Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரான் மீது குண்டுமழை பொழிந்த இஸ்ரேல்.. "இதில் தப்பு இல்லை.." அமெரிக்கா பகீர்.. பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: யாருமே எதிர்பார்க்காத வகையில் ஈரான் மீது இஸ்ரேல் இன்று திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இது மத்திய கிழக்கில் நிலவும் சூழலை மேலும் மோசமாக்கி இருக்கிறது. இதற்கிடையே இஸ்ரேல்- ஈரான் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தங்களுக்குத் தெரியுமா என்பது குறித்தும் அமெரிக்கா சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலைமை கையை மீறிச் செல்லும் சூழலே உருவாகியுள்ளது. கடந்தாண்டு இஸ்ரேல்- ஹமாஸ் இடையே தொடங்கிய மோதல் இப்போது மிகப் பெரியளவில் வெடித்துள்ளது.

israel iran usa

காசாவில் நடந்த தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதலை நடத்தியது. அதற்கு இஸ்ரேல் பதிலடி தரவே ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இது ஈரானை ஆத்திரப்படுத்தியது. ஏனென்றால் ஹிஸ்புல்லா என்பது லெபனானில் இயங்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஒரு அமைப்பாகும்.

கடந்த அக். 1ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் பெரியளவில் தேசம் இல்லை என்றாலும் இது அங்கு பதற்றத்தை அதிகரித்தது. இதற்கு இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் பதிலடி தரலாம் என்றே அஞ்சப்பட்டது. இந்தச் சூழலில் தான் இன்று அதிகாலை ஈரான் ராணுவ தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் சரமாரி தாக்குதலை நடத்தியுள்ளது. இது அங்கு பிராந்தியத்தில் நிலைமை மிக மோசமானதாக மாற்றியுள்ளது.

இதற்கிடையே இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்கா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. இதுவரை ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா என்று பயங்கரவாத குழுக்களைக் குறிவைத்தே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஆனால், இப்போது முதல்முறையாக ஒரு நாடு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் நாட்டின் ராணுவ முகாம்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை நடத்தி இருக்கிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த முறையும் இஸ்ரேலுக்கு ஆதரவாக முதல் ஆளாக அமெரிக்கா வந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேல் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்திய நிலையில், இஸ்ரேல் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ளும் ஒரு நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் முன்கூட்டியே தங்களிடம் தெரிவித்து இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் சீன் சாவெட் கூறுகையில், "ஈரான் நாட்டில் உள்ள ராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. கடந்த அக். 1ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருந்த நிலையில், அதற்குப் பதிலடி தாக்குதல் தான் இது. மேலும், இஸேரல் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ளவே இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறது" என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தாக்குதல் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு எதுவும் இல்லை என்று மற்றொரு ராணுவ அதிகாரி தெரிவித்தார். பெயர் வெளியிட விரும்பாத அந்த அமெரிக்கா டாப் அதிகாரி அந்நாட்டு ஊடகத்திடம், "இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலிடம் இருந்து முன்கூட்டியே எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் இந்தத் தாக்குதலில் அமெரிக்கத் தலையீடுகள் எதுவும் இல்லை" என்று குறிப்பிட்டார்.

அதேநேரம் தாக்குதலுக்கு எவ்வளவு நேரம் முன்பு இது குறித்து அமெரிக்காவுக்குத் தெரிவிக்கப்பட்டது அல்லது இஸ்ரேல் என்ன மாதிரியான தகவல்களைப் பகிர்ந்தது உள்ளிட்ட தகவல்களை அந்த அதிகாரி பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை சார்பிலும் தனியாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஈரான் மீதான இந்த ஏவுகணை தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸிடம் விளக்கப்பட்டதாகவும் மத்திய கிழக்கு விவகாரம் குறித்து தொடர்ச்சியாக அவர்களுக்கு அப்டேட் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+