Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டிரம்ப் வரி செல்லாது".. அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வாதாடி வென்ற இந்திய வம்சாவளி.. யார் இந்த நீல் கட்யால்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒவ்வொரு நாடுகளுக்கும் அதிகப்படியான வரிகளை விதித்தார். இதனை எதிர்த்து அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் டொனால்ட் டிரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த வரிகள் செல்லாது. வரி விதிக்கும் உரிமை அதிபருக்கு கிடையாது. நாடாளுமன்றத்துக்கு தான் உள்ளது என்று தீர்ப்பு வழங்கியது. இதனால் உலக நாடுகள் ஹேப்பியான நிலையில் இந்த வழக்கு வெற்றி பெற இந்திய வம்சாவளி வழக்கறிஞர் நீல் கட்யால் முக்கிய பங்காற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த நீல் கட்யால் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி பதவியேற்றார். அவர் 13 மாத அதிபர் பதவியை நிறைவு செய்துள்ளார். இந்த காலக்கட்டத்தில் டிரம்ப் தனது எதிரியான சீனா முதல் நட்பு நாடுகளான இந்தியா, பிரிட்டன் உள்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கும், சின்ன சின்ன நாடுகளையும் விடாமல் பரஸ்பர வரிகளை விதித்தார்.

us-tariffs-who-is-neal-katyal-how-he-played-major-role-against-donald-trump-tariffs-case-details

நம் நாட்டுக்கு டிரம்ப் மொத்தம் 50 சதவீத வரிகளை விதித்தார். இதில் வர்த்தக ஒப்பந்தம் விஷயத்தில் 7 சதவீத வரியை குறைத்தார். அதன்பிறகு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நம் நாடு நிறுத்தும் என்று கூறி அதற்கு விதிக்கப்பட்ட 25 சதவீத வரியையும் டிரம்ப் நீக்கினார். இதனால் நம் நாடு 18 சதவீத வரிகளுடன் அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தது.

வரி விதித்தது செல்லாது

இதற்கிடையே தான் டிரம்பின் வரி விதிப்புக்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. பல்வேறு அமைப்புகள் சார்பில் இந்த வழக்குகள் தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவுகளை வழங்கி உள்ளது.

டிரம்ப் பரஸ்பர வரியை விதிக்க 1977ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 'அவசரக்கால பொருளாதார அதிகாரம்' சட்டத்தை பயன்படுத்தி இருந்தார். ஆனால் இந்த சட்டம் வர்த்தகத்தை ஒழுங்குப்படுத்த மட்டும்தான் கொண்டுவரப்பட்டது என்று கூறிய உச்சநீதிமன்றம் இந்த சட்டத்தை பயன்படுத்தி அதிபருக்கு வரி விதிக்கும் அதிகாரம் இல்லை.

அதிபரோ, துணை அதிபரோ நேரடியாக வரியை போட முடியாது. மாறாக, நாடாளுமன்றம்தான் வரியை விதிக்க முடியும் எனக்கூறிய உச்சநீதிமன்றம் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்று அதிரடியாக உத்தரவிட்டது.

இந்திய வம்சாவளி

இதனால் உலக நாடுகள் ஹேப்பியாகி உள்ளன. இந்த வழக்கில் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளை செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட முக்கியமான வழக்கறிஞராக இருந்தவர் இந்தியா வம்சாவளியை சேர்ந்த நீல் கட்யால்.

இவர் இந்த வழக்கில் சிறு வணிக நிறுவனங்கள் சார்பில் ஆஜராகி டிரம்பின் வரி விதிப்புக்கு எதிராக வாதம் வைத்திருந்தார். தற்போது அவரது வாதம் வெற்றி பெற்று டிரம்ப் விதித்த வரி செல்லாது என்று அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாய் டாக்டர் - தந்தை இன்ஜினியர்

இந்த நீல் கட்யால் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம். நீட் கட்யாலின் தாயும், தந்தையும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள். அவரது தாயார் குழந்தை நல மருத்துவராகவும், தந்தை இன்ஜினியராகவும் இருந்தனர்.

1970 ம் ஆண்டில் பிறந்த நீட் கட்யாலுக்கு இப்போது வயது 56 வயதாகும். இவர் யேல் சட்டப் பள்ளியில் சட்டப்படிப்பை முடித்தார். அதன்பிறகு அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கைடோ கலாப்ரெஸி மற்றும் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ஸ்டீபன் ஜி. பிரேயர் ஆகியோருக்கு கீழ் பணியாற்றினார்.

ஒபாமா கொடுத்த பதவி

பிறகு 1998-1999 காலகட்டத்தில் நீதித்துறையின் துணை அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், சிறப்பு உதவியாளராகவும் பணிபுரிந்தார். 2010ல் அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா இருந்தபோது ஆக்டிங் சொலிசிட்டர் ஜெனரலாக செயல்பட்டார்.

அமெரிக்க தலைமை நீதிபதியால் 2011 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மத்திய மேல்முறையீட்டு விதிகள் ஆலோசனைக் குழுவில் நீல் கட்யால் நியமிக்கப்பட்டார். அமெரிக்க நீதித்துறையின் உயரிய சிவில் விருதான ‛எட்மண்ட் ராண்டால்ஃப்' விருதை 2011ல் அட்டர்னி ஜெனரலிடமிருந்து பெற்றார்.

பேராசிரியராக...

மில்பேங்க் எல்லபி நிறுவனத்தின் வாஷிங்டன் டி.சி. அலுவலக பங்குதாரராகவும், அதன் வழக்கு மற்றும் நடுவர் குழுவில் உறுப்பினராகவும் நீல் கட்யால் உள்ளார். அவர் மேல்முறையீடு மற்றும் சிக்கலான வழக்குகளில் நிபுணராக செயல்பட்டு வருகிறது. அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் இதுவரை 54 வழக்குகளில் வாதிட்டு சாதனை படைத்துள்ளார்.

மேலும் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக சட்ட மையத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சட்டப் பேராசிரியராக பணியாற்றினார். இளம் வயதிேயே பதவி கால பாதுகாப்பையும், தலைமை பேராசிரியர் பதவியையும் பெற்றவர்களில் ஒருவராக மாறினார்.அதோடு ஹார்வர்டு மற்றும் யேல் சட்டப் பள்ளிகளிலும் அவ்வப்போது பேராசிரியராக பாடம் கற்பித்து வருகிறார்.

அறிக்கையில் ஹேப்பி

இந்த தீர்ப்புக்கு பிறகு நீல் கட்யால் வெளியிட்ட அறிக்கையில், ‛மற்றவர்கள் தயங்கியபோது சட்ட போராட்டத்துக்கு தலைமை தாங்கிய " லிபர்ட்டி ஜஸ்டிஸ் சென்டரின் தலைமைத்துவத்திற்கு நன்றி. அதிபர்களை விட அரசியலமைப்பு இன்னும் சக்தி வாய்ந்ததாக உள்ளதை இந்த உத்தரவு காட்டுகிறது.

அமெரிக்காவை பொறுத்தவரை வரி விதிப்பதற்கு நாடாளுமன்றத்துக்கு (காங்கிரஸ்) மட்டுமே அதிகாரம் உள்ளது. இந்த வழக்கு ஒரு குறிப்பிட்ட அதிபரைப் பற்றியதல்ல, 250 ஆண்டுகளாக நமது அரசாங்கத்தின் அடிப்படையாக இருக்கும் உச்ச நீதிமன்றம், நமது மிக அடிப்படையான உரிமைகளை பாதுகாப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்'' என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+