காசு இல்லைப்பா.. கைவிரித்த டிரம்பால் அமெரிக்காவில் 1000க்கும் அதிக விமானங்கள் ரத்து.. பயணிகள் அவதி
வாஷிங்டன்: உலகின் பெரும் வல்லரசு நாடாக உள்ள அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்பின் அரசு முடங்கி உள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் நிதி முடக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலானவர்கள் விடுமுறையில் சென்றுள்ளனர். இதனால் நேற்றைய தினம் மட்டும் 1,000க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி பொறுப்பேற்றார். அன்று முதல் சீர்த்திருத்தம் என்ற பெயரில் அவர் பல்வேறு அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இதில் சில உத்தரவுகள் அமெரிக்காவுக்கு சாதகமாக பார்க்கப்படும் அதேவேளையில் ஒரு சில உத்தரவுகள் அமெரிக்காவுக்கு பின்விளைவை ஏற்படுத்தி உள்ளது.

பிற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட அதிகப்படியான வரியால் அமெரிக்காவில் தற்போது பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும் தற்போது அமெரிக் அதிபர் டொனால்ட் டிரம்பின் அரசு முடங்கி உள்ளது.
அமெரிக்காவை எடுத்து கொண்டால் அரசு செலவுக்கான நிதியை விடுவிப்பதில் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் வேண்டும். அந்த வகையில் தற்போது அடுத்த நிதியாண்டுக்கு தேவையான நிதியை விடுவிப்பதில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி மற்றும் முன்னாள் அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் இடையே இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இதனால் அரசு நிதி விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் நிதி முடக்கம் தொடங்கியது. தற்போது ஒரு மாதத்தை கடந்தும் நிலைமை சரியாகவில்லை. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் விடுப்பில் சென்றுள்ளனர். இன்னும் சிலர் ஊதியமின்றி பணியாற்றி வருகின்றனர்.
அமெரிக்காவில் நிதி முடக்கத்தால் 6.70 லட்சம் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் உள்ளதாகவும், 7.30 லட்சம் பேர் ஊதியமின்றி பணிபுரிவதாக சொல்லப்படுகிறது. ஊழியர்கள் பற்றாக்குறையால் பல்வேறு அரசு துறைகளின் செயல்பாடுகள் முடங்கி உள்ளது. ஆனால் டிரம்ப் இதனை கருத்தில் கொள்ளாமல் உள்ளார். அமெரிக்காவில் அவ்வப்போது இப்படி அரசு முடங்கும் என்பதால் டிரம்ப் அதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் உள்ளார்.
இந்நிலையில் தான் தற்போது விமான சேவைகள் அமெரிக்காவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மட்டும் 1,000க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்பட 40 விமான நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விமான கட்டுப்பாட்டாளர்களுக்கு சம்பளம் செல்லாத நிலையில் ஏராளமானவர்கள் லீவில் சென்றுள்ளனர். இதனால் தான் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு விமான நிலையங்களில் குறைந்த அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அட்லாண்டா, டல்லாஸ், டென்வர், சார்லோட் மற்றும் வாஷிங்டன் டிசி விமான நிலையங்களில் அதிகப்படியான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்டா, அமெரிக்கன், சவுத்வெஸ்ட் போன்ற முக்கிய விமான நிறுவனங்கள் தங்களின் சேவையை அதிகளவில் நிறுத்தி உள்ளன.
இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. விமானங்கள் ரத்தால் பலரும் விமான நிலையங்களில் காத்திருக்கின்றனர். மேலும் பலரும் விமான பயணங்களை தவிர்த்து கார்களில் அமெரிக்காவுக்குள் பயணித்து வருகின்றனர். தற்போது வரை அமெரிக்காவின் மொத்த விமான சேவையில் 10 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த அரசு முடக்கத்தில் இருந்து மீண்டு வராவிட்டால் அடுத்த வாரம் நிலைமை இன்னும் மோசமாகும். அடுத்த வாரமும் இதே நிலை தொடரும் பட்சத்தில் நாட்டில் 15 முதல் 20 சதவீத விமான சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இது வெறும் பொதுமக்களை மட்டுமின்றி அமெரிக்க அரசின் வருமானத்தையும் பாதிக்கும். அதுமட்டுமின்றி சரக்கு ஏற்றுமதியிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் அமெரிக்காவில் சரக்கு பரிமாற்றம் என்பது 50 சதவீதம் வரை பயணிகள் விமானங்கள் வழியாக நகர்கிறது. இதனால் டிரம்புக்கு பெரிய அளவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications