"மர்ம பொருள்.." வெள்ளை மாளிகையில் இருந்து எகிறி ஓடிய அதிகாரிகள்! இது எப்படி உள்ள வந்துச்சு! கலக்கம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் திடீரென மர்ம பொருள் கண்டறியப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் தான் அதிபர் மாளிகை இருக்கிறது. வெள்ளை மாளிகை என்று அழைக்கப்படும் இங்கு இருந்தபடி தான் அதிபர் தனது பணிகளைக் கவனிப்பார். அதிபர் தனது குடும்பத்துடன் வெள்ளை மாளிகையிலேயே தங்கலாம்.
அதிபரின் ஊழியர்கள், முக்கிய அதிகாரிகள் என அனைவருமே இங்கே தான் இருப்பார்கள். அதேபோல அனைத்து உலக தலைவர்களும் அமெரிக்க அதிபரை இந்த இடத்தில் வைத்துத் தான் சந்திப்பார்கள்.

மர்ம பொருள்: இதனால் அங்கே எப்போதும் உச்சக்கட்ட பாதுகாப்பு இருக்கும். இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வெள்ளை மாளிகையில் சந்தேகத்திற்கிடமான ஒரு பொருளை அதிபருக்குப் பாதுகாப்பு வழங்கும் சீக்ரெட் சர்வீஸ் கண்டுபிடித்துள்ளது. அது எந்த பொருள் எனத் தெரியாத நிலையில், பாதுகாப்பு கருதி உடனடியாக அங்கு இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக அதிகாரிகள் இப்போது தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் சிலர் கூறுகையில், "அங்கே அதிபர் மாளிகையில் திடீரென ஒரு மர்ம பொருளை அதிகாரிகள் பார்த்துள்ளனர். அதைச் சோதனை செய்ததில் வெள்ளை நிறத்தில் பவுடரை போல இருந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அங்கிருந்த அனைவரும் பாதுகாப்பு கருதி உடனடியாக வெளியேற்றப்பட்டனர். முதற்கட்ட சோதனையில் அது கோக்கைன் எனத் தெரிய வந்தது" என்று தெரிவித்தார்.
விசாரணை: இது தொடர்பாக சீக்ரெட் சர்வீஸ் பிரிவின் செய்தித் தொடர்பாளர் அந்தோனி குக்லீல்மி கூறுகையில், "இந்த வெள்ளை பவுடர் எப்படி வெள்ளை மாளிகைக்குள் வந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அது என்ன என்பதை உறுதி செய்ய டெஸ்டிகிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அங்கு யாருக்கும் ஆபத்து இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே மீண்டும் அந்த குறிப்பிட்ட இடத்தில் அதிகாரிகள் அனுமதிக்கப்பட்டனர்" என்றார்.
மேலும், இந்தச் சம்பவம் நடந்த போது அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இல்லை என்றும் குக்லீல்மி தெரிவித்தார். இருப்பினும், இதனால் மிகப் பெரிய பாதுகாப்பு அலர்ட் ஏற்பட்டதால் அங்கிருந்து அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த பொருள் என்னவாக இருக்கும் என்பது குறித்து முதற்கட்ட சோதனையில் தங்களுக்கு ஒரு ஐடியா கிடைத்துள்ளதாகத் தெரிவித்த குக்லீல்மி, அது எப்படி வெள்ளை மாளிகைக்குள் வந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
என்ன நடந்தது: அதேநேரம் அந்தப் பொருள் எங்கே கண்டுபிடிக்கப்பட்டது, அது எப்படி பேக் செய்யப்பட்டு இருந்தது என்பது குறித்து தகவல்களைப் பகிர்ந்து கொள்ள குக்லீல்மி மறுத்துவிட்டார். சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் வழக்கம் போலச் சோதனை செய்த போதை அதைக் கண்டுபிடித்தாக அவர் தெரிவித்தார். அமெரிக்க நேரப்படி இரவு 8.49 மணிக்கு இது குறித்த தகவல் வாஷிங்டன் தீயணைப்புத் துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடையே நடந்த உரையாடலில் அது கோகைன் ஹைட்ரோகுளோரைடாக இருப்பதாக அவர்கள் சொல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இருப்பினும் சீக்ரெட் சர்வீஸ் செய்தித் தொடர்பாளர் குக்லீல்மி அது கோக்கைனா இல்லையா என எதையும் சொல்லவில்லை. இந்த பொருளை எந்தளவுக்குக் கைப்பற்றினர் என்று சொல்லவில்லை என்றாலும் கூட அது மிகவும் குறைவாகவே இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications