உலகம் எப்போது அழியும்.. பாபா வாங்கா சொன்ன பகீர் கணிப்பு.. 2024ல் கூட அவரது கணிப்பு அப்படியே நடக்குதே
வாஷிங்டன்: பாபா வாங்கா இந்த உலகம் எப்போது அழியும் என்பது குறித்த கணிப்புகளை விட்டுச் சென்றுள்ளார். அது தொடர்பாகவும் இந்தாண்டு அவர் கணித்தவை எந்தளவுக்கு நடந்துள்ளது என்பது குறித்தும் நாம் பார்க்கலாம்.
இந்த 2024 தொடங்கி நான்கு மாதங்கள் ஆகிவிட்டன.. ஏற்கனவே சர்வதேச அரசியலில் பல கொந்தளிப்பு நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்துவிட்டன. இந்த 2024ல் வரும் காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து பாபா வாங்கா வெளியிட்டுள்ள பகீர் கணிப்புகள் குறித்து நாம் பார்க்கலாம்.

இந்த பாபா வாங்கா கடந்த காலங்களில் வெளியிட்ட பல கணிப்புகள் அப்படியே நடந்துள்ளன. இவர் இரட்டை கோபுர தாக்குதல், செர்னோபில் பேரழிவு மற்றும் இளவரசி டயானாவின் மரணம் எனப் பல சர்வதேச நிகழ்வுகளைத் துல்லியமாகக் கணித்தவர்.
பாபா வாங்கா: பல்கேரிய நாட்டை சேர்ந்த இந்த பாபா வங்கா, 1996இல் தனது 85 வயதில் இறப்பதற்கு முன்பு வரும் காலத்திற்கான பல கணிப்புகள் அப்படியே நடந்துள்ளது. அதன்படி 2024க்கு இவர் விட்டுச் சென்ற கணிப்புகள் என்ன.. அதில் எவை அப்படியே நடந்துள்ளது என்பது குறித்துப் பார்க்கலாம். மேலும், உலகம் எப்போது அழியும் என்பது குறித்து அவரது கணிப்புகள் குறித்தும் நாம் பார்க்கலாம்.
பேரிடர்: 2024ல் கடுமையான வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் ஏற்படும் என்று பாபா வங்கா கணித்திருந்தார். சயின்ஸ் அட்வான்சஸில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, உலகளவில் வெப்ப அலைகள் ஏற்கனவே 67% அதிகரித்துள்ளது. வெப்ப அலைகளின் போது அதிகபட்ச வெப்பம் என்பது 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 1979- 1983 வரையிலான காலகட்டத்தில் வெப்ப அலை சராசரியாக 8 நாட்கள் நீடித்த நிலையில், இப்போது அது 12 நாட்களாக அதிகரித்துள்ளது
சைபர் தாக்குதல்கள்: அவர் இருந்த காலகட்டத்தில் இணையம் என்பதே இல்லாமல் இருந்தது. ஆனால், அப்போதே அவர் சைபர் தாக்குதல் குறித்த கணிப்புகளை விட்டுச் சென்றிருந்தார். அவர் அப்போதே எதிர்காலத்தில் சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்று எச்சரித்திருந்தார். 2024ஆம் ஆண்டில் சைபர் உள்கட்டமைப்பில் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் எச்சரித்து இருந்தார். அவர் சொன்னது போலத் தான் நடந்து இருக்கிறது.
சமீபத்தில் வெளியான டேட்டாவின்படி டார்க் வெப்பில் வெளியாகியுள்ள முக்கிய டேட்டா அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பல கோடி பேரின் முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் வெளியாகியுள்ளது. சைபர் தாக்குதல்கள் குறித்தும் அவரது கணிப்பு துல்லியமாக இருப்பதையே காட்டுகிறது.
பொருளாதார நெருக்கடி: 2024ல் சரவ்தேச அளவில் பொருளாதாரத்தில் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று அவர் கணித்து இருந்தார். அதேபோல ஏற்கனவே பல நாடுகளில் பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருக்கிறது. புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், கடன்களும் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது இது தொடர்பாகவும் பாபா வாங்கா துல்லியமாகக் கணித்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஜப்பான் எனப் பல நாடுகளில் பாபா வாங்கா சொன்னது போலவே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.
இதுபோக அவர் இந்தாண்டு ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத நிகழ்வுகள் நடக்கும் என்றும் மிகக் கொடூரமான பயோ ஆயுதங்கள் இந்தாண்டு பரிசோதனை செய்யப்படும் எனக் கணித்திருந்தார். அவை நடக்கவும் சாத்தியங்கள் அதிகமாகி வருகிறது. இதுபோக மருத்துவத் துறையில் மிக முக்கிய நிகழ்வாக கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என அறிவித்திருந்தார். பிரிட்டன் மற்றும் ரஷ்யா கேன்சர் மருந்தைக் கண்டுபிடிப்பதில் நெருங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
உலகம் எப்போது அழியும்: இப்படி வரும் காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பது குறித்து பாபா வாங்கா துல்லிய கணிப்புகளைச் செய்துள்ளார். இப்படி வரும் 5079ஆம் ஆண்டு வரை அவர் கணிப்புகளை விட்டுச் சென்றுள்ளார். அந்தாண்டு உலகம் அழியும் என அவர் கணித்துள்ளார். இதன் காரணமாகவே அத்துடன் தனது கணிப்புகளை முடித்துக் கொண்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications