விண்கற்களை கண்டு அலறும் விஞ்ஞானிகள்.. உலகிற்கு பேராபத்து இதனால்தானா! விளக்கும் ஆய்வாளர்கள்!
வாஷிங்டன்: விண்கற்கள் பூமியை மோதப்போகிறது என்றும், இதனால் உலகம் அழியப்போகிறது எனவும் செய்திகள் பல வந்துக்கொண்டிருக்கின்றன. உண்மையில் விண்கற்கள் அவ்வளவு ஆபத்தானதா? ஆம் எனில் ஏன்? என்கிற கேள்விகளுக்கு இந்த செய்தி விடையளிக்க முயல்கிறது.
நமது பூமியே விண்கற்களால்தான் ஆகியிருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது விண்வெளியில் உள்ள சிறிய பாறைகளைதான் விண்கற்கள் என்று அழைக்கிறோம். இவை ஒன்று சேர்ந்துதான் கிரகங்களை உருவாக்குகிறது. கிரகமாக உருவாக முடியாத கற்கள் பித்து பிடித்து விண்வெளியை சுற்றி வருகின்றன. அதில் சிலவை கிரகங்களின் மீது மோதுகின்றன. இப்படி மோதுவதன் மூலம் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் அவை அந்த கிரகத்தையே அழிக்குமா? என்பதுதான் கேள்வி.

உதாரணத்திற்கு பூமியை எடுத்துக்கொள்வோம். சில கோடி ஆண்டுகளுக்கு முன்னைர் டைனோசர்கள் இங்கு வாழ்ந்து வந்தன. ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் வருமே அதுபோலத்தான். ஆனால், இன்று இதில் ஒன்னு கூட உயிரோடு இல்லை. காரணம் விண்கல் மோதல்தான். டைனோசர் வாழ்ந்த காலத்தில் சுமார் 10-20 கி.மீ விட்டம் கொண்ட விண்கல் ஒன்று பூமியை மணிக்கு 96,000 கி.மீ வேகத்தில் தாக்கியது.
இதனால் மிகப்பெரிய அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. மட்டுமல்லாது எரிமலை வெடிப்பு உருவாகி நெருப்பு குழம்பு வெளியே வர தொடங்கியது. தூசியும், புகையும் வானத்தையே மறைத்தன. பல ஆண்டுகளுக்கு இந்த புகை பூமியை சூழ்ந்திருந்தது. எனவே சூரிய ஒளி உள்ளே வரவில்லை. இதனால் தாவரங்களால் ஒளி சேர்க்கை செய்ய முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அழிய தொடங்கின. திடீரென மாறிய வானிலை, நிலநடுக்கமும், எரிமலை வெடிப்பும் ஏற்கெனவே உயிரினங்களை அச்சுறுத்தியிருந்தது.
இப்படியான சூழலில் தாவரங்களும் இல்லாததால் சைவ உண்ணிகள் இறக்க தொடங்கின. அசைவ உண்ணிகளுக்கு இதனால் இரை கிடைத்தாலும், அது கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே நீடித்தது. நீண்ட நாட்களுக்கு டைனோசர்களால் உணவு இல்லாமல் இருக்க முடியவில்லை. எனவை அவையும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்தன. அத்துடன் சேர்ந்தது உலகின் 70% உயிர்கள் மொத்தமாக அழிந்துபோயின. இதில் டைனோசர் படிமங்களையும் வேறு சில உயிர்களின் படிமங்களையும் மட்டுமே நாம் கண்டுபிடித்திருக்கிறோம். மற்ற படிமங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படி மீதம் இருந்த 30% உயிர்களில் சில பரிணாமமடைந்தன. அதில் நாமும் ஒன்று.
ஆக உயிர்களை அழிக்கக்கூடிய அளவுக்கு சக்தி விண்கற்களுக்கு இருக்கிறது. இன்னொரு முறை இப்படியான விண்கல் பூமியில் மோதினால் மனித குலம் முழுவதுமாக அழிந்துவிடும். பூச்சி இனங்கள் இந்த உலகை ஓவர் டேக் செய்ய தொடங்கிவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications