"இந்தியா சீக்கிரம் வழிக்கு வரணும்.. இல்லைனா விளைவுகள் மோசமாக இருக்கும்!" அமெரிக்கா திமிர் பேச்சு
வாஷிங்டன்: இந்தியா மீது அமெரிக்கா 50% வரிகளை விதித்துள்ள நிலையில், இது இரு நாட்டு உறவைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதற்கிடையே இந்தியாவைச் சீண்டும் கருத்துகளைக் கூறியுள்ள வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, இந்தியா சீக்கிரம் வழிக்கு வர வேண்டும் என்றும் இல்லையென்றால் மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
இந்தியா மீது டிரம்ப் அரசு 50% வரியை விதித்துள்ளது. ரஷ்யக் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவதாலேயே உக்ரைன் போர் தொடர்வதாகச் சொல்லி டிரம்ப் நிர்வாகம் இந்த வரியை விதித்துள்ளது. இது இரு நாட்டு உறவைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த வரியால் இந்தியா அமெரிக்கா வர்த்தகமும் கடுமையாகப் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்கா
இதற்கிடையே வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ மீண்டும் இந்தியாவைச் சீண்டும் வகையிலான கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இந்தியா சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அது இந்தியாவுக்கு நல்லதாக இருக்காது என்று பீட்டர் நவரோ கூறியுள்ளார். மேலும், இந்தியாவின் செயல்பாடுகள் தனக்கு ஆத்திரம் அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவை வரி மகாராஜா என்றும் குறிப்பிட்டார்.
உலக நாடுகள்
தொடர்ந்து பேசிய அவர், "நான் சொல்வது முழுக்க முழுக்க உண்மை. அமெரிக்காவுக்கு எதிராக எந்தவொரு நாட்டையும் விட இந்தியா தான் அதிகபட்ச வரிகளை வசூலிக்கிறது. இது முற்றிலும் உண்மை. இந்த விவகாரத்தில் ஒரு முடிவு தேவைப்படுகிறது.. அதற்காகவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்கா உடன் மிக சிறந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இந்த நாடுகள் அமெரிக்காவுடன் நெருக்கமாகச் செயல்படுகின்றன. அமெரிக்காவால் தங்களுக்கு அதிக லாபம் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். மேலும், அமெரிக்க மார்க்கெட்டின் தேவையையும் அவர்கள் புரிந்து கொண்டனர்.
இந்தியா வழிக்கு வரும்
சீக்கிரமே ஒரு கட்டத்தில் இந்தியாவும் இதைப் புரிந்து கொண்டு வழிக்கு வரவேண்டும். இல்லையென்றால், அது ரஷ்யா மற்றும் சீனாவுடன் கைகோர்த்துச் செயல்படுவது என்றே அர்த்தம். இது இந்தியாவுக்கு நல்லதல்ல" என்றார்.
ரஷ்யா கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவது குறித்துப் பேசிய அவர், "உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் முன், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து பெரிய அளவில் எண்ணெய் வாங்கவில்லை.. ஆனால், மோதல் தொடங்கிய பிறகு சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி, அதைச் சுத்திகரித்து உலக நாடுகளுக்கு விற்று லாபம் பார்க்கிறது. ரஷ்ய சுத்திகரிப்பு ஆலைகளும் இந்திய மண்ணில் வந்து லாபம் ஈட்டுகின்றன. இதனால் உக்ரைன் போர் தொடர்கிறது. அமெரிக்காவும் வேறு வழியில்லாமல் போரைச் சமாளிக்கத் தனது நிதியைக் கொடுக்க வேண்டி இருக்கிறது" என்றார்.
சீனாவுக்கு வரி?
இப்போதும் ரஷ்ய எண்ணெய்யை இந்தியாவை விடச் சீனா அதிகமாக வாங்கி வருகிறது. இந்தியாவுக்கு வரி விதித்துள்ள அமெரிக்கா, சீனா மீது எந்தவொரு வரியையும் விதிக்காமல் இருக்கிறது. அதைக் கடந்த காலங்களிலேயே இந்தியா சுட்டிக்காட்டியிருந்தது. இருப்பினும், போருக்கு முன்பிருந்தே ரஷ்ய எண்ணெய்யைச் சீனா வாங்குவதால் அவர்களுக்கு வரி விதிக்க தேவையில்லை என வினோதமான விளக்கத்தை அமெரிக்கா கூறியது.
இது குறித்த கேள்விக்கு பீட்டர் நவரோ, "நாம் இங்கு ஒரு மெல்லிய கோட்டில் நடக்கிறோம். முதலில் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும். அது போர் முடிந்து அமைதி திரும்பக் காரணமாக இருக்கும். அதேபோல ஐரோப்பாவும் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும். சீனாவை பொறுத்தவரை ஏற்கனவே அதிக வரி விதித்திருக்கிறோம். அமெரிக்க மக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் அவர்களைப் பாதுகாக்கப் பேச்சுவார்த்தை நடத்துவதில் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்" என்று பட்டும் படாமல் மட்டும் பதிலளித்தார்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications