4 டீமை இறக்கிய டிரம்ப்! கிரீன் கார்டு & H-1B விசாவில் இருப்போர் கண்காணிப்பு! இந்தியர்களுக்கு சிக்கல்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் இப்போது இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனைகளைத் தீவிரமாக்கியுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா செல்வோர் என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்யக்கூடாது என்பது குறித்த அறிவுறுத்தல்களை அங்குள்ள வழக்கறிஞர்கள் வழங்கியுள்ளனர். மேலும், இந்தியர்கள் அங்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் நாம் பார்க்கலாம்.

அதிபர் டிரம்ப் வெளிநாட்டினர் அமெரிக்காவுக்கு வருவதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டவிரோத குடியேற்றம் மட்டுமின்றி சட்டப்பூர்வ குடியேற்றத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் டிரம்பின் நிர்வாகம் கடந்த சில வாரங்களாகவே நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Donald Trump America India

அச்சத்தில் இந்தியர்கள்

கிரீன் கார்டு வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் நிரந்தரமாக அமெரிக்காவில் தங்க முடியாது என்று அந்நாட்டின் துணைத் அதிபர் ஜே.டி.வான்ஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். இது அங்குள்ள பல லட்சம் இந்தியர்களுக்குப் பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கடந்த சில வாரங்களாக அமெரிக்கக் குடியேற்ற விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கிரீன் கார்டு மற்றும் H-1B விசா வைத்திருக்கும் இந்தியர்கள் இதனால் அச்சத்தில் உள்ளனர்.

கிரீன் கார்டு மற்றும் H-1B விசா வைத்திருப்போர் தங்களின் தாய் நாடு அல்லது வேறு நாட்டிற்கு சென்றுவிட்டுத் திரும்பும்போது பல சிக்கல்களைச் சந்திக்கிறார்கள். ஏர்போர்ட்டிலேயே வைத்துக் குடியேற்ற அதிகாரிகள் மணிக்கணக்கில் விசாரணை செய்து அழுத்தம் தருகிறார்களாம். இதற்கிடையே இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது வெளிநாட்டில் இருந்து திரும்புவோரை மட்டும் 4 டீம்கள் கண்காணித்து வருகிறதாம்.

தனித்தனியாகக் கண்காணிக்கும் 4 டீம்

அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைகள் (USCIS), குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE), உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS), சுங்கம் & எல்லைப் பாதுகாப்புத் துறை (CBP) ஆகிய 4 துறைகள் வெளிநாட்டில் இருந்து திரும்புவோரைக் கண்காணிக்கிறதாம்.

அமெரிக்காவில் பல லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டு மற்றும் H-1B, F-1 விசாக்களை கொண்டு வசித்து வருகிறார்கள். அவர்கள் இப்போது அமெரிக்கா செல்லும்போது கடுமையான விசாரணைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாத வரை எதற்கும் கவலைப்படத் தேவையில்லை என்றபோதிலும், இதுபோன்ற அதீத சோதனைகள் மற்றும் விசாரணைகளால் கடும் மன அழுத்தம் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

அறிவுறுத்தல்

மேலும், 43 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்த டிரமப் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அதன் பிறகே கண்காணிப்புகள் தீவிரமடைந்துள்ளன. இந்த பட்டியலில் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பூட்டான் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பட்டியலில் இந்தியா இல்லை என்றாலும் கூட இந்தியர்கள் அமெரிக்கா செல்லும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்கும்படி அமெரிக்க வழக்கறிஞர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

கைவசம் இருக்க வேண்டியவை

கிரீன் கார்டு, H-1B மற்றும் F-1 விசா வைத்திருப்போர் வெளிநாடு செல்லும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்கும்படி அமெரிக்க சட்ட வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

  1. பயணியின் சொந்த நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.
  2. கிரீன் கார்டு (படிவம் I-551) கையில் இருக்க வேண்டும். கிரீன் கார்டு ஆவணம் காலாவதியாகக்கூடாது.
  3. கிரீன் கார்டு இல்லாதவர்கள் உரிய H-1B அல்லது F-1 விசாக்களை வைத்திருக்க வேண்டும்.
  4. ஓராண்டுக்கு மேல் வெளிநாடு சென்றிருப்போர் மீண்டும் அமெரிக்கா திரும்பும்போது தேவையான மறு நுழைவு அனுமதி டாக்குமெண்ட்டுகளை வைத்திருக்க வேண்டும்.
  5. வேலைவாய்ப்பு கடிதத்தை வைத்திருங்கள்
  6. முந்தைய ஒரு வருடத்திற்கான W-2 படிவம் மற்றும் பெடரல் வருமான வரி செலுத்தியதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
  7. கடைசி 3 மாதங்களுக்கான பே சிலிப் (Payslip) அல்லது வருமான சான்று கைவசம் இருக்க வேண்டும்.
  8. மாணவர் விசாவில் வந்திருப்போர் எவ்வளவு காலம் படிப்பு இருக்கிறது என்பதைக் குறிப்பிடும் வகையில் கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் வழங்கிய கடிதத்தை வைத்திருக்க வேண்டும்.
  9. அமெரிக்க வங்கிக் கணக்குகளின் ஆவணங்கள் கையில் இருக்க வேண்டும்.
  10. அமெரிக்க ஓட்டுநர் உரிமத்தையும் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.

மனதில் வைத்திருக்க வேண்டியவை

மேலும், நீண்ட காலம் வெளிநாட்டில் தங்கிவிட்டு அமெரிக்கா திரும்புவோர் சில விஷயங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

  1. நீண்ட காலத்திற்குப் பிறகு அமெரிக்கா திரும்புவோர், அமெரிக்க அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பல மணி நேரம் உட்கார்ந்து பதில் சொல்ல வேண்டி இருக்கும். அதற்கு மன ரீதியாகத் தயாராக இருக்கும்படி அறிவுறுத்துகிறார்கள்.
  2. இது ஒட்டுமொத்த செயல்முறைக்கும் அமைதியாக ஒத்துழைப்பு வழங்குமாறு குறிப்பிடுகிறார்கள்.
  3. இரண்டாம் நிலை விசாரணையை முடிக்க 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆகலாம் என்பதால் அதற்கும் ரெடியாக இருக்க வேண்டும்.
  4. அமெரிக்காவிற்கு வெளியே ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தங்கியிருந்தால் கூடுதல் சோதனைக்கு உள்ளாக்கப்படலாம்.
  5. உங்கள் கிரீன் கார்டு அல்லது விசாவை காலாவதியாக விட வேண்டாம். காலாவதி தேதிக்கு முன்பே புதுப்பித்து வைத்துக் கொள்ளவும்.
  6. ஒருவேளை கிரீன் கார்டு ரத்து செய்யப்பட்டாலும், குடிவரவு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஒரு வழி உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  7. மாணவர் விசாவின் கீழ் அமெரிக்காவில் கல்வியை முடித்து, அப்படியே H-1B பெற்றவர்கள் கூடுதல் விசாரணைக்கு உள்ளாக்கப்படலாம்.
  8. H-1B விசாவை நீடிக்க அல்லது புதுப்பிக்கக் கோரி விண்ணப்பித்து, இன்னும் விண்ணப்பம் பிராசஸ் செய்யப்படாமல் இருந்தால் அவர்களும் கூடுதல் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+