அடடா.. ஏழரை மாதமாக கர்ப்பத்தை அறியாத பெண்.. அடுத்த 48 மணிநேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. பரபரத்த அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் கர்ப்பம் ஆனதை அறியாமல் ஏழரை மாதமாக ஒரு பெண் இருந்த நிலையில் அவர் கர்ப்பிணி என்பதை அறிந்த அடுத்த 48 மணிநேரத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

அமெரிக்காவில் உள்ள ஒமாஹாவில் ஆசிரியையாக இருப்பவர் பெய்டன் ஸ்டோவர். இவர் அதிக நேரம் பணி செய்து வந்துள்ளார். மேலும் நின்று கொண்டே பாடம் எடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தான் சமீபத்தில் அவருக்கு அவ்வப்போது உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. இது சாதாரணமானது என நினைத்த அவர் ஓய்வு எடுத்துவிட்டு பணிக்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

கர்ப்பிணி என அறிவித்த டாக்டர்கள்

கர்ப்பிணி என அறிவித்த டாக்டர்கள்

இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு அதிகப்படியான உடல் சோர்வு ஏற்பட்டது. மேலும் கால்களில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்றார். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது அவர் கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் பரிசோதனையை சரியாக செய்தீர்களா? நான் கர்ப்பிணியாக இருக்க வாய்ப்பு இல்லை. மீண்டும் சோதனை செய்யுங்கள் என பதற்றமாக கூறினார்.

காதலால் கர்ப்பம்

காதலால் கர்ப்பம்

இதனை கேட்ட டாக்டர்கள் உறுதியாக அவரிடம் கூறினார்கள். நீங்கள் கர்ப்பிணியாக இருக்கிறீர்கள் என்று. அப்போது தான் அவர் தனக்கு சமீபகாலமாக வந்த உடல்சோர்வு என்பது கர்ப்பிணியானதன் அடையாளம் என்பதும், வயிறு பெரிதாக இல்லாதது உள்பட கர்ப்பகால பிற அறிகுறிகளை அவருக்கு இல்லாமல் இருந்ததையும் உணர்ந்தார். மேலும் கர்ப்பத்துக்கான காரணம் குறித்து டாக்டர்கள் கேட்டபோது, அவர் டேவிஸ் கோஸ்டர்ஸ் என்பவரை காதலித்ததும், அவர் தான் காரணம் என்பதும் தெரியவந்தது. துவக்கத்தில் கர்ப்பத்தை கண்டு காதல் ஜோடி பயந்தாலும் அதன்பிறகு அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பிற பிரச்சனைகள்

பிற பிரச்சனைகள்

இதற்கிடையே தான் ஆசிரியை பெய்டன் ஸ்டோவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிற சோதனைகளின் முடிவுகள் வந்தன. கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் அவருக்கு பிரச்சனை இருப்பது தெரியவந்தது. அதோடு ப்ரீக்ளாம்ப்சியா எனும் கர்ப்பகால பிரச்சனை இருப்பதும் தெரியவந்தது. இது குழந்தை பிறப்பில் சிக்கலை ஏற்படுத்துவதோடு, உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும் எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சையில் குழந்தை

அறுவை சிகிச்சையில் குழந்தை


இதனால் உடனடியாக குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பெய்டன் ஸ்டோவருக்கும், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பெய்டன் ஸ்டோவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. கர்ப்பமானதை ஏழரை மாதம் பெய்டன் ஸ்டோவர் அறியாமல் இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கர்ப்பத்தை உறுதி செய்த அடுத்த 48 மணிநேரத்தில் குழந்தை பிறந்தது.

10 வாரங்களுக்கு முன்பே..

10 வாரங்களுக்கு முன்பே..

மேலும் இந்த குழந்தை சுமார் 10 வாரங்களுக்கு அதாவது இரண்டரை மாதத்துக்கு முன்பே பிறந்ததும், குழந்தை 1 கிலோ 800 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். குழந்தையின் தாயும் நலமாக உள்ளார். இதுபற்றி குழந்தையின் தாய் பெய்டன் ஸ்டோவர் கூறுகையில், ‛‛நானும், டேவிசும் குழந்தை பெற்று கொள்ள விரும்பினோம். ஆனால் திட்டமிட்டதை விட குழந்தை சீக்கிரமாக பிறந்துள்ளது. இருப்பினும் மகிழ்ச்சியடைகிறோம்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+