"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்?
வாஷிங்டன்: அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இதற்கிடையே ஈரானை டிரம்ப் வெளிப்படையாக எச்சரித்துள்ளார். அதாவது ஹார்முஸ் ஜலசந்தியை அடுத்த 48 மணி நேரத்தில் திறக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் மிக மோசமான பேரழிவைச் சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கு மோதல் இப்போது நான்காவது வாரத்தில் நுழைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய மோதல் சீக்கிரம் முடியும் என்றே பலரும் நினைத்தனர். இருப்பினும், ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுக்கவே நிலைமை மோசமாகி வருகிறது. மோதல் தொடர்வதால் இது இரு நாடுகளைத் தாண்டியும் சர்வதேச பாதிப்புகளை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி
குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு இந்த ஹார்முஸ் ஜலசந்தி முக்கியமானதாக இருக்கிறது. இதைத் தான் ஈரான் இப்போது ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களை இந்த ஜலசந்தியை தாண்ட விட மாட்டோம் எனச் சொல்லி ஈரான் எச்சரித்துள்ளது. இது உலக நாடுகளைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையே ஈரானுக்கு டிரம்ப் வெளிப்படையாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை அடுத்த 48 மணி நேரத்திற்குள் மீண்டும் திறக்க வேண்டும்.. அப்படித் திறக்கவில்லை என்றால் ஈரான் நாட்டின் மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
48 மணி நேரம் எச்சரிக்கை
இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில், "ஹார்முஸ் ஜலசந்தியை அடுத்த 48 மணி நேரத்திற்குள் எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லாமல் ஈரான் முழுமையாகத் திறக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்களின் பல்வேறு மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கி அழிக்கும். அதுவும் மிகப் பெரிய நிலையத்தில் இருந்து தாக்குதல் தொடங்கும்" என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கு மோதல் மேலும் அபாயகரமான நிலையை அடைந்துள்ளதை இந்த எச்சரிக்கை உணர்த்துகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது. இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டிவிட்டது. இதே நிலை தொடர்ந்தால் சீக்கிரமே உலக நாடுகள் பாதிப்புகளை உணர ஆரம்பிக்கும்.
ஹார்முஸ் ஜலசந்தி ஏன் முக்கியம்?
ஹார்முஸ் ஜலசந்தி என்பது வளைகுடா நாடுகளை உலகளாவிய சந்தைகளுடன் இணைக்கும் குறுகிய பாதையாகும். இது உலகின் முக்கியமான கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாகும்.. உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இதன் வழியாகவே செல்கிறது. சமீப வாரங்களாக இந்த ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. இதுவே கவலைகளை அதிகரித்துள்ளது.
உலக நாடுகள்
இதற்கிடையே சுமார் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பாதுகாப்பான கடல் போக்குவரத்தை மீட்க அழைப்பு விடுத்துள்ளன. உலகளாவிய எண்ணெய் நெருக்கடி குறித்த அச்சங்கள் அதிகரித்து வரும் நிலையில், முக்கிய ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானும் இந்த கடல்வழித் தடத்தில் எரிசக்தி போக்குவரத்தை உறுதி செய்ய ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளன. அதேநேரம் படைகளைப் பயன்படுத்தும் எண்ணம் இல்லை என்பதை இந்த நாடுகள் தெளிவாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
ஈரான் சரியான புத்திசாலித்தனம்.. அமெரிக்கா போரை வைத்தே.. கோடி கோடியாக கூடுதலாக சம்பாதிக்கும் வித்தை -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications