அமெரிக்காவில்.. தடுப்பூசி போட்டவர்கள் மாஸ்க் அணிய வேண்டாம்.. பைடன் அரசு கொடுத்த ஸ்பெஷல் ஆபர்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இனி பொது இடங்களில் மாஸ்க் கட்டாயமாக அணிய வேண்டிய அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளை கடந்த பின்பும் ஆட்டம் காட்டி வருகிறது.

கொரோனா படுத்தியபாடு
உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் கடந்த ஆண்டு கொரோனா பாடாய்படுத்தி விட்டது. இப்போதும் அதிக தொற்று பாதிப்பில் அமெரிக்காவே முதலிடம் பிடித்துள்ளது. அங்கு இதுவரை மொத்தம் 32,927,091 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.587,384 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து 25,521,913 பேர் குணமடைந்துள்ளனர்.

கூடுதல் தளர்வுகள்
அங்கு 6,817,794 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர தொற்று பரவல் காரணமாக அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டது. தொற்றை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கும் போடப்பட்டது. இதன் பயணமாக அங்கு தற்போது கொரோனா தொற்று குறைந்து விட்டது.
தொற்று தொடர்ந்து குறைந்து வருவதால் ஏராளமான தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மாஸ்க் அணிய வேண்டும்
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இனி பொது இடங்களில் மாஸ்க் கட்டாயமாக அணிய வேண்டிய அவசியமில்லை என அமெரிக்கா சுகாதார கட்டமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே வேளையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கூட்டமான இடங்களில் செல்ல நேர்ந்தால் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தியேட்டர்கள் போன்ற உள் அரங்கு கூடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போதும் மாஸ்க் அணிய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

30% பேருக்கு தடுப்பூசி
ஃபைசர்-பயோஎன்டெக் அல்லது மாடர்னா தடுப்பூசிகளின் இரண்டாவது அளவைப் பெற்ற இரண்டு வாரங்களுக்குப் பிறகு அல்லது ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி பெற்ற இரண்டு வாரங்களுக்குப் பிறகு தனிநபர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக கருதப்படுவார்கள். இவர்களுக்கே மாஸ்க் தளர்வுகள் பொருந்தும் என்று அமெரிக்க சுகாதார கட்டமைப்பு கூறியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அமெரிக்க மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 30% பேர் முழுமையாக தடுப்பூசி இரண்டு டோஸை போட்டுள்ளனர். 42% க்கும் அதிகமானோர் குறைந்தது ஒரு டோஸை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications