Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சத்தமே இல்லாமல் பரவும் புது பெருந்தொற்று.. அதுவும் ஆண்களுக்கு தான் பாதிப்பாம்.. பின்னணியில் AI?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஏஐ கருவிகள் நமது வாழ்க்கையை ஈஸியான ஒன்றாக மாற்றினாலும் கூட அவை சத்தமே இல்லாமல் ஒரு பெருந்தொற்றை பரப்பிக் கொண்டிருப்பதாக வல்லுநர்கள் வார்னிங் கொடுத்துள்ளனர்.

இந்த காலம் சந்தேகமே இல்லாமல் ஏஐ கருவிகளுடையது என்று நாம் சொல்லலாம். அதிலும் குறிப்பாக சாட்ஜிபிடி வருகை ஏஐ துறை வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. யாகுமே எதிர்பார்க்காத பல வேலைகளை ஏஐ கருவிகள் சத்தமே இல்லாமல் செய்கிறது.

 Why experts warns AI Girlfriends Are Making Men Lonelier and causing Epidemic

இந்த ஏஐ கருவிகள் மூலம் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. இதை வைத்து புது புது தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படிதான் அமெரிக்காவில் ஏஐ கேர்ள் பிரண்டுகள் இப்போது டிரெண்டாகி வருகிறார்கள்.

அலர்ட்: இதைப் பார்க்க சூப்பராக இருந்தாலும் கூட இது இளைஞர்களிடையே தனிமை தொற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இந்த அருமையாக கேர்ள் பிரண்டுகள் தனிமையில் இருக்கும் ஆண்களை மேலும் பிரச்சினைக்குரிய இடத்தில் தள்ளுவதாகவும் இது புதிய தனிமை பெறுந்தொற்றை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர் லிபர்ட்டி விட்டர்ட் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக லிபர்ட்டி விட்டர்ட் மேலும் கூறுகையில், "நான் கல்லூரியில் பாடம் நடத்தும் போது.. எந்த சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறீர்கள் எனக் கேட்டேன். அப்போது மாணவர் ஒருவர் தனக்கு ஏஐ காதலி இருப்பதாகச் சொன்னது அதிர்ச்சி அடைய வைத்தது.. அதிலும் அந்த மாணவர் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் தனக்கு ஏஐ காதலி இருப்பதாகச் சொல்கிறார். இது ஏஐ கேர்ள் பிரண்டு முறை எந்தளவுக்குப் பரவியுள்ளது என்பதையே காட்டுகிறது" என்றார்.

ரொம்ப ஆபத்து: இந்த விருச்சுவல் ஏஐ கருவிகளுடன் நாம் உரையாடலாம். நமக்கு ஏற்றார் போல கேர்ள் பிரண்டுகளை நாமே கூட உருவாக்கலாம். அப்படி தற்போதுள்ள முக்கிய ஏஐ கருவிகளில் ஒன்று ரோப்ளிகா (Replika). இந்த ஏஐ கேர்ள் பிரண்ட் செயலியை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் பெருந்தொற்று சமயத்தில் மட்டும் இதன் பயன்பாடு 35 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தங்கள் பயனாளிகள் ரோப்ளிகாவுடன் பழகி, காதலில் விழுந்து இன்னும் சிலர் திருமணம் கூடக் கொண்டதாகவும் கூறியுள்ளனர்.

இது குறித்து பேராசிரியர் விட்டர்ட் கூறுகையில், "இதில் பல சிக்கல்கள் உள்ளது. இது உண்மையில் ஏஐ கேர்ள் பிரண்ட் எனச் சொல்லவே முடியாது. உங்களுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பதை கற்றுக் கொள்ளும் இந்த ஏஐ கருவிகள், அதன் பிறகு எப்போதும் உங்களுக்குப் பிடித்தது போலவே பேசும். உங்களுக்குப் பிடிக்காத விஷயங்களைப் பேசவே பேசாது. அதன் பிரச்சினைகளையும் சொல்லாது. எனவே, இதில் நீண்ட காலம் இருக்கும் இளைஞர்களால் இங்கே நிகழ் காலத்தில் நடக்கும் உறவுகளில் வரும் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாது.

என்ன பிரச்சினை: இப்போது இளைஞர்கள் பலரும் பெண்களைத் தவிர்த்துவிட்டு இந்த ஏஐ காதலிகளைத் தேர்வு செய்கிறார்கள். இது சமூகத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் இளைஞர்களுக்கு உண்மையான உறவுகளில் நாட்டம் குறையும் இதனால் பிறப்பு விகிதத்தைப் பாதிக்கும். இது மிகவும் சைலெண்டான ஒரு தொற்று நோயைப் போன்றது. இது மனிதர்கள் மத்தியில் வேகமாகப் பரவி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது மன ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தும்" என்றார்.

ஏற்கனவே 2022இல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு 34 சதவீத பெண்கள் மட்டுமே சிங்கிளாக இருக்கும் நிலையில், ஆண்களில் 63 சதவீதம் பேர் சிங்கிளாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஏஐ கேர்ள் பிரண்டுகள் மேலும் மேலும் இளைஞர்களைத் தனிமையில் தள்ளுகிறது. இதை நிலை நீட்டித்தால் அது பல மனநிலை வித பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+