நோலனை விடுங்க.. "ரியல்" ஓப்பன்ஹைமருக்கு நேரு எழுதிய "சீக்ரெட்" லெட்டர் தெரியுமா! என்ன நடந்தது
வாஷிங்டன்: ஓப்பன்ஹைமர் திரைப்படம் இப்போது பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், அவருக்கு இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேரு எழுதிய கடிதம் குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஓப்பன்ஹைமர்.. இந்தப் படம் 'அணு குண்டின் தந்தை' என்று அழைக்கப்படும் அமெரிக்க இயற்பியலாளர் ராபர்ட் ஜே ஓப்பன்ஹைமர் என்பவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாகும்.
இந்தப் படம் வெளியாகி பேசுபொருளாகியுள்ள நிலையில், ஓப்பன்ஹைமர் குறித்துத் தெரிந்து கொள்ள இப்போது பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். இதற்கிடையே ஓப்பன்ஹைமருக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் கனெக்ஷன் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

ஓபன்ஹைய்மர்: இதற்கிடையே ஓபன்ஹைய்மரை இந்தியாவில் வந்து செட்டிலாக அழைக்கப்பட்டதாகச் சமீபத்தில் வெளியான புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இந்திய அணுக்கருவியலின் தந்தை என்று அழைக்கப்படும் ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் வாழ்க்கை வரலாறு சமீபத்தில் வெளியான நிலையில், அதில் தான் அவர் இந்தத் தகவல்களைக் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஜஹாங்கீர் பாபா மற்றும் பக்தியார் கே தாதாபோய் ஆகியோர் இடையே இருந்த நட்பு குறித்தும் அதில் விளக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்தப் புத்தகத்தில், "போருக்குப் பிறகு பாபா ஓபன்ஹைமரைச் சந்தித்தார், இருவரும் நல்ல நண்பர்களானார்கள். பாபாவைப் போன்ற ஓபன்ஹைமர் மிகவும் பண்பட்ட மனிதர் என்பதால் அவர்கள் எப்படி எளிதாக நண்பர்கள் ஆகினர் ஆச்சரியமில்லை. அவர் சமஸ்கிருதம் படித்திருந்தார்.. மேலும் லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளையும் அறிந்திருந்தார்" என்று கூறப்பட்டது.
அணுகுண்டு: இரண்டாம் உலக போரில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய பகுதிகளில் அணுகுண்டு வீசப்பட்டது அனைவருக்கும் தெரியும். இதில் ஏற்பட்ட கொடூர பாதிப்பை கண்டு ஓபன்ஹைமர் மனம் வெதும்பி போனார். அணுகுண்டை உருவாக்கும் போதே சக ஆய்வாளர்கள் இது ஏற்படுத்தக் கூடிய அழிவு குறித்து அச்சம் தெரிவித்தனர். இருப்பினும், அப்போது ஓபன்ஹைமர் தான் அவர்களை சமாதானப்படுத்தினார்.
நாம் வேலையை மட்டுமே செய்கிறோம் என்றும் ஆயுதத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என அவர் சக ஆய்வாளர்களிடம் கூறி சமாதானம் செய்தார். இருப்பினும், அதன் அழிவை ஜப்பானில் பார்த்ததும் அணுகுண்டுகளுக்கு எதிராக வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தார். குறிப்பாக அவர் உருவாக்கிய ஹைட்ரஜன் குண்டுகளை அவரே எதிர்த்தார்.
அடாவடி நடவடிக்கை: அவரது நிலைப்பாடு மாறியதால் சந்தேகமடைந்த அமெரிக்க அரசு எங்கு அவர் நாட்டிற்கு எதிராகத் திரும்பிவிட்டாரோ என நினைத்து 1954இல் அவரை அழைத்து விசாரித்தது. மேலும், அவரது பதவிகளையும் பறித்தது. இதன் மூலம் அவரால் உயர்மட்ட கூட்டங்களில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஓபன்ஹெய்மரும் மற்றும் அவரது மனைவி கேத்தருக்கும் கம்யூனிஸ்டுகள் உடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. அந்த காலத்தில் அமெரிக்கா சோவியத் ஒன்றியம் என உலகமே பிளவுபட்டு இருந்த நிலையில், கம்யூனிச சிந்தனை கொண்ட அனைவரையுமே அமெரிக்கா சந்தேகத்துடனேயே அணுகியது. இதன் காரணமாகவே ஒபன்ஹெய்மரின் அதிகாரங்கள் அனைத்தையும் பிடுங்கியது அமெரிக்கா.
நேருவின் சீக்ரெட் கடிதம்: இவை எல்லாம் 1954ஆம் ஆண்டு நடந்தது. அப்போது தான் ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் வற்புறுத்தலின் பேரில் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஓபன்ஹெய்மருக்கு குடியுரிமை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறி கடிதம் எழுதியதாக அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
அதில் மேலும், "1954 ஆம் ஆண்டில் ஓபன்ஹைய்மரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்ட போது, பாபாவின் தலையீட்டின் பேரில், ஜவஹர்லால் நேரு ஓபன்ஹைய்மரை இந்தியாவுக்கு வருமாறு ஒன்றுக்கு மேற்பட்ட முறை கடிதம் எழுதினார். விருப்பப்பட்டால் குடியுரிமை வழங்கவும் கூட ரெடியாக இருப்பதாகத் தெரிவித்தார்" என்று அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், தன் மீது குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், அப்போது அமெரிக்காவை விட்டு வெளியேறினால் அது உண்மை என்பது போல ஆகிவிடும் என்பதால் நேருவின் அழைப்பை அவர் மறுத்துள்ளார்.
-
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ!












Click it and Unblock the Notifications