"உடைந்த சூரியன்.." திடீரென ஏற்பட்ட அந்த மாற்றம்.. பூமிக்கு என்ன பாதிப்பு ஏற்படும்! பரபர விளக்கம்
சூரியனின் மேற்பரப்பில் வினோதமான ஒரு நிகழ்வு நடக்கிறது.
வாஷிங்டன்: சூரியனின் மேற்பரப்பில் இப்போது நடந்தது உலகெங்கும் உள்ள ஆய்வாளர்களைத் திகைக்க வைத்துள்ளது. அங்கு என்ன நடந்தது.. அதனால் பூமிக்கு எதாவது ஆபத்தா என்பதை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
உலகில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் சூரியன் தான். இந்த சூரியன் குறித்துத் தெரிந்து கொள்ள உலக நாடுகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. அமெரிக்கா தனது ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் மூலம் ஆய்வு செய்து வருகிறது..
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சூரியனில் இருந்து ஒரு பகுதி தனியாக வந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியானது. ஏற்கனவே, காலநிலை மாற்றம், இயற்கை பேரழிவுகள் காரணமாக உலகம் பல பிரச்சினைகளைச் சந்தித்து வரும் நிலையில், இது பேசுபொருளானது.

சூரியன்
இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது. இதற்காக நாம் கவலைப்பட வேண்டுமா என்பதை விரிவாகப் பார்க்கலாம். அதாவது சூரியனின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு இழையிலிருந்து பொருள் உடைந்து மெல்ல மணிக் கணக்கில் மேல்நோக்கி நகர்ந்துள்ளது.. இது தொடர்பான வீடியோவை விண்வெளி ஆய்வாளர் டாக்டர் தமிதா ஸ்கோவ் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்வு பிளாஸ்மா மற்றும் காந்தப்புலனை அதிகம் வெளிப்படுத்தும் கரோனல் மாஸ் எஜெக்ஷனை உருவாக்காததால் இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றே கூறப்படுகிறது.

வீடியோ
இந்த படத்தைப் பகிர்ந்திருந்த தமிதா ஸ்கோவ் தனது ட்விட்டரில், "சூரியனில் வடக்கின் முக்கியப் பொருள் பிரிந்து இப்போது நமது நட்சத்திரத்தின் (சூரியன்) வட துருவத்தைச் சுற்றி ஒரு பெரிய சூறாவளி போன்ற ஒன்றை உருவாக்கி வருகிறது. அங்கு ஏன் இப்படி நடந்துள்ளது என்பதைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளோம்" என்று பதிவிட்டிருந்தார். இதுவே இணையத்தில் பெரிய பேசுபொருளானது. இதற்கிடையே இது குறித்து மேலும் சில தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

என்ன நடந்தது.
சூரியனில் இருக்கும் பிளாஸ்மாவின் அதிக மின்சார சார்ஜ் செய்யப்பட்ட வாயுக்களைக் கொண்ட நீண்ட இழை அதன் மேற்பரப்பில் இருந்து தனியாக வெளியேறியது.. இந்த நிகழ்வு ஒரு பெரிய லூப் போன்ற அம்சத்தை உருவாக்கியுள்ளது. இவை சூரியனின் கரோனாவின் காந்தப்புலத்தில் தோன்றியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கரோனா என்பது சூரியனின் மேற்பரப்பாகும். சூரியன் இப்போது சூரிய சுழற்சியின் நடுவே உள்ளது..

துருவ சுழல்
அதாவது ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனின் காந்தப்புலன் தலைகீழாக மாறும்.. சோலர் மேக்ஸிமம் என்ற உச்ச நிலையில் தான் இந்த காந்த புலன் தலைகீழாக மாறும். இதில் ஆய்வாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தைக் கிளப்பியது என்னவென்றால்.. சூரியனில் இருந்து பிரிந்த அந்த பகுதி அதன் துருவத்திற்கு மேலே அப்படியே பல மணி நேரம் காற்றில் இருந்தது. இதை வானியலாளர்கள் துருவச் சுழல் என்று குறிப்பிடுகின்றனர்.

பூமிக்கு ஆபத்தா
சூரியனின் பின்காந்த புலனில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சூரியனில் இருந்து இந்த சூப்பர் ஹாட் பிளாஸ்மா வெளியேறியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சூரியினில் மிகவும் அரிதாகவே இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும். சூரியன் குறித்து விரிவான ஆய்வுகள் நடைபெறாத நிலையில், இது முக்கியமானதாக மாறியுள்ளது. சரி, சூரியனில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் பூமியில் எதாவது பாதிப்பை ஏற்படுத்துமா என்று நம்மில் பலருக்கும் கேள்வி எழும்.

ஆய்வாளர்கள் விளக்கம்
தற்போது வரை சூரியனில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் பூமிக்கு ஆபத்து இருப்பதாகத் தெரியவில்லை.. அதேநேரம் சூரியனில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு 10 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் வெளியாகும் சார்ஜ் செய்யப்பட்ட பார்டிக்கள்களே ஆய்வாளர்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது. சூரியனில் இருந்து உருவாகும் இந்த வெடிப்புகளை ஆய்வாளர்களால் இதுவரை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆதித்யா எல்-1 சாட்டிலைட்
பல நாடுகள் சூரியன் குறித்த ஆய்வுகளைச் செய்யத் தயாராகி வரும் நிலையில், சூரியன் குறித்து மேலும் பல தகவல்கள் வரும் காலங்களில் இன்னும் விரிவாகவே நமக்குத் தெரிய வரும்.. இந்தியாவும் கூட சூரியன் குறித்து ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்ற சாட்டிலைட்டை இந்தியா அனுப்பவுள்ளது. சூரியனின் மேற்பரப்பான கரோனா குறித்தும், அங்கு ஏற்படும் வெடிப்புகள் குறித்தும் ஆதித்யா எல்-1 ஆய்வு செய்யும்.












Click it and Unblock the Notifications