"5 பேரழிவுகள்.." மனித குலத்தையே மொத்தமாக அழித்துவிடும்.. எச்சரிக்கும் ஆய்வாளர்கள்.. பகீர் பின்னணி
வாஷிங்டன்: மனிதக் குலம் ஐந்து பேரழிவுகளை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இவை மீண்டும் சரி செய்யவே முடியாத பாதிப்புகள் என்பதால் இது அழிவின் தொடக்கமாக மாறலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த பூமி என்பது மனிதர்களுக்கு மட்டுமானது இல்லை. செடி, கொடிகள், மரங்கள், விலங்குகள் எனப் பூமியில் வாழும் பல லட்சம் உயிரினங்களில் நாம் ஒரு பகுதி அவ்வளவுதான். ஆனால், இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என நாம் நினைத்துக் கொள்கிறோம்.

இதனால் வளர்ச்சி என்ற பெயரில் நாம் செய்யும் பல விஷயங்கள் பூமியைக் கடுமையாகப் பாதிக்கிறது. இதில் பல பாதிப்புகளை நம்மால் சரி செய்ய முடியும் என்றாலும் கூட சரி செய்யவே முடியாத 5 பேரழிவுகளும் பூமியில் ஏற்படத் தொடங்கி உள்ளதாக எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக மனிதக்குலம் முன்பு எப்போதும் இல்லாத மிகப் பெரிய ஆபத்தை எதிர்கொள்கிறது. துபாயில் சமீபத்தில் நடந்த ஐநா பருவநிலை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் ஆய்வாளர்கள் நமது பூமி எதிர்கொள்ளும் 26 முக்கிய பிரச்சினைகளை விவரித்துள்ளனர். அதில் குறிப்பாக 5 பிரச்சினைகள் பூதாகரமாகத் தொடங்கியுள்ளதாகவும் இதனால் பேரழிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.
முதல் பேரழிவு: முதலில் தென் துருவத்தில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகுவது. புவி தொடர்ந்து வெப்ப மயமாகி வரும் நிலையில், பனிக்கட்டிகள் உருகுவதும் அதிகரித்துள்ளது. இது கடல் மட்டத்தை உயர்த்தும் அபாயம் இருக்கிறது. இதே வெபத்தில் பனிக்கட்டிகள் உருகி வந்தால் 2100ஆம் ஆண்டில் கடல் மட்டம் 2 மீட்டர் வரை அதிகரித்துவிடும். இதனால் உலகின் பல முக்கிய நகரங்களில் கடலில் மூழ்கும் அபாயம் இருக்கிறது. இது சுமார் 50 கோடி பேரை ஆபத்தில் தள்ளும்
இரண்டாவது பேரழிவு: அடுத்து பவளப்பாறைகள் அழிப்பது. இதுவும் புவி வெப்ப மயமாதல் காரணமாகவே நடக்கிறது. பவளப்பாறைகள் அழிவது என்பது அதை மட்டும் நாம் இழக்கிறோம் என்று பொருள் இல்லை. இதனால் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளை மொத்தமாகச் சீர்குலைகிறது. இதனால் கடலில் இருக்கும் மீன்கள் அழியும் அபாயம் இருக்கிறது.
மூன்றாவது பேரழிவு: பூமியில் பல இடங்களில் பெர்மாஃப்ரோஸ்ட் இருக்கிறது. இந்த பெர்மாஃப்ரோஸ்ட் என்பது மண் அல்லது நீருக்கு அடியில் உள்ள வண்டல் மண் ஆகும்.. இவை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாகப் பூஜ்ஜிய டிகிரிக்கு கீழே இருக்கும்: இவை புவி வெப்ப மயமாதல் காரணமாக உருகும் நிலையில் இருந்து வெளியே வரும்.. இது க்ரீன் ஹவுஸ் கேஸ்களை வெளியேற்றும். இதனால் பருவநிலை மாற்றம் மட்டுமின்றி, புது நோய்ப் பாதிப்புகளும் பரவும் அபாயம் இருக்கிறது.
அடுத்து பெருங்கடல் நீரோட்டம் சீர்குலைவது. பூமி சூடாவதால் வடக்கு அட்லாண்டிக் பகுதியில் வழக்கமான நீரோட்டம் பாதிக்கப்படும் நிலையில், அது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் கடும் குளிர் உட்பட மிக மோசமான வானிலையை ஏற்படுத்தும். ஐந்தாவது பாதிப்பு AMOC- அதாவது அட்லாண்டிக் மெரிடியனல் ஓவர்டர்னிங் சர்குலேஷன் இது அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் நீரோட்டத்தைக் குறிக்கிறது. இதனால் புவி வெப்பமயமாகும் நிலையில், உலகளவில் வறட்சி மற்றும் வெள்ளம் அடிக்கடி ஏற்படும் அபாயத்தை இது ஏற்படுத்துகிறது.
மனித குலமே அழியும்: இந்த 5 விஷயங்களில் எதாவது ஒன்று நமது கையை மீறிச் சென்றாலும் கூட இது பல மோசமான பாதிப்புகளை உருவாக்கும். இவை அனைத்தும் மீண்டும் சரி செய்யவே முடியாத பாதிப்புகள் என்பதால் இது மனிதக் குலத்தையே அழிவின் பாதைக்கு இட்டுச் செல்லும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications