நிரம்பியது கழிப்பறை.. ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இப்படியொரு பஞ்சாயத்தா!
வாஷிங்டன்: ஈரான் அருகே அமெரிக்காவின் முக்கிய போர்க்கப்பல் நின்றிருக்கும் சூழலில், திடீரென கழிப்பறை நிரம்பியதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. யுஎஸ்எஸ் கப்பலில் கழிப்பறை பயன்படுத்துவதற்கு 45 நிமிடங்கள் வரை நேரம் ஏற்படுவதால், ராணுவ வீரர்கள் பலரும் சிக்கலில் மாட்டி இருக்கின்றனர்.
ஜனவரி 3ஆம் தேதி வெனிசூலா மீதான தாக்குதலின் போது முக்கியப் பங்கு வகித்த கப்பல் USS Gerald R. Ford. உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலாகும். இதன் மூலமாக விமானங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வெனிசூலா அதிபர் நிக்கோலாஸ் மடூரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்தக் கப்பல் ஈரான் அருகில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

ஈரான் மீது அமெரிக்கா விரைவில் ராணுவ நடவடிக்கையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழலில், USS Gerald R. Ford போர்க் கப்பலில் எதிர்பாரா வகையில் ஒரு பிரச்சனை உருவாகி இருக்கிறது. 13 மில்லியன் டாலர் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த USS Gerald R. Ford போர்க் கப்பலில் 75க்கும் அதிகமான விமானங்களை ஏற்றிச் செல்ல முடியும். அதேபோல் அதி நவீன ஆயுதங்களை பொருத்த முடியும்.
மொத்தமாக இந்தக் கப்பல் 333 மீட்டர் நீளம் கொண்டது. இதன் காரணமாக சுமார் 4,500 முதல் 6 ஆயிரம் வீரர்களை கப்பலில் தங்க வைக்க முடியும். ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். அப்படி ஒப்பந்தம் செய்யாவிட்டால், ஈரான் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் டிரம்ப் மிரட்டி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் 2 முக்கியமான கப்பல்களான ஆபிரகாம் லிங்கன் மற்றும் யுஎஸ்எஸ் கப்பல்களை ஈரான் அருகே நகர்த்தி இருக்கிறார். இப்படியொரு அசாதாரணமான சூழலில், யுஎஸ்எஸ் கப்பலில் கழிப்பறை நிரம்பியதால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ராணுவ வீரர்கள் சிக்கலில் சிக்கி இருக்கின்றனர். இதனால் ராணுவ நடவடிக்கையே தடைபடலாம் என்று சொல்லப்படுகிறது.
2017ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படைக்கு வழங்கப்பட்ட யுஎஸ்எஸ் கப்பலில் தொடக்கம் முதலே கழிப்பறை பிரச்சனைகளை உள்ளது. தற்போது இந்தக் கப்பலில் சுமார் 4,500 பேர் இருப்பதால் கழிப்பறை பிரச்சனை அதிகரித்துள்ளது. கடற்படை வீரர்கள் கழிப்பறையைப் பயன்படுத்த 45 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி இருப்பதாக ஒரு புகார் வந்துள்ளது.
இந்தக் கப்பலில் விமானம் மற்றும் சுற்றுலா கப்பல்களில் பயன்படுத்தப்படும் கழிவு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஏதாவது ஒரு வால்வில் பழுது ஏற்பட்டால் கூட, அதே பகுதியில் உள்ள அனைத்து கழிப்பறைகளையும் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும். ஆசிட் வாஷ் செய்து மட்டுமே தற்காலிகமாக பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.
அப்படி தீர்வு காண ஒருமுறை நடவடிக்கை எடுத்தால், ரூ.3.63 கோடி செலவு ஏற்படும் என்று தெரிகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு முதல் இப்படி ஆசிட் வாஷ் முறையில் 10 முறை சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது யுஎஸ்எஸ் கப்பல் கடலில் நிற்பதால், இதற்கும் வாய்ப்புகள் இல்லை. இப்படியான சூழல், கப்பலில் உள்ள வெவ்வேறு குழுக்கள் மத்தியில் கழிப்பறை பிரச்சனை பதற்றத்தை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications