அமெரிக்கா செல்வது இனி கடினம்.. சர்க்கரை நோயாளி உள்பட யாருக்கெல்லாம் விசா கிடையாது.. டிரம்ப் ‛செக்’
வாஷிங்டன்: உடல்நல பாதிப்பு உள்ளவர்களுக்கான விசா விண்ணப்பங்களை ஏற்க கூடாது. அவர்களின் விசா விண்ணப்பங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் உலகம் முழுவதும் உள்ள தங்கள் நாட்டின் தூதரகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. எந்தெந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு விசா வழங்க கூடாது என்பது பற்றியும், இந்த உத்தரவின் பின்னணி குறித்தும் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள பணி அமெரிக்கர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதில் அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியாக உள்ளார். இதனை முன்வைத்து அவர் மேற்கொண்ட பிரசாரம் அமெரிக்கர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் அந்த வாக்குறுதியில் டிரம்ப் உறுதியாக உள்ளார்.

இதனால் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் மக்களை தடுக்க தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் எச் 1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி அறிவித்தார். வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணி செய்ய இந்த விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த எச் 1பி விசாவில் இந்தியர்கள் தான் அதிகம் பயனடைந்த நிலையில் டிரம்ப் செக் வைத்துள்ளார்.
இதன் அடுத்தக்கட்டமாக அதிபர் டிரம்பின் நிர்வாகம் இன்னொரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பில் உலகம் முழுவதும் உள்ள தூதரகங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் உடல்நல குறைபாடு உள்ளவர்களின் விசா விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்க கூடாது. அவர்களின் விசா விண்ணப்பங்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து தூதரகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள உத்தரவில், ‛‛சர்க்கரை நோய், இதயநோய், சுவாசக்கோளாறு,
புற்றுநோய், உடல்பருமன் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விசா விண்ணப்பங்களை ஏற்க கூடாது. இவர்களின் விசா விண்ணப்பங்களை ரத்து செய்ய வேண்டும். நோய் பாதிப்புடன் அமெரிக்கா வருவோரால் நம் நாட்டு மக்களின் வரிப்பணம் வீணடிக்க வாய்ப்புள்ளது. இதனால் இந்த நடைமுறையை பின்பற்றி விசாவிற்கு விண்ணப்பம் செய்வோரின் உடல்நலனை ஆராய்ந்து அனுமதி என்பது வழங்கப்பட வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
தற்போது பொதுமக்கள் பலரும் சர்க்கரை நோய், உடல் பருமன், இதயநோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் இனி அமெரிக்காவுக்கு செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications