அமெரிக்காவில் அவசரநிலை அறிவிப்பு.. 6 கோடிக்கும் அதிகமானோர் அவதி! ஆனால் இதுக்கு டிரம்ப் காரணமில்லை
வாஷிங்டன்: பருவநிலை மாற்றம் காரணமாக இப்போது மோசமான வானிலை நிகழ்வுகள் என்பது அடிக்கடி நடக்கத் தொடங்கியுள்ளது. அப்படியொரு மோசமான சூழலைத் தான் அமெரிக்கா இப்போது எதிர்கொண்டுள்ளது. இதற்காக அங்கே திடீரென 6 மாகாணங்களில் எமர்ஜென்சி நிலையும் கூட அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
புவி வெப்பமடைவது உள்ளிட்ட காரணங்களால் பூமியில் பல்வேறு மாற்றங்கள் நடக்கிறது. முன்பு மோசமான வானிலை நிகழ்வுகள் என்பது அரிதாகவே இருந்த நிலையில், இப்போது அது அடிக்கடி நடக்கும் ஒன்றாக மாறியிருக்கிறது.

வானிலை:
அதன்படி ஒரு மோசமான வானிலை நிகழ்வைத் தான் இப்போது அமெரிக்கா எதிர்கொண்டுள்ளது. அங்கு இப்போது பல்வேறு மாகாணங்களிலும் வெப்பநிலை சமீப காலங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. அதீத காற்று வீசும் நிலையில், பனிப்பொழிவும் கூடவே சேர்ந்து கொள்ளப் பல பகுதிகளில் அங்குச் சூழல் மிக மோசமான நிலையில் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பனிப்பொழிவு மோசமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
குறிப்பாக கன்சாஸ், மேற்கு நெப்ராஸ்கா மற்றும் இந்தியானா ஆகிய மாகாணங்களில் நிலைமை மோசமாக இருக்கிறது. அங்குள்ள சாலைகளைப் பனிக்கட்டிகள் முழுமையாக மூடியுள்ள நிலையில், வாகனங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சாலையில் பொதுமக்களுக்கு உதவப் பல மாகாணங்களில் அந்நாட்டின் நேஷ்னல் கார்ட் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அவசரநிலை அறிவிப்பு
அங்கு கன்சாஸ் மற்றும் மிசோரிக்கு இடையேயான சாலைகளில் தான் நிலைமை மோசமாக இருக்கிறது. பல இடங்களில் 20 செமீ மேல் பனிக்கட்டிகள் இருக்கும் நிலையில், 72 கிமீ வேகத்தில் பனிப்புயலும் வீசுகிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கடுமையான குளிர், பனிப்பொழிவு மற்றும் புயல் காற்றால் அங்கு மிக மோசமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு 7 மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது.
மேலும், அங்கு வர்ஜீனியா, இண்டியானா, கன்சாஸ் மற்றும் கென்டக்கி ஆகிய பகுதிகளில் சில மணி நேரத்தில் இதனால் பல நூறு கார் விபத்துக்கள் பதிவாகியுள்ளன. பலருக்கு உயிருக்கே ஆபத்தான அளவுக்குக் கூட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக மிசோரியில் பனிப்பொழிவால் குறைந்தது 600 வாகன ஓட்டிகள் சாலையிலேயே சிக்கியுள்ளனர். அவர்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணிகளும் முடங்கிவிடப்பட்டுள்ளன.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் அங்கு ரயில் மற்றும் விமானச் சேவையும் முடங்கியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று 40 ரயில்கள் அங்கே ரத்தாகியுள்ளன. சிக்காகோ, நியூயார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில்களும் கூட ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த பனிப்பொழிவால் சுமார் 200+ விமானங்களும் கூட ரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. கடும் குளிரைக் கருத்தில் கொண்டு அங்கு இந்தியானா, மேரிலாந்து, வர்ஜீனியா மற்றும் கென்டக்கி மாகாணங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடும் குளிரால் அமெரிக்காவில் சுமார் 6.3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த சில நாட்கள் வரை இந்த வானிலை தொடரும் என்று அங்குள்ள வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், அதற்கு ஏற்றவாறு தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications