வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பொது சுகாதார அவசர நிலை"! உலகெங்கும் அதிகரிக்கும் மங்கி பாக்ஸ் பாதிப்பு! WHO முக்கிய அறிவிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகெங்கும் மங்கி பாக்ஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

Recommended Video

    Monkey Pox பரவல் தீவிரமாகிறதா? | Health

    கடந்த இரு ஆண்டுகளாகவே கொரோனா பாதிப்பு உலக நாடுகளைப் பாடாய் படுத்தி எடுத்தது. இப்போது தான் கொரோனா பாதிப்பே சுற்றே குறைந்து உள்ளது.

    உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கி வரும் நிலையில், பொதுமக்களும் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.

    கேரளாவில் மற்றொரு நபருக்கு மங்கி பாக்ஸ்.. உயிருக்கு ஆபத்தானதா.. எப்படி பரவும்? அறிகுறிகள் என்ன கேரளாவில் மற்றொரு நபருக்கு மங்கி பாக்ஸ்.. உயிருக்கு ஆபத்தானதா.. எப்படி பரவும்? அறிகுறிகள் என்ன

     மங்கி பாக்ஸ்

    மங்கி பாக்ஸ்

    இந்கச் சூழலில் உலகின் பல நாடுகளிலும் மங்கி பாக்ஸ் பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. மங்கி பாக்ஸ் பரவுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்போது தான் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு மீண்டும் மக்களை இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது

    பல்வேறு நாடுகள்

    பல்வேறு நாடுகள்

    கோவிட்-19 பெருந்தொற்றை போல மங்கி பாக்ஸ் புதுவித நோய் இல்லை. இவை ஆப்பிரிக்காவில் உள்ள சில நாடுகளில் என்டமிக் நோயாகவே பரவி வருகிறது. இருப்பினும், ஆப்பிரிக்காவுக்கு வெளியே இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு பரவுவது இதுவே முதல்முறையாகும். திடீரென இப்போது ஆப்பிரிக்காவுக்கு வெளியே இந்த நோய் ஏன் பரவ தொடங்கி உள்ளது என்று ஆய்வாளர்களுக்கே தெரியவில்லை.

    அதிகரிக்கும் கேஸ்கள்

    அதிகரிக்கும் கேஸ்கள்


    இதுவரை அமெரிக்கா, ஐரோப்பா என உலகெங்கும் பல்வேறு நாடுகளில் 300க்கும் மேற்பட்டோருக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் கடந்த வாரம் வரை யாருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்படாமலேயே இருந்தது. இந்தச் சூழலில் ஒரே வாரத்தில் இந்தியாவிலும் கூட கேரளாவில் மூன்று பேருக்கு மங்கி பாக்ஸ் உறுதியாகி உள்ளது. மூன்று பேரும் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் ஆகும்.

    பொது சுகாதார அவசர நிலை

    பொது சுகாதார அவசர நிலை

    இதற்கிடையே மங்கி பாக்ஸ் குறித்து உலக சுகாதார மைய ஆய்வாளர்கள் இன்று ஆய்வு நடத்தினர். அதில் மங்கி பாக்ஸ் பரவல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தச் சூழலில் மங்கி பாக்ஸ் பாதிப்பைச் சர்வதேச பொதுச் சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்து உள்ளது. உலகெங்கும் மங்கி பாக்ஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    எப்படி பரவும்

    எப்படி பரவும்

    முன்னதாக கொரோனா வைரசை பெருந்தொற்றாக அறிவிக்கும் முன்பும், அதை பொதுச் சுகாதார அவசர நிலையாகவே உலக சுகாதார அமைப்பு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்த்தோபாக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் இந்த மங்கி பாக்ஸை ஏற்படுத்துகிறது. மங்கி பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து வெளியேறும் நீர்த்துளிகள் வழியாகவே இந்த நோய் பரவுகிறது. காய்ச்சல், தசைவலி, கொப்பளங்கள், சளி ஆகியவை இந்த மங்கி பாக்ஸின் பொதுவான அறிகுறிகளாகும்.

    English summary
    Monkeypox declared a global health emergency by WHO amid rising cases: (உலகெங்கும் அதிகரிக்கும் மங்கி பாக்ஸ் பாதிப்பு) All things to know about Monkey pox cases.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X