பறிபோகும் "அந்தரங்கம்!" மொபைல் கேமராவை குறிவைக்கும் டாம் வைரஸ்.. வந்தது புது வார்னிங்
வாஷிங்டன்: நாம் பெரும்பாலும் ஆன்டிராய்டு மொபைல்களையே பயன்படுத்தும் நிலையில், அதில் இருக்கும் ஆபத்துகள் குறித்து புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நவீன உலகில் இப்போது எல்லாமே ஆன்லைன் என்று மாறிவிட்டது. விலையுயர்ந்த வைரம் முதல் மலிவான குண்டூசி வரை அனைத்து பொருட்களையும் இப்போது ஆன்லைன் மூலமே வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலையே உருவாகி இருக்கிறது.
இதனால் முன்பு எப்போதை காட்டிலும் இப்போது நமக்கு நமது மொபைல் ரொம்பவே முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. மொபைல் இல்லையென்றால் இப்போது பலருக்கும் பாதி வேலை ஓடவே செய்யாது.

இப்படி மொபைலால் நமக்கு ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் இருந்தாலும் கூட சில மோசமான விஷயங்களும் நடக்கவே செய்கிறது. பொதுவாக இப்போது ஒருவரது மொபைலை ஹேக் செய்தாலே போதும் அவர் குறித்து A டூ Z வரை அனைத்து தகவல்களையும் எடுக்க முடியும். அப்படியொரு சூழலே இங்கே நிலவி வருகிறது. இதற்காகப் புதிது புதிதாக வைரஸ்களும் கூட பரவி வருகிறது.
புதுவித வைரஸ்:
இதற்கிடையே அப்படியொரு மோசமான வைரஸ் தான் இப்போது பரவ தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் மொபைல் போன்களை தாக்கி அழைப்பு பதிவுகளை எடுக்கிறது. மேலும், நமது கான்டெக்ட்கள், கால் ஹிஸ்டரி, கேமரா என முக்கியமான தரவுகள் அனைத்தையும் கூட ஹேக் செய்துவிடுகிறதாம். 'டாம்' என்ற இந்த மால்வேர் வேகமாகப் பரவி வருவதாகத் தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நாம் ஆன்ட்டி வைரஸ்களை வைத்திருந்தாலும் அதையும் தாண்டி சாதனங்களைத் தாக்கும் திறனையும் இந்த வைரஸ் கொண்டிருக்கிறது. CERT என்ற இந்த நிறுவனம் இணையத் தாக்குதல்களை எதிர்த்துப் போராடவும் பிஷிங் மற்றும் ஹேக்கிங் தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் ஒரு மத்திய அரசின் அமைப்பாகும். பாதுகாப்பு இல்லாத இணையதளங்கள், பாதுகாப்பு இல்லாத செயலிகள் மூலம் பரவுவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
டாம் வைரஸ்:
அந்த அமைப்பு மேலும் கூறுகையில், "ஒரு முறை இந்த வைரஸ் நமது மொபைலில் வந்தவுடன் அது ஆன்ட்டி வைரஸை தாண்டி வரவே முயல்கிறது. அது நமது மொபைலில் இருக்கும் முக்கியமான தரவுகளைத் திருட முயல்கிறது. மொபைலை மெதுவாக்கி நமது போனில் இருக்கும் முக்கிய தகவல்களை அது திருடி விடுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
'டாம்' என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் மொபைல் அழைப்பு பதிவுகள், எஸ்எம்எஸ்கள் மட்டுமின்றி கேமராக்களையும் ஹேக் செய்துவிடுமாம். மேலும், இது நமக்குத் தெரியாமல் சென்சிடிவ்வான ஸ்கிரீன் ஷாட்களையும் எடுக்கும் அச்சுறுத்தல் இருக்கவே செய்கிறது.

என்ன செய்யும்:
AES எனப்படும் advanced encryption standard என்ற அல்காரிதம் மூலம் இந்த வைரஸ் இயங்குகிறது. இது முதலில் நமது மொபைலை ஹேக் செய்து அனைத்து தகவல்களையும் திருடிவிடுகிறது. அதன் பின்னர் திருடிய தகவல்களை encrypt செய்து வைக்கும் இந்த வைரஸ், நமது மற்ற டேட்டாக்களை டெலிட் செய்துவிடுகிறது. அதாவது நாம் அவர்களுக்கு அஞ்சி கட்டணம் செலுத்தினால் மட்டுமே நமது தரவுகள் மீது கை வைக்க முடியும் என்ற சூழலை உருவாக்கி விடுகிறது.
இதன் காரணமாக வைரஸ் பாதிக்கும் நேரத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பட்டியலையும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
முதலில் பாதுகாப்பு இல்லாத இணையதளங்களுக்குச் செல்லக் கூடாது, நம்பகமற்ற லிங்குகளை கிளிக் செய்யக் கூடாது. மேலும், முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் மெயில்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் இருக்கும் லிங்குகளை க்ளிக் செய்யக் கூடாது. மேலும், உண்மையான மொபைல் நம்பர்கள் போல இல்லாத எண்களில் இருந்து வரும் மெசேஞ்களை ஓபன் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications