உக்ரைனில் அதிகரிக்கும் ரஷ்ய உளவாளிகள்.. ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டால் அடுத்து என்ன? அமெரிக்கா பரபர தகவல்
வாஷிங்டன்: உக்ரைன் நாட்டில் 2ஆவது வாரமாகப் போர் உக்கிரமாகத் தொடர்ந்து வரும் சூழலில், அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல ரஷ்யா போட்டுள்ள திட்டங்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் எல்லையில் ஜன. மாதம் முதலே ரஷ்யா தொடர்ந்து ராணுவத்தைக் குவித்து வந்தது. மேலும், உக்ரைன் எல்லைக்கு மிக அருகிலேயே போர்ப் பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தது.
இதனால், ஏற்கனவே அங்குப் பதற்றமான சூழல் உருவான நிலையில், கடந்த பிப். 24ஆம் தேதி முழு வீச்சிலான போரை ஆரம்பிப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். இதன் காரணமாக அங்குப் பதற்றம் மேலும் அதிகரித்தது,

உக்ரைன் போர்
இருப்பினும், ரஷ்ய ராணுவத்தைக் கண்டு அஞ்சாமல் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து துணிச்சலாகப் போராடி வருகிறது. இதன் காரணமாகப் போர் 12ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து ரஷ்யாவை உக்கிரமாக எதிர்த்தே வருகிறார். ஒருபோதும் ரஷ்யாவுக்கு எதிரான இந்தப் போரில் உக்ரைன் சரணடையாது என்றும் இதற்கெல்லாம் ரஷ்யா நிச்சயம் பதில் சொல்லியே தீர வேண்டும் என்றும் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாகத் தெரிவித்து வருகிறார்.

கொலை செய்ய சதி
இதனிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல ரஷ்ய ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஜெலன்ஸ்கியை கொன்றால் உக்ரைன் சரணடைந்துவிடும் என்பது ரஷ்யாவின் திட்டம். உக்ரைன் நாட்டில் ரஷ்ய உளவாளிகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாகவே மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகளும் தெரிவித்துள்ளன. இருப்பினும், ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத்தகட்ட திட்டங்களை உக்ரைன் சிறப்பாக வைத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அமைச்சர்
இது தொடர்பாக அமெரிக்கச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அளித்த பேட்டியில், "உக்ரைன் அதிபர், மற்றும் அவரது அமைச்சர்களின் தலைமை பண்பு மிகச் சிறப்பானதாக உள்ளது. அவர்கள் இந்த இக்கட்டான சூழலிலும் துணிச்சலான உக்ரைன் மக்களின் உருவகமாக இருந்துள்ளனர். நான் சமீபத்தில் தான் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுடன் பேசினேன்.

அடுத்தகட்ட திட்டம்
அவர்கள் அனைத்திற்கும் தாயாராகவே உள்ளனர். உக்ரைன் அதிபருக்கு எதாவது நேர்ந்தாலும் கூட அரசு தொடர்ந்து எவ்வித சிக்கலும் இல்லாமல் இயங்க தேவையான அனைத்து திட்டங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளனர். ரஷ்யா மீது அறிவிக்கப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளால் முன்னணி நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவில் இருந்து வெளியேறி வருகிறது. இதனால் ரஷ்யாவுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். ரஷ்யா உடனடியாக இந்தப் போரை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
Recommended Video

3 முறை சதி முறியடிப்பு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் தொடங்கியதில் இருந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்யக் குறைந்தது முன்று முயற்சிகள் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் கூட அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல ரஷ்ய உளவுத் துறை போட்டிருந்த திட்டத்தைக் கடைசி நேரத்தில் உக்ரைன் அதிகாரிகள் முறியடித்ததாக உக்ரைன் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
-
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி












Click it and Unblock the Notifications