வார்னிங்! ’எல் நினோ’ காலநிலை மாற்றத்தால் பெரும் ஆபத்து ஏற்படுமாம்.. WHO சொல்வது என்ன?
வாஷிங்டன்: 'எல் நினோ' எனும் காலநிலை மாற்றம் காரணமாக டெங்கு, ஜிகா மற்றும் சிக்கன்குனியா போன்ற பாதிப்புகள் அதிகரிக்கலாம் எனவும் கொரோனாவை விட பயங்கரமான வைரஸ்கள் எல்லாம் நம்மை தாக்க வாய்ப்பு உள்ளதாகவும் உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டெட்ரேஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்தார்.
பருவ நிலை மாற்றம் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது. இன்னும் சில வருடங்களில் புவி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயர்ந்தால், தவிர்க்க முடியாத வேகத்தில் தீவிர காலநிலை பேரிடர்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். அது மட்டும் இன்றி கடுமையான வறட்சி, தாங்க முடியாத வெப்பம் என மனிதர்கள் மற்றும் சூழல் அமைப்புகளுக்கும் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி நோய்களின் தாக்கமும் அதிகரிக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறும் கருத்தாக உள்ளது. இந்த நிலையில், 'எல் நினோ' எனும் காலநிலை மாற்றம் காரணமாக டெங்கு, ஜிகா மற்றும் சிக்கன்குனியா போன்ற பாதிப்புகள் அதிகரிக்கலாம் எனவும் கொரோனாவை விட பயங்கரமான வைரஸ்கள் எல்லாம் நம்மை தாக்க வாய்ப்பு உள்ளதாகவும் உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் தெரிவித்தார்.
பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் எல் நினோ பாதிப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறியதாவது:- எல்நினோ நிகழ்வுகளால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள உலக சுகாதார மையம் தயாராகி வருகிறது. காலநிலை மாற்றம் காரணமாக டெங்கு , ஜிகா மற்றும் சிக்குன் குனியா போன்ற வைரஸ்கள் அதிகரிக்கக் கூடும்.
கால நிலை மாற்றத்தின் விளைவுள் மற்றும் கொசுக்களின் இனப்பெருக்கம் ஆகியவை இந்த நோய் பரவலுக்கு வழிவகுக்கும். கால நிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டு, பொருளாதார சிக்கலும் ஏற்படும்" என்றார். சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் உலுக்கியது.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் ஒட்டுமொத்த உலகத்திலும் ஒரு சேர பாதிப்பை ஏற்படுத்தி பெரும் பொருளாதார சிக்கலையும் உயிரிழப்பையும் ஏற்படுத்திய கொரோனா தற்போதுதான் மெல்ல மெல்ல அகன்று வருகிறது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்கும் இந்த சூழலில் தற்போது கால நிலை மாற்றத்தால் கொரோனாவை விட அதிக ஆபத்து கொண்ட பயங்கரமான வைரஸ்கள் தாக்கலாம் என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications