"அட பாவமே.!" இத்தனை ஆண்டு ஜெயில் கூட கிடைக்குமா.. சிறையை எல்லாம் சமாளிப்பாரா டிரம்ப்.. பரபர தகவல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் இப்போது ஆபாச அழகிக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு அதிகபட்சம் என்ன தண்டனை கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.
அமெரிக்காவின் 45ஆவது அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் இன்று குற்றவியல் விசாரணையை எதிர்கொள்கிறார். அவர் அதிபராக இருந்த போதே பல சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
அதிபராக இருந்த போது அவரும் அவரது குடும்பத்தினரும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிடம் இருந்து பெற்ற பரிசுகள் குறித்து கணக்குக்காட்டவில்லை என்ற புகாரும் இப்போது கிளம்பியுள்ளது.

ஆஜர்
இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து வரும் நாட்களில் பல தகவல்கள் வெளியாகும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இப்போது டிரம்ப் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கில் டிரம்பை குற்றவாளியாகக் கடந்த வாரம் தான் ஜூரி தீர்ப்பளித்தது. நியூயார்க் சட்டப்படி இது ஒரு பெலனி குற்றம் என்பதால், அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார். இன்று அவர் மீது குற்றவியல் விசாரணை நடக்கவுள்ளது.

மாட்டிக் கொண்ட டிரம்ப்
நியூயார்க் மாவட்ட நீதிபதி ஆல்வின் ப்ராக் இந்த வழக்கு விசாரிக்கிறார். ஆபாச நட்சத்திரமான ஸ்டார்மி டேனியல்ஸுக்கு $130,000 செலுத்திய விவகாரத்தில் டிரம்ப் மீது விசாரணை நடக்க உள்ளது. டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் என்ன? இப்போது அங்கே என்ன கேஸ் நடக்கிறது என்பது குறித்த தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், வரி மோசடி குற்றச்சாட்டிற்காக டிரம்ப் விசாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

நீண்ட காலம் ஆகும்
ஸ்டார்மியுடன் அப்போது டிரம்ப் சார்பாக ஒப்பந்தம் போட்டவர் மைக்கேல் கோஹன். இவர் தற்போது இந்த குற்றத்திற்காகச் சிறையில் உள்ளார். அவருக்குப் பணம் கொடுத்ததை முறையாகத் தெரிவிக்காதது குறித்தே விசாரணை நடந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் எந்தவொரு தீர்ப்பும் வழங்க நிச்சயம் நீண்ட காலம் ஆகும்.. சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள இந்த விசாரணை முறையாக நடக்கக் குறிப்பிட்ட காலக்கெடு ஆகவே செய்யும்.

என்ன தண்டனை
அதேநேரம் டிரம்ப் மீதான குற்றம் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபணமானால் அவருக்கு என்ன மாதிரியான தண்டனை கிடைக்கும் என்பதை பார்க்கலாம். விசாரணையில் டிரம்ப் தோற்றால், வரி மோசடி குற்றச்சாட்டில் அவருக்குத் தண்டனை விதிக்கப்படுவார். IRC §7201 சட்டப்படி, வரி ஏய்ப்பு குற்றச்சாட்டிற்கு $100,000 (இந்திய மதிப்பில் 82 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்படும்.

ஜெயில்
அதேபோல வழக்கு தொடர்பான செலவுகளும் அவரிடம் இருந்தே வசூலிக்கப்படும் நிலையில், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் டிரம்பிற்கு அபராதம் எல்லாம் பெரிய விஷயமே இல்லை. ஆனால், சிறைத் தண்டனையைத் தான் எப்படி எதிர்கொள்வார் எனத் தெரியவில்லை. இதற்கான விடை தண்டனை அறிவிக்கப்படும் போது நமக்குத் தெரியும்.

பாதுகாப்பு
அதேநேரம் டிரம்ப் இன்று பலத்த போலீசார் பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார். டிரம்ப் ஆதரவாளர்கள் நியூயார்க்கில் அவருக்கு ஆதரவாகப் போராடத் திட்டமிட்டுள்ளனர். மேலும், அவர் முன்னாள் அமெரிக்க அதிபர் என்பதால், சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்புடன் டிரம்ப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். அப்போது டிரம்பிடம் இருந்து கைரேகை எடுக்கப்படும். மேலும், கைதிகளுக்கு எடுக்கப்படுவது போன்ற போட்டோக்களும் எடுக்கப்படும். ஆனால், இதில் ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications