வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சீக்ரெட் மெசேஞ்.!" ஓரியன் விண்கலத்தில் நாசா அனுப்பிய ரகசிய தகவல்! மோர்ஸ் கோட்டில் பறந்த மெசேஞ்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நிலவுக்கு நாசா அனுப்பிய ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பியுள்ளது. இதற்கிடையே அந்த ஓரியன் விண்கலம் நிலவுக்குச் சுமந்து சென்ற சில சீக்ரெட் மெசேஞ்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் நாசா தான் அப்பல்லோ திட்டம் மூலம் மனிதர்களை முதல்முறையாக நிலவுக்கு அனுப்பியது. இந்த அப்பல்லோ சீரியஸில் பல விண்வெளி வீரர்களை அமெரிக்கா நிலவுக்கு அனுப்பியுள்ளது.

கடைசியாக நாசா 1972ஆம் ஆண்டில் அப்பல்லோ ராக்கெட்டில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது. அதன் பிறகு மனிதர்களை நாசா நிலவுக்கு அனுப்பாத நிலையில், இப்போது மீண்டும் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.

 சொல்லி அடிக்கும் நாசா... பூமிக்கு திரும்பும் ஓரியன் விண்கலம்! எங்கே விழும்? ஏன் முக்கியம் தெரியுமா சொல்லி அடிக்கும் நாசா... பூமிக்கு திரும்பும் ஓரியன் விண்கலம்! எங்கே விழும்? ஏன் முக்கியம் தெரியுமா

நாசா

நாசா

இதற்காகத் தொடங்கப்பட்ட திட்டம் தான் ஆர்டெமிஸ் விண்வெளி திட்டம். இதன் மூலம் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் மனிதர்கள் நிலவுக்குச் செல்லும் ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை செலுத்தியது நாசா. முதலில் சோதனை அடிப்படையில் என்பதால், மனிதர்கள் இல்லாமலேயே இந்த ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை அனுப்பியிருந்தது நாசா. அதில் இருந்த ஓரியன் காப்சியூல், வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்து சில வாரங்கள் சுற்றிக் கொண்டிருந்தது. அந்த ஓரியன் காப்சியூல் மனிதர்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது என்றாலும் கூட இப்போது அதில் மனிதர்கள் யாரும் செல்லவில்லை.

 நிலவுக்கு மனிதர்கள்

நிலவுக்கு மனிதர்கள்

சில வாரங்கள் நிலவைச் சுற்றி வந்த ஓரியன் காப்சியூல், அங்கிருந்து பல முக்கிய டேட்டாக்களை சேகரித்து நாசாவுக்கு அனுப்பியது. அடுத்தாண்டு மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் போது, இந்த டேட்டா பயனுள்ளதாக இருக்கும் என்று நாசா கூறுகிறது. இந்தச் சூழலில் தான், கடந்த சில நாட்களுக்கு முன்பு நாசா அனுப்பிய இந்த விண்கலம் வெற்றிகரமாக மீண்டும் பூமிக்குத் திரும்பியது. இந்த ஆர்டெமிஸ் 1 திட்டம் வெற்றிகரமாக இருந்ததாகவே நாசா தெரிவித்துள்ளது. மெக்சிகோ அருகே பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஓரியன் விண்கலம் பத்திரமாக விழுந்தது.

 சீக்ரெட் மேசஞ்கள்

சீக்ரெட் மேசஞ்கள்

இந்த விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் யாரும் இல்லை என்றாலும் கூட, இது பல டன் எடையுள்ள முக்கிய அறிவியல் கருவிகளை எடுத்தே நிலவுக்குச் சென்றுள்ளது. இது அங்கிருக்கும் சூழல் குறித்த டேட்டாக்களை சேகரித்தது. இந்த சயின்ஸ் கருவிகளை மட்டும் ஓரியன் விண்கலம் எடுத்துச் செல்லவில்லை. அத்துடன் மறைத்து வைக்கப்பட்ட சில சீக்ரெட் மெசேஞ்களையும் கூட நாசா அனுப்பி வைத்துள்ளது. விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் போதெல்லாம் இதுபோன்ற சீக்ரெட் மெசேஞ்சை நாசா அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

 போட்டோக்கள்

போட்டோக்கள்

இந்த ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தில் விண்வெளி வீரர்கள் இருக்கும் காப்சியூலில்தான் இந்த சீக்ரெட் மெசேஞ்கள் இருந்துள்ளன. ஓரியனின் பைலட் இருக்கையின் வலதுபுறத்தில் உள்ள ஜன்னலுக்கு மேலே சில புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. மேலும், இத்திட்டத்திற்கு உதவிய ஐரோப்பிய நாடுகளின் நாட்டுக் குறியீடுகளையும் அந்த விண்கலம் எடுத்துச் சென்றது. விண்கலத்தின் ஐரோப்பிய தொகுதியை உருவாக்குவதில் பங்கேற்ற நாட்டின் குறியீடுகள் விமானியின் இருக்கைக்கு முன்னும், காலிஸ்டோ பேலோடின் கீழேயும் வைக்கப்பட்டன.

 மோர்ஸ் குறியீடு

மோர்ஸ் குறியீடு

மேலும், ஓரியன் திட்டத்தில் பணியாற்றியவரின் நினைவாக "சார்லி" என்ற சொல்லும் மோர்ஸ் குறியீடு முறையில் எடுத்துச் செல்லப்பட்டது. விண்கலத்தின் வலது பக்கத்தில், விமானிக்கு அடுத்ததாக உள்ள இருக்கையில், ஜன்னலுக்கு கீழே, "CBAGF" என்ற எழுத்துக்கள் இருந்தன. இவை "ஃப்ளை மீ டு தி மூன்" பாடலுக்கான இசைக் குறிப்புகளாகும். நாசா இதுவரை 17 அப்பல்லோ விண்கலம் மூலம் மனிதர்களை நிலவுக்கு அனுப்பியுள்ளது. அதன் நினைவாக 18 என்ற நம்பரையும் நிலவுக்கு அனுப்பியுள்ளது நாசா..!

நாசா

நாசா

விண்வெளி வீரர்கள் கடைசியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் வெற்றிகரமாக இறங்கினர்.. அதாவது 1972ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி அப்பல்லோ 17 ராக்கெட்டில் யூஜின் செர்னன் மற்றும் ஹாரிசன் ஷ்மிட் நிலவுக்குச் சென்றனர். அங்கு அவர்கள் மூன்று நாட்கள் டாரஸ்-லிட்ரோ பள்ளத்தாக்கில் ஆய்வு செய்தனர். அப்பல்லோ காலகட்டத்தில் மனிதர்கள் நிலவில் இருந்த அதிகபட்ச காலம் இதுதான். இதையடுத்து அவர்கள் அனைவரும் மீண்டும் பத்திரமாகப் பூமிக்கு அழைத்துவரப்பட்டனர். இப்போது சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே முயற்சியில் இறங்கியுள்ளது நாசா!

 அடுத்து என்ன

அடுத்து என்ன

இப்போது ஆர்ட்டெமிஸ் 1 வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், அடுத்தாண்டு தொடக்கத்தில் ஆர்டெமிஸ்-2 ராக்கெட் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்புகிறது நாசா. இவர்கள் நிலவில் தரையிறங்க மாட்டார்கள், சந்திரனைச் சுற்றி விண்வெளியில் சில நாட்கள் இருந்த பிறகு பூமிக்குத் திரும்புவார்கள். இது வெற்றிகரமாக இருந்தால் அடுத்து 2025இல் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது நாசா!.

English summary
Orion spacecraft carried few secret messages when it went to the moon: Nasa Sends secret messages in its Artemis-1 mission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X