வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடடே சூப்பர்! அமெரிக்கா வரை சென்ற மதிய உணவு திட்டம்.. பெருகும் ஆதரவு! பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவிலேயே முதல்முறையாக கலிபோர்னியா மாகாணத்தில் மிகவும் புரட்சிகரமான திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் காமராஜர் கொண்டு வந்த மிக முக்கிய திட்டங்களில் ஒன்று மதிய உணவுத் திட்டம். பள்ளிகளில் மாணவர்கள் வருகையை அதிகப்படுத்த இத்திட்டத்தைக் கொண்டு வந்தார் காமராஜர்.

இந்தத் திட்டத்தால் அரசுக்குப் பெரிய நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்தனர். இருப்பினும், அதைத் தாண்டி மாணவர் நலன் கருதி காமராஜர் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

 தந்தையை மிஞ்சும் தனயன்! தேசிய அளவில் கவனம் பெற்ற முதலமைச்சர் ஸ்டாலினின் காலை உணவு திட்டம்.. பின்னணி! தந்தையை மிஞ்சும் தனயன்! தேசிய அளவில் கவனம் பெற்ற முதலமைச்சர் ஸ்டாலினின் காலை உணவு திட்டம்.. பின்னணி!

 சத்துணவுத் திட்டம்

சத்துணவுத் திட்டம்

இத்திட்டத்திற்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாட்டில் மிகப் பெரிய கல்வி புரட்சியை ஏற்படுத்தியதில் மதிய உணவுத் திட்டத்திற்கு மகத்தான பங்களிப்பு உள்ளது. அதன் பின்னர், வந்த ஆட்சியாளர்களும் இந்தத் திட்டத்தின் மகத்துவத்தை உணர்ந்து தொடர்ந்தனர். எம்ஜிஆர் ஆட்சியில் மதிய உணவுத் திட்டம் மேலும் விரிவடைந்து சத்துணவுத் திட்டமாக மாறியது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

அதன் பின்னர் திமுக ஆட்சியில் சத்துணவில் முட்டையும் சேர்த்து வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வராத சூழலில் சத்துணவுக்கு திட்டத்திற்கான பொருட்களை மாணவர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது. இதனிடையே சமீபத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கத் தமிழக அரசு இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

 அமெரிக்கா

அமெரிக்கா

இந்நிலையில் அமெரிக்காவில் இதேபோன்ற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் முதல்முறையாக கலிபோர்னியா மாகாணத்தில் அனைத்து பள்ளிகளிலும் காலை மற்றும் மதிய உணவுகள் இலவசமாக வழங்கும் திட்டம் நேற்று முதல் கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்குள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

 மிக சரியான நேரம்

மிக சரியான நேரம்

கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது. இதனால் அங்கு உணவுக்கான செலவுகள் பல மடங்கு அதிகரித்து உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு போதிய உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் கலிபோர்னியா மாகாணம் மகத்தான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

 சத்தான உணவு

சத்தான உணவு

மாநிலத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச உணவை வழங்கும் முதல் மாகாணம் கலிபோர்னியா ஆகும். இதற்குத் தேவையான சட்ட திருத்தத்தை கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் கடந்த ஜூலை மாதம் கையெழுத்திட்டு இருந்தார். மாணவர்களுக்கு முறையான சத்தான உணவு கிடைப்பதை இது உறுதி செய்கிறது. இதை அங்குள்ள பலரும் பாராட்டி வருகின்றனர்.

 காலை மற்றும் மதிய உணவு

காலை மற்றும் மதிய உணவு

இதன் மூலம் மதிய உணவு தேவைப்படும் குழந்தைகளுக்கு மட்டுமின்றி கலிபோர்னியாவில் படிக்கும் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் சத்தான காலை மற்றும் மதிய உணவு கிடைப்பது உறுதியாகிறது. அதிக நிதி தேவைப்படும் பள்ளிகளுக்கு அங்குள்ள பெடரல் அரசு நிதி கொடுக்கும். இத்திட்டத்திற்கான செலவை கலிபோர்னியா சட்டமன்றமே தேவையான நிதியை ஒதுக்குகிறது.

English summary
All California public school students will have access to free nutritious meals this school year: (அமெரிக்காவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணழு திட்டம்) Mid day meal scheme introduced in USA's California for the first time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X