"ஒரே ஆண்டில் 85,000 விசாக்கள் ரத்து.." அமெரிக்க அதிபர் டிரம்ப் தடாலடி.. இந்தியர்களுக்கு பாதிப்பு?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: டிரம்ப் அதிபரான பிறகு அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கான கெடுபிடிகள் அதிகரித்துள்ளது. இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் முதல் மட்டும் சுமார் 85,000 விசாக்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்கா அறிவித்தது. சிறு தவறு செய்தாலே வெளிநாட்டினர் மீது டிரம்ப் நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுக்கும் நிலையில், வரும் காலங்களிலும் இது தொடரும் என அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்த பிறகு அவர் விசா விதிகளை மொத்தமாக மாற்றியுள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் சட்டவிரோதக் குடியேறிகள் மட்டுமின்றி, சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் வசிப்போருக்கும் இதனால் பெரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. சிறிய விதிமீறல்களுக்கே கூட நாடுகடத்தல் நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளனர்.

US Revokes 85 000 Visas Since January Trump Tightens Rules on H-1B Indian Expats might hit hard

டிரம்ப்

இதற்கிடையே அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிநாட்டினர் மீதான நடவடிக்கைகளை டிரம்ப் அரசு தீவிரப்படுத்தியது. சிறு தவறு செய்வோரின் விசா கூட ரத்து செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். முன்பு இதுபோன்ற தவறுகளுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்படும் நிலையில், டிரம்ப் அரசு நேரடியாக நாடுகடத்தலை ஆரம்பித்தது. இதன் காரணமாக அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் உட்படப் பலரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

85,000 விசாக்கள் ரத்து

கடந்த ஜனவரி மாதம் முதல் மட்டும் சுமார் 85,000 விசாக்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்கா அறிவித்தது. டிரம்ப் அரசு குடிவரவு விதிகளை எந்தளவுக்குக் கடுமையாக அமல்படுத்துகிறது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது. தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க உள் துறை கூறுகையில், "ஜனவரி முதல் 85,000 விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிபர் டிரம்ப்பும், உள் துறை அமைச்சர் ரூபியோவும் ஒரு எளிய ரூல்ஸை பின்பற்றுகிறார்கள். அமெரிக்கர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது தான் அது.. அதை அவர்கள் நிறுத்தவே மாட்டார்கள்" என பதிவிட்டுள்ளனர். மேலும், அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பான நாடாக மாற்றுவோம் என்ற போட்டோவுடன் டிரம்ப் படத்தையும் பகிர்ந்துள்ளனர்.

US Revokes 85 000 Visas Since January Trump Tightens Rules on H-1B Indian Expats might hit hard

அமெரிக்கா சொல்வது என்ன!

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் மேலும் கூறுகையில், "ரத்து செய்யப்பட்ட விசாக்களில் 8,000க்கும் மேற்பட்டவை மாணவர்களுக்குச் சொந்தமான விசாக்கள்.. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், திருட்டு மற்றும் தாக்குதல் போன்ற குற்றங்கள் காரணமாகவே விசாக்களை ரத்து செய்துள்ளோம். கிட்டத்தட்ட பாதி விசாக்கள் இந்த காரணத்திற்காகவே ரத்து செய்யப்பட்டுள்ளது" என்றார். அதேநேரம் மற்ற விசாக்கள் எதற்காக ரத்து செய்யப்பட்டன என்ற தகவலை அவர் பகிரவில்லை.

அதேபோல பயங்கரவாதத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறி அமெரிக்கா சில விசாக்களை ரத்து செய்துள்ளதாகத் தெரிகிறது. உதாரணமாக இஸ்ரேல் காசா மோதலில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்த சர்வதேச மாணவர்கள் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளன. அதேபோல தீவிர வலதுசாரியான சார்லி கிர்க்கின் கொலையைக் கொண்டாடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட சிலரின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடரும்

டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை இப்போது நிறுத்தாதாம். வரும் காலங்களிலும் அமெரிக்காவில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டினரையும் கண்காணிப்பிலேயே வைத்திருக்கிறது. விசா என்பது உரிமை இல்லை சலுகை என்றும் உள்ளூர் விதிகளைப் பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டிரம்ப் வந்த பிறகு விசா ரூல்ஸ் கடுமையாக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் தான் டிரம்ப் நிர்வாகம் ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தையும் உயர்த்தி இருந்தார். இதனால் அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஹெச்-1பி விசா பொதுவாகவே இந்தியர்களுக்கே அதிகம் கிடைக்கும் நிலையில், இந்தியர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+