்தி என்று சொல்லி மாநாட்டைத் தொடங்கி வைத்திருந்தார். தொடர்ந்து பேசிய அவர், "நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தேசம் என்று வரும்போது, நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாடு என்று வரும் போது நம் மனம் ஒன்றாக இருக்கட்டும். நம் இதயங்கள் ஒன்றாகத் துடிக்கட்டும். சமூகத்திற்காக நாம் பாடுபட வேண்டும். அதுவே நம்மை பலம் வாய்ந்ததாக மாற்றும். அதுவே நமது நாட்டை பெருமைப்படுத்துவதாக இருக்கும்.
வேத கருத்து: இந்து மதத்தில் உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற வேத கருத்து இருக்கிறது. அதுவே உண்மை. அமெரிக்கா இந்த பாதையைத் தேர்வு செய்ய வேண்டும். உண்மையற்ற நிலையில் இருந்து நிஜத்திற்கும், இருளில் இருந்து வெளிச்சத்திற்கும், மரணத்திலிருந்து அழியாத நிலைக்கும் அதுவே அழைத்துச் செலுத்தும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி" என்று கூறி தனது பேச்சை நிறைவு செய்தார்.
யார் இவர்: ராகேஷ் பட் என்ற இந்த பூசாரி பெங்களூரை சேர்ந்தவர். உடுப்பி அஷ்ட மடத்தின் பேஜாவர் சுவாமிஜியின் கீழ் ரிக்வேதம் மற்றும் தந்திரசார (மாத்வ) ஆகமத்தில் பயிற்சி பெற்ற இவர், அதன் பிறகு அமெரிக்கா சென்றார். இவரால் இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளைச் சரளமாகப் பேச முடியும். மேலும், சமஸ்கிருதம், ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
பெங்களூர் ஒஸ்டீன் கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் கன்னடப் பட்டங்களையும், ஜெயச்சாமராஜேந்திரா கல்லூரியில் சமஸ்கிருதப் பட்டத்தையும் பெற்றார். உடுப்பி அஷ்ட மடத்தில் கொஞ்சக் காலம் பணிபுரிந்த அவர், தொடர்ந்து பத்ரிநாத் கோயிலிலும் பணிபுரிந்தார். மேலும், அவர் கொஞ்சக் காலம் தமிழ்நாட்டின் சேலம் பகுதியில் உள்ள ராகவேந்திரா சுவாமி கோயிலிலும் பணியாற்றி இருக்கிறார். தொடர்ந்து ஜூலை 2013இல் அமெரிக்கா சென்ற அவர், ஸ்ரீ ஸ்ரீ விஷ்ணு கோயிலில் பணியாற்றத் தொடங்கினார்.
பேச்சு: தொடர்ந்து ஜனநாயகக் கட்சியின் அஜய் பூடோரியா பேசுகையில், "இன்று மாநாட்டில் ராகேஷ் பட்டின் இந்து பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இது ஒரு குறிப்பிடத்தக்கத் தருணம். ஜனநாயக கட்சியின் மற்றும் பன்முகத்தன்மையையே இது காட்டுகிறது.. அமெரிக்கச் சமூகத்தில் இந்து மதத்தினரின் செல்வாக்கு எந்தளவுக்கு வளர்ந்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது" என்று அவர் தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications