உங்க நாய் பாசமாக நக்குதா? அதில் "அன்பு" மட்டும் இல்லை "ஆபத்தும்" இருக்கு- உயிரே போகலாம்! புது அலர்ட்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நாய்கள் எப்போதும் தங்கள் பாசத்தையும் அன்பையும் நம்மை நக்குவது மூலமாகவே வெளிப்படுத்தும். ஆனால், இது மிக மோசமான பாதிப்பை கூட ஏற்படுத்தலாம் என இப்போது எச்சரிக்கிறார்கள்.

இப்போது பலரும் தனிமையை போக்கவும் வீட்டில் பாதுகாப்பிற்கும் நாய்களை வாங்கி வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளிநாட்டு நாய்களை மட்டுமே பலரும் வளர்த்து வந்தார்கள்.

Why Dogs Licking Owners Face might turn into Fatal

ஆனால், இப்போது தான் நாட்டு நாய்களை வளர்க்கவும் பொதுமக்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கன்னி, கோம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம் ஆகிய நாட்டு நாய் இனங்களையும் பொதுமக்கள் விரும்பி வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.

நாய்கள்: என்ன வகை நாயாக இருந்தாலும் சரி நாய் வைத்திருக்கும் அனைவருக்குமே தெரியும்.. நாய் அதன் அளவற்ற பாசத்தை எப்போதும் மனிதர்கள் மீது தான் காட்டும். குறிப்பாக நாய்கள் தங்களுக்குப் பிடித்தவர்களின் முகத்தை நக்கிக் கொண்டே வாலை ஆட்டியே தனது அன்பே காட்டும்.

சில உரிமையாளர்கள் முகத்தில் நாய் நக்கக்கூடாது எனத் தள்ளிவிடுவார்கள். ஆனால், பெரும்பாலானோர் அதை ஊக்குவிக்கும் வகையிலேயே நடந்து கொள்வார்கள். இது நாயை வளர்க்கும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், உங்கள் உடலுக்கு இது மோசமான பாதிப்பையே ஏற்படுத்துமாம்.

செல்ல பிராணி: ஏனென்றால் உங்கள் செல்ல பிராணி ஒரு நாளில் எதை எல்லாம் நக்குகிறது என யோசித்துப் பாருங்கள். உணவு, தண்ணீரில் ஆரம்பித்து பாதங்கள், பொம்மைகள், அடிப்பகுதி மற்றும் பிறப்புறுப்புகள் என அனைத்தையும் நக்கும். இப்போது யோசித்து பாருங்கள்., அப்படியே வந்து அது உங்கள் முகத்தை நக்கினால் என்ன ஆகும். இது நமது உடலில் பல வித சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

நாய் நமது முகத்தை நக்குவதால் நமக்கு மகிழ்ச்சி ஏற்படும். இதனால் மன ரீதியாக சில நன்மைகள் என்றாலும் கூட இதனால் ஏற்படும் நல்லதை விட கெடுதலே அதிகமாம். நோயெதிர்ப்பு குறைபாடு இருப்போர். திறந்த காயங்கள் உள்ளவர்கள் நிச்சயமாக நாய் உங்கள் முகத்தை நக்குவதைத் தடுக்க வேண்டும். மேலும், உங்களுக்கு வெட்டுக் காயம் இருக்கும் இடங்களை நாய் நக்குவதை அனுமதிக்கவே கூடாது. இதனால் பல ஆபத்துகள் ஏற்படும்.

ஆபத்து ஏன்: பொதுவாக நாய்களின் வாயில் பல நுண்ணுயிரிகள் இருக்கும். அவற்றில் பெரும்பாலான நுண்ணுயிரிகளால் மனிதர்களுக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படாது. இருப்பினும், சில அரிதான சந்தர்ப்பங்களில் அதன் வாயில் ஜூனோஸ்கள் இருக்கலாம். அதாவது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸ் இருக்கலாம். அதுபோன்ற சூழல்களில் மனிதர்களுக்கு அது ஆபத்தானதாக மாறலாம்.

இருப்பினும், சமீப காலங்களில் நாய் நக்குவதால் அல்லது அதன் உமிழ்நீரால் அதிகமாக யாரும் நோய்வாய்ப்பட்டது இல்லை. ஆனால், சில அரிய நிகழ்வுகளில் உதாரணமாக, கேப்னோசைட்டோபாகா கேனிமோர்சஸ், உயிருக்கு ஆபத்தான செப்சிஸை ஏற்படுத்தி உள்ளது. இவை நாய் உமிழ்நீருடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவலாம், இது மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட தீவிர விளைவுகளை ஏற்படுத்தலாம்.

ஜூனோடிக்கால் எளிதாகப் பாதிக்கும் நிலையில் உள்ளவர்கள், அதாவது நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த, குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் தள்ளி இருப்பதே பெஸ்ட். மேலும் வீடுகளில் நாய் வளர்ப்போர் வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வதும் அவசியம். அப்போது தான் உங்கள் செல்ல பிராணிகளுக்கும் நல்லது.. உங்களுக்கும் நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+