அதிபராக முதல் 50 நாட்கள்... பைடன் எடுத்துள்ள அசத்தல் நடவடிக்கைகள்... குஷியில் அமெரிக்கர்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்று 50 நாட்கள் கடந்துள்ள நிலையில், பிரசாரத்தின்போது அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிபர் டிரம்ப் படுதோல்வி அடைந்தார். தேர்தலில் அதிபர் ஒருவர் தோல்வியடைவது 25 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.
அமெரிக்க அதிபராக பெரும் குழப்பங்களுக்குப் பின் கடந்த ஜனவரி 20ஆம் தேதி பைடன் பதவியேற்றார். அப்போது முதலே பல அதிரடி ஆக்ஷன் நடவடிக்கைகளை எவர் எடுத்து வருகிறார்.

Array
அதிபராக பதவியேற்றதும் டிரம்ப் அரசு அறிவித்திருந்த பல திட்டங்களை ரத்து செய்தார் பைடன். மெக்சிகோ நாட்டில் இருந்த முறைகேடாக அமெரிக்காவில் ஊடுருவுவதாகக் குற்றஞ்சாட்டிய அப்போதைய அதிபர் டிரம்ப், அதைத் தடுக்க எல்லை முழுவதும் சுவர் கட்டும் பணிகளைத் தொடங்கினார். ஆனால் இது முட்டாள்தனமான நடவடிக்கை என்று கூறிய பைடன், இந்த பணிகளுக்குத் தடை விதித்தார். அதேபோல சில குறிப்பிட்ட இஸ்லாமிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையையும் பைடன் நீக்கினார்.

உலக சுகாதார அமைப்பில் மீண்டும் அமெரிக்கா
அதேபோல கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு முறையாக எடுக்கவில்லை என்று டிரம்ப் குற்றஞ்சாட்டினார். மேலும் அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும் என்றும் அறிவித்திருந்தார், இதுதவிர பருவ நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் மேற்கொண்டிருந்த பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்தும் அமெரிக்கா வெளியேறும் என டிரம்ப் அறிவித்திருந்தார். இந்த இரு முடிவுகளையும் பைடன் திரும்பப் பெற்றார். உலக சுகாதார அமைப்புடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றும் என்றும் அவர் அறிவித்தார்.

100 நாட்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி
தேர்தல் பிரசாரத்தின்போது 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்படும் என அறிவித்திருந்தார். டிரம்ப் நிர்வாகம் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். பைடன் அதிபராகப் பொறுப்பேற்றதும் நாடு முழுவதும் புதிய தடுப்பூசி செலுத்தும் மையங்களையும் அவர் ஏற்படுத்தினார். இதன் மூலம் அதிக பேருக்கு தடுப்பூசியைச் செலுத்த முடிந்தது.

ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ஒரு லட்சம்
பைடன் தான் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்த மற்றொரு முக்கிய வாக்குறுதியையும் கடந்த வாரம் நிறைவேற்றினார். கொரோனா காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அப்படி கொரோனா பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 1,400 டாலர்கள்(இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்ச ரூபாய்) வழங்கும் அமெரிக்காவின் மிகப் பெரிய நிதியுதவி திட்டதிற்கும் பைடன் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார்.

சவுதிக்கு எதிராக நடவடிக்கை
சர்வதேச அளவிலும் பைடன் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். டிரம்ப் அரசு மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில் நடந்து வந்த உள்நாட்டுப் போருக்கு ஆதரவு அளித்திருந்தார். அந்த ஆதரவை பைடன் திரும்பப் பெற்றார். அதேபோல அமெரிக்க செய்தியாளர் கஷோகி கொல்லப்பட்டதற்கும் சவுதி இளவரசுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகவும் பைடன் அரசு தெரிவித்து. டிரமப் நிர்வாகம் சவுதி அரசுடன் நெருங்கிப் பழகிவந்த நிலையில், பைடன் அரசு சவுதிக்கு எதிராக சில நிலைப்பாடுகளை எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications