"நீங்க தப்பவே முடியாது!" இணையத்தில் பரவும் போலி ஆபாச படங்கள்! ஏஐ தொழில்நுட்பம் படுத்தும் பாடு! உஷார்
வாஷிங்டன்: ஏஐ தொழில்நுட்பம் இப்போது மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. அதேநேரம் இதனால் சில மோசமான பாதிப்புகளும் இருக்கவே செய்கிறது. அப்படி மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக deepfake pornography இருக்கிறது.
இப்போது நிகழ்கால உலகில் ஏஐ தொழில்நுட்பம் தான் மிகப் பெரிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தை சாட் ஜிபிடிக்கு முன், சாட் ஜிபிடிக்கு பின் என்றே பிரிக்கலாம்.

சாட்ஜிபிடி நாம் முதலில் பார்க்கும் ஏஐ கருவி இல்லை என்றாலும் கூட இதுவரை நாம் பார்த்ததிலேயே வலிமையான ஏஐ கருவியாக சாட்ஜிபிடி இருக்கிறது. என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லும், காதல் கடிதம் கேட்டால் அதையும் எழுதித் தரும்.
மோசமான பாதிப்பு: ஏஐ கருவிகளால் நமக்குப் பல நன்மைகள் இருந்தாலும் கூட, இதை வைத்து சிலர் தவறான மோசமான செயல்களிலும் ஈடுபடவே செய்கிறார்கள். ஏஐ இமேஜிங் பல நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தலாம். விளம்பரங்கள் உள்ளிட்டவைக்கும் பயன்படுத்தலாம். இருப்பினும், சிலர் பெண்களுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒன்றிற்கும் இதை பயன்படுத்தும் அபாயம் இருக்கிறது. அதுதான் டீப்ஃபேக் ஆபாச படங்கள் -deepfake pornography.
டீப்ஃபேக்கு என்பது ஏஐ மூலம் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட வீடியோக்கள் மற்றும் படங்கள் ஆகும். அதாவது ஆபாச நட்சத்திரங்களின் முகத்திற்குப் பதிலாகப் பிரபலங்களின் முகத்தை அதற்கு மேல் வைத்து, அவர்களின் ஆபாசப் படம் என்பது போல காட்டுவதே இந்த டீப்ஃபேக் ஆபாசப் படங்கள் ஆகும். சில ஆண்டுகளாகவே இவை பயன்படுத்தப்பட்டு வந்தாலும் கூட, ஏஐ தொழில்நுட்பம் இதை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளது என்றே சொல்லலாம்.
ஆபாசப் படங்கள்: இப்போது இணையத்தில் செல்வாக்கு செலுத்துவோர் உள்ளிட்ட பிரபலங்களை வைத்து இதுபோன்ற ஆபாசப் படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். இப்போது ஏகப்பட்ட தளங்களில் நம்மால் இதுபோன்ற போலி வீடியோக்களை பார்க்க முடியும். சிலர் தங்கள் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளப் பிரபலங்கள் மட்டுமின்றி அவர்களைச் சுற்றி இருக்கும் பெண்களின் படங்களையும் கூட அவர்கள் அனுமதி இல்லாமல் ஆபாசப் படங்களைத் தயாரிக்கப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்
அதிநவீன டீப்ஃபேக்குகளை உருவாக்குவது எளிதாகிவிட்டதால், பிரச்சனை இப்போது மோசமாகவிட்டதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். அதிலும் இணையத்தில் இருக்கும் போட்டோக்களில் இருந்து பயின்று ஏஐ தொழில்நுட்பம் மேலும் மேலும் நவீனமாகும்போது அவை பிரச்சினையை மேலும் மோசமாக்குவதாகவே வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஏஐ தொழில்நுட்பம் மூலம் நன்மைகள் இருந்தாலும் இதுபோல தீங்கு விளைவிக்கும் காரியங்களும் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.
வெல்ல முடியாது: இது குறித்து நோயல் மார்ட்டின் என்ற பெண் கூறுகையில், "10 ஆண்டுகளுக்கு முன்பு என்னைக் குறித்த டீப் பேக் ஆபாசப் படத்தை நானே இணையத்தில் பார்க்க நேர்ந்தது. இந்த நாள் வரை என்னை ஆபாசமாகச் சித்தரித்தவர்கள் யார் என்று தெரியவில்லை. இந்தப் படங்களை நீக்க நான் பல்வேறு தளங்களைத் தொடர்பு கொண்டேன்.
இருப்பினும், சிலர் எனக்கு ரெஸ்பான்ஸ் கூடச் செய்யவில்லை. அதை நீக்கினாலும் கூட மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கிறது. இதில் சாதாரண நபர்கள் வெல்வது மிகக் கடினம். இதற்கு தேசியளவில் சட்டம் கொண்டு வருவது மட்டுமே ஒரே தீர்வாக இருக்கும்" என்றார்.
இருப்பினும் இணையம் என்பது பல்வேறு நாடுகளைக் கடந்து இருப்பதால் இணையத்தை நிர்வகிப்பது சாத்தியமற்றது என்பதே ஆபத்தான உண்மையாக உள்ளது.












Click it and Unblock the Notifications