இந்தியாவுக்கான வரியை குறைக்கும் அமெரிக்கா.. அதிரடியாக அறிவித்த டொனால்ட் டிரம்ப்.. பின்னணி இதுதான்
வாஷிங்டன்: ‛‛ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவை இந்தியா குறைத்துள்ளது. தற்போது ரஷ்யா கச்சா எண்ணெய் விஷயத்தில் அதிகப்படியான வரிகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் இந்தியாவுக்கான வரியை குறைக்க போகிறோம்'' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் என்பவரை டொனால்ட் டிரம்ப் நியமித்தார். இவர் இன்று பதவியேற்று கொண்டார். வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் அவர் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பதவி ஏற்றார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவு பற்றி பேசினார். மேலும் இருநாடுகள் இடையே நடக்கும் வர்த்தக பேச்சுவார்த்தை, வரி விவகாரம் பற்றி விளக்கம் அளித்தார்.இதுபற்றி டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:
‛‛இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்கிறது. நியாயமான ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை மேம்படுத்த காத்திருக்கிறேன். இந்த உறவை செர்ஜியோ வலுப்படுத்துவார் என்று நம்புகிறோம். எரிசக்தி ஏற்றுமதி, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றை பாதுகாக்க அவர் உதவுவார். அமெரிக்க தொழில்கள், தொழில்நுட்பங்கள் சார்ந்த முதலீடுகளை ஊக்குவிப்பார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரி என்பது அதிகமாக உள்ளது. தற்போது இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்து உள்ளது. ஆம், நாங்கள் இந்தியாவுக்கான வரிகளை குறைக்கப்போகிறோம். ஒரு கட்டத்தில் இந்த வரி குறைக்கப்படும்'' என்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு மொத்தம் 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். இந்த வரிகள் 2 கட்டங்களாக தலா 25 சதவீத வரி என்ற அடிப்படையில் நடைமுறைக்கு வந்தது. முதலில் அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். அதன்பிறகு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி 25 சதவீத வரிகளை விதித்தார்.
இதற்கு முக்கிய காரணம் உக்ரைன் - ரஷ்யா போர் தான். அதாவது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது. போரை நிறுத்தும்படி ரஷ்யாவிடம் தொடர்ந்து அமெரிக்கா பேசி வருகிறது. ஆனால் ரஷ்ய அதிபர் புதின் கேட்கவில்லை. இதனால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க வேண்டாம் என்று டிரம்ப் கூறினார். மேலும் இதனால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் மீதான போருக்கு உதவுதாக டிரம்ப் நம் நாட்டை குற்றம்சாட்டி 25 சதவீத வரியை விதித்தார்.
அதன்பிறகு கடந்த சில வாரங்களாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துவிட்டதாக டிரம்பே கூறினார். இதனை நம் நாடு மறுத்தது. நம் நாட்டை எடுத்து கொண்டால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கவில்லை என்று கூறி வருகிறது. ஆனால் டிரம்போ, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துள்ளது என்று கூறி வருகிறார்.
நம் நாட்டின் தேவையில் 36 முதல் 38 சதவீத கச்சா எண்ணெய் என்பது ரஷ்யாவிடம் இருந்து தான் வாங்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து பொருளாதார தடைகளை விதித்துள்ளதால் புதிய ஒப்பந்தங்களை சமீபத்தில் நிறுத்தியது. இந்நிலையில் தான் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக விதிக்கப்பட்ட வரியை குறைப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். இது நம் நாட்டுக்கு நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications