Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ரூ.1,57,86,47,19,00,000!" சட்டவிரோத வரியாக வசூலித்த ஒவ்வொரு டாலரையும் திரும்ப தரும் டிரம்ப்! பேரிடி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா தான் வசூலித்த வரிகளை எல்லாம் திரும்பத் தர வேண்டி உள்ளது. இந்த வரிகள் எப்படித் திரும்பத் தரப்படும். யாருக்கு எல்லாம் ரீபண்ட் கிடைக்கும் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

உலக நாடுகள் மீது டிரம்ப் கடந்தாண்டு டிரம்ப் இஷ்டத்திற்கு வரிகளை விதித்தார். நட்பு நாடுகள், அண்டை நாடுகள் என யாரையும் டிரம்ப் விடவில்லை. இதனால் சர்வதேச அளவில் பதற்றமான சூழலே உருவானது. சர்வதேச வர்த்தகத்தையும் இது கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

US Tariff Return all countries will get their refund What does Supreme court verdict means

அதிகாரம் இல்லை

அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்ப்பிற்கு இந்த வரிகளை விதிக்கும் அதிகாரம் இல்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறிவிட்டது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 9 நீதிபதிகள் இருக்கும் சூழலில், 6-3 என்ற விகிதத்தில் டிரம்ப்பிற்கு எதிராக இந்தத் தீர்ப்பு வந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த நீதிபதிகளில் 6 பேர் பழமைவாத கொள்கை கொண்டவர்களாகவே கருதப்படுகிறார்கள். அவர்களே டிரம்ப்பிற்கு எதிராகத் தீர்ப்பளித்துள்ளனர்.

அதாவது சர்வதேச அவசரக்காலப் பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் விதிக்கப்பட்ட வரிகள் சட்டவிரோதம் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் எமர்ஜென்சி காலத்தின் கீழ் மட்டுமே அதிபரால் பொருளாதாரத்தை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது எனச் சொல்லப்பட்டுள்ளது.

175 பில்லியன்

இதனால் அமெரிக்கா வசூலித்த 130 முதல் 175 பில்லியன் டாலர் (ரூ.1,57,86,47,19,00,000) நிதி சட்டவிரோதமாக உள்ளது. இந்தத் தொகையை அமெரிக்கா சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் திரும்பத் தர வேண்டிய சூழலில் இருக்கிறது. ஏற்கனவே இது தொடர்பாகப் பல நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்ததுள்ளன. அதேநேரம் பணத்தைத் திரும்பப் பெறுவது அவ்வளவு ஒன்றும் ஈஸியானது இல்லை. ஏகப்பட்ட சட்டச் சிக்கல்கள் நிறைந்துள்ளன.

இந்தத் தொகை ஆட்டோமெடிக்காக திரும்பத் தரப்படாது. இந்த விவகாரத்தைப் பொறுப்பு கீழ் நீதிமன்றங்கள் மற்றும் கூட்டாட்சி துறைகள் கவனிக்கும். இறக்குமதியாளர்கள் சட்ட வழிகள் மூலம் ரீபண்ட் பெற வேண்டும். $130 பில்லியன் முதல் $175 பில்லியன் வரை அமெரிக்கா ரீபண்ட் தர வேண்டி இருக்கும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் ரீபண்ட் பிராசஸ் முடிய 5 ஆண்டுகள் வரையிலும் கூட ஆகலாம் என எச்சரித்துள்ளார்.

விளக்கம்

இவ்வளவு தொகை அமெரிக்காவால் உடனடியாக ரெடி செய்ய முடியுமா எனப் பலரும் சந்தேகம் எழுப்பிய நிலையில், இது தொடர்பாக அமெரிக்க கருவூள அமைச்சர் ஸ்காட் பெஸ்ஸன்ட் விளக்கமளித்தார். ரீபண்ட் பிராசஸ் சிக்கலானது என்றும் அதில் பல சட்டச் சிக்கல்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ரீபண்ட் விகாரம் முடியச் சில ஆண்டுகள் கூட ஆகும் என்றும் அதேநேரம் ரீபண்ட் தொகையைச் சமாளிக்கத் தேவையான பண் அமெரிக்கக் கருவூலத்திடம் இருப்பதாகவும் ஸ்காட் பெஸ்ஸன்ட் கூறினார்.

யாருக்குக் கிடைக்காது

இந்த IEEPA கீழ் செலுத்தப்பட்ட அவசரக்கால வரிகள் மட்டுமே பணத்தைத் திரும்பப் பெறத் தகுதியுடையவை. பிரிவு 232 (எஃகு/அலுமினியம்) மற்றும் பிரிவு 301 (சீனா வர்த்தகம்) கீழ் உள்ள துறை சார்ந்த வரிகள் இதற்குத் தகுதியற்றவை. அவை இன்னுமே முழுமையாக அமலில் உள்ளன. பொதுவாகச் சுங்கத்திற்கு வரியைச் செலுத்திய Importer of Record நிறுவனத்துக்கே இந்த ரீபண்ட் செல்லும்!

இந்த வரியால் அமெரிக்காவில் பொருட்கள் விலை அதிகரித்து இருந்தது. அமெரிக்க மக்கள் தான் இந்தக் கூடுதல் வரியைச் செலுத்த வேண்டி இருந்தது. இருப்பினும், அந்தத் தொகை எல்லாம் ரீபண்ட் கிடைக்காது என அமெரிக்கச் சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+