ஒரு நோபல் பரிசால் மதுரோவுக்கு வந்த பிரச்சினை.. பஸ் டிரைவர் டூ அதிபர்.. இப்போது அமெரிக்க சிறையில்!
வாஷிங்டன்: சாதாரண பஸ் டிரைவராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் வெனிசுலா அதிபர் மதுரோ.. கடந்த 10 ஆண்டுகளாகவே அவர் மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் எழுந்த நிலையில், அமெரிக்கா இப்போது அவரை கைது செய்துள்ளது. யார் இந்த மதுரோ.. அவர் மீதான ஊழல் புகார்கள் என்ன.. அவரது கைதுக்கு எது வழிவகுத்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
நேற்று சனிக்கிழமை வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் கைது செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அவர் மீது போதைப்பொருள் கடத்தல், மனித உரிமை மீறல்கள் என அமெரிக்கா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. நீண்டகாலமாகவே வெனிசுலா அரசை அமெரிக்கா சாடி வந்த நிலையில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

வெனிசுலா
வெனிசுலா தலைநகர் கரகஸில் குண்டுவெடிப்பு நடந்த சில மணி நேரத்திலேயே டிரம்ப்பின் இந்த அறிக்கை வெளியானது. இது தொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "வெனிசுலா மற்றும் அதன் தலைவருக்கு எதிராக அமெரிக்கா ஒரு பெரிய தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.. வெனிசுலா அதிபர் மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸும் நாடுகடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்கா இவ்வளவு பெரிய ஆபரேஷன் நடத்தக் காரணமாக இருந்த மதுரோ யார்.. இவரது பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
பஸ் டிரைவர்
1962 நவம்பர் 23ம் தேதி அங்கிருந்த தொழிற்சங்கத் தலைவர் ஒருவரின் மகனாகப் பிறந்தவர் நிக்கோலஸ் மதுரோ. 1990களின் தொடக்கத்தில் பேருந்து ஓட்டுநராக மதுரோ பணிபுரிந்தார். அப்போது 1992ல் நடந்த ராணுவ அதிகாரி ஹியூகோ சாவேஸ் ஆட்சி கவிழ்ப்பு தோல்வியில் முடிந்த நிலையில் சாவேஸ் சிறையில் வைக்கப்பட்டார். சரியாக அந்தக் காலகட்டத்தில் தான் மதுரோ சாவேஸின் இடதுசாரி திட்டத்தின் தீவிர ஆதரவாளராக மாறினார். ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்குச் சிறையில் தள்ளப்பட்ட சாவேஸை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனப் பிரச்சாரம் செய்தார்.
1998ல் சாவேஸ் அதிபரான நிலையில், மதுரோ அரசியலில் நுழைந்தார். தேசிய சட்டமன்றத் தலைவர், பின் வெளியுறவு அமைச்சர் எனப் பல்வேறு பதவிகளை வகித்தார்.. வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைப் பயன்படுத்தி சர்வதேச கூட்டணிகளை உருவாக்கத் தீவி ராக முயன்றார்.. சாவேஸின் விருப்பத்திற்குரிய தலைவராக மதுரோ மாறினார். இதன் காரணமாகவே உயிரிழப்பதற்கு முன்பே, மதுரோவை தனது வாரிசாகப் பகிரங்கமாக அறிவித்தார் சாவேஸ்.
பல்வேறு புகார்கள்
சாவேஸின் மறைவுக்குப் பிறகு, 2013ல் மதுரோ குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிபர் தேர்தலில் வென்றார்.. இருப்பினும், மதுரோ ஆட்சி அவ்வளவு ஒன்றும் சிறப்பானதாக இல்லை. அவரது ஆட்சிக்காலத்தில் பணவீக்கம் உச்சம் தொட்டது. உணவு-மருந்துப் பற்றாக்குறை அதிகரித்தது.. இதனால் அதிகளவில் மக்கள் வெனிசுலாவில் இருந்து வெளியேறினர். 2014, 2017 ஆண்டுகளில் நடந்த போராட்டங்களை மிகக் கடுமையாக ஒடுக்கினார். மேலும், அவர் மீது தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
புகார்கள்
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மதுரோ அரசின் மீது கடுமையான தடைகளை விதித்தன. ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டது. இருப்பினும், அதை அவர் திட்டவட்டமாக மறுத்தார். இதற்கு மத்தியில் தான் 2024 தேர்தல் நடத்தப்பட்டது. 2025ல் அவர் மீண்டும் மூன்றாவது முறையாக அதிபராகப் பதவியேற்றார். அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பல ஆயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை கண்டறியும் குழுவும் கூட, வெனிசுலா போலீசார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. 10 ஆண்டுகளுக்கு மேலாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும், மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
நோபல் பரிசும் சர்வதேச கவனமும்
இந்தச் சூழலில் தான் கடந்த 2025க்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. இது வெனிசுலா அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள் குறித்த சர்வதேச கவனத்தைப் பெற்றன. மதுரோவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான மச்சாடோவின் போராட்டத்திற்கு அங்கீகாரமாக அமைந்தது. நோபல் பரிசுக்குப் பிறகு எழுந்த சர்வதேச கவனமும் அழுத்தமுமே அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குக் காரணமாக அமைந்துள்ளது.
-
B1/B2 Visa: காசு கொடுத்த 10 நாளில் அமெரிக்கா செல்ல விசா.. ப்ரீமியம் சேவையாம்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications