அடிதூள்..! கூகுள் முதல் நீளும் லிஸ்ட்.. இப்போது யூடியூப் வேறு.. டெக் துறையில் கலக்கும் இந்தியர்கள்

உலகின் பல டாப் நிறுவனங்களின் தலைவர் பொறுப்பை இந்தியர்கள் அலங்கரிக்கின்றனர்.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: யூடியூப் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மட்டுமின்றி பல டாப் நிறுவனங்களின் தலைவர்களாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதைப் பார்க்கலாம்.

உலகெங்கும் இப்போது டெக் துறை மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது.. டெக் நிறுவனங்கள் தான் பல துறைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. இந்த டெக் துறையில் பல உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியாவே டாப் இடத்தில் இருக்கிறது.

மேலும், உலக பல டாப் டெக் நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் இந்தியர்களே நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடின உழைப்பு, மாறும் டிரெண்ட்களை துல்லியமாகக் கணிப்பது உள்ளிட்டவையே இதற்குக் காரணம்.

யூடியூப் சிஇஓ

யூடியூப் சிஇஓ

உலகிலேயே மிகப் பெரிய ஸ்ட்ரீமிங் தளமாக இருப்பது யூடியூப்.. ஒவ்வொரு நாளும் யூடியூப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. யூடியூப் நிறுவனத்தின் சிஇஓவாக சூசன் ஒஜிக்கி என்பவர் பணியாற்றி வந்தார்.. கடந்த 9 ஆண்டுகளாகவே இவர் தான் தலைமை பொறுப்பில் இருந்து வந்தார். அவர் இப்போது தலைமை பொறுப்பில் இருந்து விலகியுள்ள நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் என்பவர் இப்போது தலைமை பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மட்டுமின்றி அமெரிக்காவின் பல டாப் நிறுவனங்களுக்கு இந்தியர்கள் சிஇஓக்களாக உள்ளனர். அவர்கள் யார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

சுந்தர் பிச்சை- ஆல்பபெட்

சுந்தர் பிச்சை- ஆல்பபெட்

ஐஐடி-காரக்பூரில் பட்டம் பெற்ற சுந்தர் பிச்சை, கடந்த 2015ஆம் ஆண்டு கூகுளின் இணை நிறுவனர் லாரி பேஜுக்குப் பதிலாகக் கூகுளின் சிஇஓ ஆனார். அதைத் தொடர்ந்து 2020இல் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆனார். சுந்தர் பிச்சை கடந்த 1972 ஜூன் 10இல் சென்னையில் பிறந்தவர்.. கூகுள் க்ரோம், க்ரோம் ஓஎஸ் உருவாக்கும் தயாரிப்பு முயற்சிகளை இவர் வழிநடத்தினார்.. 2015 முதல் 2020 வரை மட்டும் கூகுளில் இவர் ஆண்டு சம்பளமாக 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 8,200 கோடி) பெற்றார்.

சத்யா நாதெல்லா- மைக்ரோசாப்ட்

சத்யா நாதெல்லா- மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இளம் பொறியாளராக 1992இல் இணைந்த நாதெல்லா, 2014இல் நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பேற்றார். மைக்ரோசாப்ட் ஆபிஸ், எக்ஸ்பாக்ஸ் லைவ் மற்றும் அஸூர் கிளவுட் பிளாட்ஃபார்ம் ஆகியவற்றில் அவர் வேலை செய்துள்ளார். தலைமை நிர்வாக அதிகாரி ஆன பிறகு, நாதெல்லா ஹேக்கத்தான்களை அறிமுகப்படுத்தினார் ஹைதராபாத்தில் பிறந்த சத்யா நாதெல்லா, மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பொறியியல் படித்தார். விஸ்கான்சின்-மில்வாக்கி பல்கலைக்கழகத்தில் எம்எஸ் மற்றும் சிகாகோ பல்கலைக்கழக பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ படித்தார்.

சாந்தனு நாராயண்- அடோப்

சாந்தனு நாராயண்- அடோப்

உலகின் டாப் எடிட்டிங் டூல் நிறுவனமான அடோப் நிறுவனத்தின் சிஇஓ, தலைவராக 2007 முதல் சாந்தனு நாராயண் இருந்து வருகிறார். இந்த பொறுப்பிற்கு வரும் முன், அவர் இரு ஆண்டுகள் அங்கு தலைமை இயக்க அதிகாரியாக இருந்தார். ஹைதராபாத்தில் உள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, நாராயண் உயர் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்த அவர், பிக்ட்ரா இன்க் என்ற நிறுவனத்தையும் தொடங்கினார்.. 1998இல், நாராயண் அடோப் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவராக பணியில் சேர்ந்தார்.

அரவிந்த் கிருஷ்ணா - ஐபிஎம்

அரவிந்த் கிருஷ்ணா - ஐபிஎம்

ஐஐடி-கான்பூர் பட்டதாரியான அரவிந்த் கிருஷ்ணா, 2020இல் ஐபிஎம் தொழில்நுட்ப நிறுவனத்தின் சிஇஓ ஆனார். அவர் 1990இல் ஐபிஎம்-இல் சேர்ந்தார். 2020க்கு முன், அவர் ஐபிஎம் நிறுவனத்தில் ஆராய்ச்சி இயக்குநராக இருந்தார். ரெட் ஹேட் என்ற நிறுவன்துதடன் ஐபிஎம் ஒரு சூப்பர் ஒப்பந்தத்தைப் போட்டது. ஐபிஎம் நிறுவனத்தின் மிகப் பெரிய ஒப்பந்தமான அதற்கு முக்கிய காரணமாக அரவிந்த் கிருஷ்ணா இருந்தார். கடந்த 2020இல் அவர் ஐபிஎம் தலைவரானார்.

ராஜ் சுப்ரமணியம், பெட்எக்ஸ்

ராஜ் சுப்ரமணியம், பெட்எக்ஸ்

ஐஐடி மும்பை பட்டதாரியான இவர் பெட்எக்ஸ்- இன் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் மார்ச் 29, 2022 அன்று நியமிக்கப்பட்டார். அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தில் இருக்கிறார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம், பெட்எக்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளைக் கவனித்து வந்தார்.

லீனா நாயர், அஞ்சலி சுட்

லீனா நாயர், அஞ்சலி சுட்

லீனா நாயர் டிசம்பர் 14, 2021 அன்று சேனல் நிறுவனத்தின் சிஇஓ ஆனார். அந்த நிறுவனத்தில் சிஇஓ பொறுப்பிற்கு வந்த முதல் முதல் பெண்ணாக இவர் ஆனார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த லீனா நாயர், லண்டன் யூனிலீவர் நிறுவனத்தின் ஹெச்ஆர் பிரிவில் தலைவராக இருந்தார். மெல்ல உயர்ந்து இந்த இடத்திற்குச் சென்றார்.

அதேபோல விமியோ என்ற வீடியோ தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அஞ்சலி சுட் நியமிக்கப்பட்டார். 2017ஆம் ஆண்டு முதல் அவர் இந்த பதவியில் இருந்து வருகிறார். விமியோவில் சேருவதற்கு முன்பு, சுட் அமேசான் மற்றும் டைம் வார்னரில் பணிபுரிந்தார். ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டம் பெற்றவர் ஆவர்.

லக்ஷ்மன் நரசிம்மன், ஸ்டார்பக்ஸ்

லக்ஷ்மன் நரசிம்மன், ஸ்டார்பக்ஸ்

உலக புகழ்பெற்ற காபி ஷாப் நிறுவனமான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சிஇஓவாக வரும் ஏப்ரல் மாதம் முதல் பதவிக்கு வர உள்ளார் லக்ஷ்மன் நரசிம்மன்.. இவர் முன்பு முன்பு பெப்சிகோவில் தலைமை வணிக அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். 2019 இல், அவர் ரெக்கிட் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். அந்த பதவிக்கு வந்த முதல் வெளிநாட்டவர் லக்ஷ்மன் நரசிம்மன் ஆவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+