triangle of death: முகப்பருவை கிள்ளினால் இறப்பு கூட வரலாமாம்.. பெண்ணுக்கு நேர்ந்த கதியை பாருங்க
வாஷிங்டன்: முகப்பருவை கிள்ளினால் என்ன நடந்து விடும்? என்ற எண்ணம் நம் அனைவருக்கும் இருக்கும். ஆனால் முகப்பருவை கிள்ளிய பிறகு இறப்பு கூட வரலாம் என டாக்டர் எச்சரித்துள்ளார். அதோடு அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த டிக்டாக் பிரபலத்துக்கு நேர்ந்த கதி பற்றிய அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
நம்மில் பலரும் இளம் வயதில் முகத்தில் பரு வந்து இருக்கும். இது இயல்பான ஒன்று தான். ஆங்காங்கே வரும் சில பருக்களை அப்படியே விட்டால் அதுவே சரியாகிவிடும். பரு அதிகமானால் டாக்டரை சந்தித்து சிகிச்சை பெற்று கொள்வது நல்லது.

ஆனால் நம்மில் பலரும் பரு முகத்தை அசிங்கமாக்குகிறது என நினைத்து நம் கையாலேயே அதனை கிள்ளி உடைத்துவிடுவோம். இதில் வலி குறைவு என்பதால் பலரும் இப்படி செய்து வருகிறோம். ஆனால் இப்படி செய்வது பல பிரச்சனைகளை ஏற்படுத்துமாம். இது நம்மில் பலருக்கும் தெரியாது.
அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் முகப்பருவை கிள்ளி பெரிய சிக்கலில் மாட்டி உள்ளார். அதுபற்றி இங்கு பார்க்கலாம்.
அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்தவர் லிஷ் மேரி. இவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர். சமீபத்தில் அவருக்கு முகப்பரு ஒன்று வந்தது. நீர்க்கட்டி போல் முகப்பரு இருந்தது. மூக்கின் கீழ்பகுதியில் வாய்க்கு அருகே முகப்பரு இருந்தது. முகப்பரு தானே என அவர் அதனை தனது கையால் கிள்ளினார். அதன்பிறகு அவரது முகம், உதடு வீங்கியது.
அவரால் சரியாக சிரிக்க முடியவில்லை. சிரிக்கும்போது அவர் வலியை உணர்ந்தார். இதனால் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. 3 நாள் சிகிச்சைக்கு பிறகு அவர் இயல்பு நிலைக்கு வந்தார். இந்நிலையில் தான் அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்சனை பற்றி டாக்டர் முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நியூயார்க்கை சேர்ந்த தோல் டாக்டர் மார்க் ஸ்ட்ரோம் கூறுகையில், ‛‛இந்த பெண்ணுக்கு, முகத்தில் தோன்றிய பரு ‛மரணத்தின் முக்கோனம்' என்ற இடத்தில் ஏற்பட்டது. இது மூக்கு , வாய் மற்றும் கேவர்னஸ் சைனஸ் வழியாக மூளையுடன் நேரடியாக இணைக்கும் நரம்புகள் இருக்கும் இடமாகும். இந்த இடத்தில் உள்ள பருவை அவர் கிள்ளியதால் முகம் வீங்கி உள்ளது. இந்த இடம் மிகவும் முக்கியமான பகுதியாகும்.
இங்கு ஏற்படும் பாக்டீரியா தொற்று வேகமாக பரவலாம். இதில் இருக்கும் பாக்டீரியா ரத்த ஓட்டத்தின் மூலமாக மூளைக்கு செல்ல வாய்ப்புள்ளது. இதனால் கண்பார்வை இழப்பு, பக்கவாதம் வரலாம். மேலும் அரிதான சந்தர்ப்பங்களில் மரணம் கூட வரலாம். தற்போது இந்த பெண்ணுக்கும் பாக்டீரியா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் பாக்டீரியா தொற்றும் மற்றும் ஸ்டீராய்டுகளின் கலவை மருந்து வழங்கப்பட்டது. தற்போது நலமாக உள்ளார்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications