இந்தியாவுடன் மோதல்.. கனடா மீது கடுங்கோபத்தில் அமெரிக்கா? வந்து விழுந்த கேள்வி! வெள்ளை மாளிகை நறுக்
வாஷிங்டன்: காலிஸ்தான் பயங்கரவாதி கொலை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் சர்ரேவில் வைத்துக் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார்.

அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அங்குள்ள குருத்துவாரா முன்பு அவரை சுட்டுத் தள்ளியுள்ளனர். இந்த காலிஸ்தான் பயங்கரவாதி கொலை சம்பவம் இந்தியா கனடா உறவை மிக மோசமாகப் பாதித்துள்ளது.
இந்தியா கனடா உறவு: இதில் முதலில் கனடாவில் இருந்த இந்தியத் தூதர் ஒருவர் வெளியேற்றப்பட்ட நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கனடா தூதரும் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதேபோல இரு நாடுகளும் தங்கள் குடிமக்களுக்கு வார்னிங் மெசேஜ்யையும் கொடுத்ததும். அனைத்திற்கும் மேலாகக் கனடா நாட்டினருக்கான விசா நடவடிக்கையை இந்தியா நிறுத்தி வைத்தது. இருப்பினும், இந்தியா தனது குற்றச்சாட்டை மறுத்தே வருகிறது.
இவ்வளவு நடந்த பிறகும் மீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் நேற்று இந்தியாவைக் குற்றஞ்சாட்டியுள்ளார். நம்பகமான இடத்தில் இருந்து தகவல் வந்ததாகவும் அதன் அடிப்படையிலேயே இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். இருந்த போதிலும் ட்ரூடோ இதுவரை எந்தவொரு ஆதாரத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா: இந்தச் சம்பவத்தால் கனடாவுக்கும் அதன் அண்டை நாடான அமெரிக்காவுக்கும் சிக்கல் எழுந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தால் அமெரிக்கா கனடா உறவில் எந்தவொரு சிக்கலும் இல்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக ஜேக் சல்லிவன் மேலும் கூறுகையில், "அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் உலா வருகிறது. இருப்பினும், இதை நான் திட்டவட்டமாக நிராகரிக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் போஸ்ட் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதாவது அமெரிக்கா உட்பட அதன் நட்பு நாடுகளும் இந்தியாவைக் கண்டிக்க வேண்டும் எனக் கனடா விரும்பியதாகவும் இருப்பினும் அமெரிக்கா அதை மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதனால் அமெரிக்கா கனடா நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்தத் தகவலைத் தான் அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பின்னணியில் என்ன நடந்தது: கடந்த ஜூன் மாதம் கனடாவின் சர்ரே பகுதியில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து அப்போதே ஃபைவ் ஐஸ் உளவுத்துறை கூட்டமைப்பின் மூத்த அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஃபைவ் ஐஸ் என்பது ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து, அமெரிக்காவை உள்ளடக்கிய உளவு கூட்டணியாகும்.
தனிப்பட்ட முறையில் அவர்கள் சந்தேகம் தெரிவித்த போதிலும், டெல்லி ஜி20 மாநாடு வரை இது குறித்து பொதுவெளியில் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இது குறித்து முதல்முறையாக பேசியிருந்தார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சம்பவத்தில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பினார். இருப்பினும், இந்தியா இந்த குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்தது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications