கழுத்தில் பாய்ந்த குண்டு.. துப்பாக்கி பற்றி பேசும்போதே ரத்த வெள்ளத்தில் சரிந்த சார்லி! கடைசி நொடியில் நடந்தது என்ன!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டார். பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சார்லி துப்பாக்கி வன்முறை குறித்துப் பேசிக் கொண்டிருக்கும்போதே கொல்லப்பட்டார். இதற்கிடையே கடைசி நொடிகளில் அங்கு என்ன நடந்தது.. சார்லி கிர்க் உயிரிழந்தது எப்படி என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
என்ன தான் உலகின் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருந்தாலும் கூட அங்குத் துப்பாக்கி கலாச்சாரம் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. துப்பாக்கிகள் மிக எளிதாகக் கிடைப்பதாலும் அதற்கான கட்டுப்பாடுகள் இல்லாததாலும் துப்பாக்கி வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பலர் உயிரிழக்கிறார்கள்.

துப்பாக்கிச் சூடு
டிரம்ப் கூட கடந்தாண்டு பிரச்சாரம் செய்யும்போது துப்பாக்கியால் சுடப்பட்டார். நல்வாய்ப்பாக அவருக்கு எதுவும் ஆகவில்லை. இதற்கிடையே மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. டிரம்பின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் சார்லி கிர்க் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 31 வயதான சார்லிக்கு கடைசி நொடிகளில் என்ன நடந்தது.. அவர் உயிரிழந்தது எப்படி என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை அதிகரித்து வரும் சூழலில், அது தொடர்பாகவே சார்லி கிர்க் பேசிக் கொண்டிருந்தார். அப்போதே இந்த கொடூரம் அரங்கேறியது.. உட்டாவின் ஓரம் (Orem) நகரில் உள்ள உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்லி பங்கேற்றிருந்தார். அப்போது அமெரிக்காவில் திருநங்கைகளால் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு கிர்க் பதிலளித்தார்.
துப்பாக்கி கலாச்சாரம் பற்றிப் பேசும்போதே
அதாவது அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒருவர், "கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை திருநங்கைகள் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று ஒரு பார்வையாளர் கிர்க்கிடம் கேட்டார். அதற்கு கிர்க் சார்லி, "ரொம்ப அதிகம்" என்று பதிலளித்தார். இருப்பினும், அதை மறுத்த அந்த நபர் வெறும் 5 துப்பாக்கிச் சூடு மட்டுமே எனப் பதிலளித்தார்.. மேலும் அந்த நபர், "கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவில் எத்தனை பேர் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்" என்று கிர்க்கிடம் கேட்டார்.
அதற்கு கிர்கி, "கிரிமனல் கேங் வன்முறையைச் சேர்க்க வேண்டுமா இல்லையா?" என்று கேட்டார். அதற்குள் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. கிர்க்கின் கழுத்தில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில், மேடையிலேயே அவர் சரிந்து விழுந்தார். இது தொடர்பான ஷாக் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
என்ன நடந்தது
அப்போது அவர் வெள்ளை நிற டீ சர்ட் அணிந்திருந்தார். அந்த நபருடன் உரையாடிக் கொண்டு இருந்த போதே, துப்பாக்கி குண்டு சரியாக அவரது கழுத்தில் பாய்ந்துள்ளது. அடுத்த நொடியே அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சார்லி நிகழ்ச்சிக்காகப் பல நூறு பேர் திரண்டிருந்த சூழலில், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் அங்கிருந்த மக்கள் தெறித்து ஓடினர். இவை அனைத்துமே அந்த வீடியோவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
டிரம்ப்
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். சார்லி குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள டிரம்ப், ஞாயிறு வரை அமெரிக்கக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தில் காரணமான அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணையில் இறங்கியுள்ள எஃப்.பி.ஐ இது தொடர்பாகச் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications