"விபரீதம்!" சூரியனை மங்கலாக்கும் ஆய்வாளர்கள்.. காரணத்தை கேட்டால் ஷாக் ஆவீங்க.. இது என்ன புது மேட்டர்
வாஷிங்டன்: காலநிலை மாற்றம் என்பது மிகப் பெரிய பிரச்சினையாகப் பாதிப்பு இருக்கும் நிலையில், இதைச் சமாளிக்க ஆய்வாளர்கள் புதியதொரு தீர்வை முன்மொழிந்துள்ளனர்.
காலநிலை மாற்றம் என்பது இப்போது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவோம் என உலக நாடுகள் பல்வேறு உறுதிகளை அளித்தாலும் அது வெறும் வாக்குறுதியாகவே இருக்கிறது.

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போதிய நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்ற விமர்சனம் இருந்து கொண்டே இருக்கிறது. அதுதான் உண்மையும் கூட. பூமியின் சராசரி வெப்பம் மெல்ல அதிகரிப்பதே இதற்கான சாட்சி.
காலநிலை மாற்றம்: இதே நிலைமை இருந்தால் 2030களின் நடுப்பகுதியில் பூமியின் சராசரி வெப்பம் வழக்கத்தைக் காட்டிலும் 1.5°C அதிகமாக இருக்கும். அதேபோல இந்த நூற்றாண்டின் இறுதியில் அது 2.5°Cக்கு மேல் அதிகரித்துவிடும். புவி வெப்ப மயமாதல் என்பது நமது சமூகத்தில் பல்வேறு வகைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சுற்றுச்சூழல் தொடங்கி உணவு தானிய உற்பத்தி பாதிப்பு வரை இது பல்வேறு வழிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதற்கிடையே இதற்கு ஆய்வாளர்கள் புதிய தீர்வை முன்வைத்துள்ளனர். அதாவது பொதுவாக எரிமலை வெடிக்கும் போது அப்போது ஓவர் வெப்பம் ஏற்பட்டாலும், அதன் பிறகு உடனடியாக அதன் வெப்பம் குறையும். இந்த ஐடியாவால் ஈர்க்கப்பட்ட ஆய்வாளர்கள் சூரியனைச் செயற்கையான முறையில் மங்கலாக்க ( Dimming of the Sun) திட்டமிட்டுள்ளனர்.
எப்படி சாத்தியம்: மேல் வளிமண்டலத்தில் பிரதிபலிப்பு துகள்களைப் போடுவதன் மூலம் சூரியனைச் செயற்கையாக மங்கலாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதிநவீன ஜெட் விமானங்கள் மூலம் இதை நம்மால் செய்ய முடியும். பூமியின் வெப்பத்தை 1 டிகிரி செல்சியஸ் குறைக்க நாம் சூரிய ஒளியில் 1% வரை மங்கலாக்கினால் போதும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும், இதற்கான செலவும் பெரியளவில் இருக்காது என்பதால் புவி வெப்ப மயமாதலைச் சமாளிப்பதில் இது முக்கிய தீர்வாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இப்படி சூரியனின் வெளிச்சத்தைக் குறைப்பது காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் ஆபத்தைப் பெரியளவில் குறைக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிக வெப்பத்தால் பல உயிரினங்கள் மொத்தமாக அழியும் அபாயம் இருக்கும் நிலையில், அதை நம்மால் தடுக்க முடியும்.
ஏன் முக்கியம்: பருவநிலை மாற்றத்தால் அடிக்கடி பெருவெள்ளம், கொடூர வறட்சி மாறி மாறி ஏற்படும் நிலையில், அதையும் இது குறைக்கும். மேலும், அண்டார்டிக்கா மற்றும் கிரீன்லாந்து பகுதிகளில் பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயர்வதையும் இது தடுக்கும். இப்படி இம்முறையால் பல்வேறு நன்மைகள் இருக்கிறது.
சிக்கல்கள்: அதேநேரம் இதில் சில பாதிப்புகளும் கூட இருக்கவே செய்கிறது. முதலில் இந்த முறை என்பது ஒரு தற்காலிக தீர்வாகவே இருக்கும். ஏனென்றால் இது பருவநிலை மாற்றத்தின் அடிப்படை பிரச்சினைகளான அதிகரிக்கும் கார்பன் உமிழ்வு, பெருங்கடலில் ஆசிட் தன்மை அதிகரிப்பு ஆக்கியவற்றைத் தடுக்க நாம் எதையும் செய்வதில்லை. எனவே, அதுவும் ஒரு பிரச்சினையாக மாறும்.
அதேபோல சல்வேட் துகள்களை நாம் சூரியனை மங்கலாக்கப் பயன்படுத்தினால் அது ஆசிட் மழையையும் அதிகரிக்கும். மேலும், ஓசோன் ஏற்கனவே ஓட்டையாகியுள்ள நிலையில், அது சரியாவதிலும் தாமதம் ஏற்படும்.
இது மிகச் சிறந்த தீர்வு இல்லையென்றாலும் கூட பருவநிலை மாற்றம் அதிகரிக்கும் நிலையில், இதுபோன்ற மாற்று வழிகளை நாம் யோசித்தே ஆக வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும், இதைச் செயல்படுத்தும் முன் தீவிர ஆய்வை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பருவநிலை மாற்றம் மிகப் பெரிய ஆபத்தைப் பூமிக்கு ஏற்படுத்தும் என்பதால் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications