"மர்மம்.." உயிரிழக்கும் போது நமது மூளையில் ஏற்படும் பிரகாசம்! பார்த்தவுடன் ஆய்வாளர்கள் ஷாக்
வாஷிங்டன்: நாம் உயிரிழக்கும் போது மூளையில் என்ன நடக்கும் என்பது பலருக்கும் இங்கே இருக்கும் பெரிய கேள்வியாகவே உள்ளது. இதற்கிடையே இதற்கான பதில் இப்போது கிடைத்துள்ளது.
இந்த நவீன உலகில் நாம் பல்வேறு துறைகளிலும் வேகமாக முன்னேறி வருகிறோம். அதில் குறிப்பாக மருத்துவத் துறையில் தொடர்ச்சியாகப் பல ஆய்வுகளைச் செய்து, அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி வருகிறோம்.

இதன் காரணமாகவே மனிதர்களின் சராசரி வாழ்நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருந்த போதிலும், இன்னுமே கூட சில விஷயங்கள் நமது உடலில் மர்மமாகவே இருக்கிறது.
உயிரிழக்கும் தருவாய்: அதில் குறிப்பாக நாம் உயிரிழக்கும் போது என்ன நடக்கும் என்பது பெரிய மர்மமாகவே இருந்து வருகிறது. உயிரிழந்த பிறகு என்ன ஆகும் என்பதற்கு ஒவ்வொரு மதங்களிலும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கிறது. அதைத் தவிர உயிரிழக்கும் சமயத்தில் நமக்கு என்ன நடக்கும், அப்போது நமது உடலிலும் மூளையில் என்ன நடக்கும் என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது.
நமது மூளையில் நடக்கும் பல சம்பவங்கள் மர்மமாகவே இருந்து வரும் நிலையில், இதைக் கண்டறிய நரம்பியல் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். உயிரிழக்கும் தருவாயில் இருந்த இருவரின் மூளையில் என்ன நடந்தது, அது எப்படி மரணத்திற்கு வழிவகுத்தது என்பதை இந்த ஆய்வாளர் குழு அடையாளம் கண்டுள்ளது.
காமா அலை: மூளையின் அறிவியலைப் புரிந்து கொள்ளவும் நாம் உயிரிழக்கும் போது என்ன நடக்கும் என்பதைக் கண்டறிய நீண்ட காலமாக முயன்று வருகின்றனர்.. இதற்கு முன்பு, விலங்குகளிடையே நடத்தப்பட்ட ஆய்வுகளில் காமா அலைகளின் எழுச்சி ஏற்படுவது தெரிகிறது. அதுவே இதயம் மற்றும் சுவாசம் நிற்கக் காரணமாக இருக்கிறது.
ஒரு நபர் இறக்கும் போது மூளையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள, அமெரிக்கா மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நான்கு இறக்கும் நோயாளிகள் உயிரிழக்கும் போது, அவர்கள் மூளையில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்தனர்.. அவர்கள் மூளையில் ஏற்படும் எலக்ட்ரோஎன்செபலோகிராம் (EEG) மற்றும் எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG) சிக்னல்களை ஆய்வு செய்தனர். அந்த நான்கு நோயாளிகளும் நீண்ட காலமாக கோமா நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் இரண்டு நோயாளிகளில் காமா செயல்பாடுகளால் குளோபல் ஹைபோக்ஸியா ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "மாரடைப்பு ஏற்படும் சமயத்தில் மூளையின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை நாம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நினைவிழப்பு ஏற்படும் என்று தெரிந்தாலும், இறக்கும் செயல்பாட்டின் போது நோயாளிகள் மறைமுக உணர்வுடன் இருக்க முடியுமா என்பது தெளிவாக இல்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
என்ன நடக்கிறது: உயிரிழந்தோரில் ஒருவரின் மூளையின் ஒரு பகுதியில் ஒரு நீண்ட காமா அலை ஏற்பட்டுள்ளது. இவை மூளையின் இரு பக்கத்திற்கும் இருக்கும் தொடர்பைக் காட்டுகிறது. அதில் மேலும் கூறுகையில், "உயிரிழக்கும் போது, மனித மூளையில் பின்புற கார்டிகல் பகுதிகள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை நாம் இன்னும் தீர்மானிக்கவில்லை. இது குறித்த விரிவான ஆய்வுகளை நடத்த வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
காமா அலை ஆரம்பத்தில் மூளையின் வெப்ப மண்டலம் என்று அழைக்கப்படும் ஒரு பகுதியில் அமைந்திருந்தது. கனவு காணும்போது, மர்ம காட்சிகளைக் காண்பதாகப் புகார் அளிக்கும் நோயாளிகளுக்கும் இங்கே தான் மூளை ஆக்டிவாக இருக்கும்.. மூளையில் உள்ள வெப்ப மண்டலம் என்பது நனவான செயலாக்கத்திற்கு முக்கிய பகுதியாகும்.
அதேநேரம் நோயாளிகள் உயிரிழந்துவிட்டதால் உயர்ந்த காமா அலைகள் என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது நமக்குத் தெளிவாகத் தெரிவதில்லை. இருப்பினும், உயிரிழக்கும் சமயத்தில் நமது மூளை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் என்பதையே இது காட்டுகிறது.. எனவே, மாரடைப்பு என்பது இதயத்தை மட்டும் பாதிக்காமல் மூளையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications