இஸ்ரேல் போரை விடுங்க..21 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு பின்லேடன் எழுதிய லெட்டர் தெரியுமா! பரபர
வாஷிங்டன்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கு ஒசாமா பின்லேடன் எழுதிய கடிதம் ஒன்று இப்போது டிரெண்டாகி வருகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தொடர்ந்து நடந்து வருகிறது. முதலில் ஹமாஸ் இஸ்ரேல் நாட்டில் நுழைந்து தீவிர தாக்குதல் நடத்தி, பலரையும் பிணையக் கைதிகளாகப் பிடித்து வந்தது.

அதன் பிறகு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கிய இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
கடிதம்: உலக நாடுகளைப் பொறுத்தவரை பெரும்பாலான நாடுகள் இதில் ஹமாஸுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா இதில் யூதர்களின் நாடான இஸ்ரேலுக்கு முழு ஆதரவு கொடுத்துள்ளது. இஸ்ரேலுக்குத் தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. இதற்கிடையே அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு எழுதிய கடிதம் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த கடிதம் இணையத்தில் டிரெண்டாகி வந்தது.
கடந்த 2002இல் பின்லேடன் இந்த கடிதத்தை எழுதியிருந்தார். இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் அமெரிக்கா இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில், இந்தக் கடிதத்தைப் பகிர்ந்து பலரும் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். முதலில் இந்த கடிதத்தைச் சிலர் டிக்டாக்கில் பகிர்ந்த நிலையில், பின்னர் அது ட்விட்டரிலும் பகிரப்பட்டது. இந்த கடிதம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மோதல்களில் அமெரிக்காவின் தலையீடு குறித்த கேள்வி எழுப்புவதாக நெட்டிசன்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.
பின்லேடன்: அந்தக் கடிதத்தை பின்லேடன் அமெரிக்க மக்களுக்கு எழுதியதாகக் கூறப்படுகிறது. அதில் அவர், "நாங்கள் ஏன் போராடுகிறோம், ஏன் அமெரிக்காவை எதிர்க்கிறோம்?" மற்றும் "உங்களிடம் (அமெரிக்காவிடம்) இருந்து என்ன வேண்டும்" என்று பல கேள்விகளைக் கேட்டு, அதற்கான பதிலைக் கொடுத்திருப்பது போல இந்த கடிதம் அமைந்திருந்தது. இந்த கடிதம் இணையத்தில் டிரெண்டான நிலையில், பலரும் பல வித கேள்விகளை எழுப்பினர்.
அதிலும் குறிப்பாக அமெரிக்கர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர்.. தாங்கள் ஒசாமா பின்லேடன் நடத்திய இரட்டை கோபுர தாக்குதலை ஆதரிக்கவில்லை என்று குறிப்பிட்டும் அமெரிக்க மக்கள் அதேநேரம் ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்காவின் தலையீடுகள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர். பலரும் கிட்டதட்ட இதே கருத்துகளை வலியுறுத்தி கேள்விகளை எழுப்பினர். இருப்பினும், மறுபுறம் இது ஒசாமா பின்லேடன் தனது செயல்களை நியாயப்படுத்த எழுதிய கடிதம் என்று குறிப்பிடுகிறார்கள்.
பரபரப்பு: இந்த கடிதம் அமெரிக்காவில் டிக்டாக் தளத்தில் டிரெண்டானது. இது பெரிய சர்ச்சையானது.. அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் இதுபோன்ற விஷ கருத்துகளைப் பரப்பவே சீன நிறுவனமான டிக்டாக் இதுபோல திட்டமிட்டுச் செயல்பட்டு வருவதாகச் சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதற்கிடையே அந்த கடிதத்தை டிக்டாக் தளம் நீக்கியுள்ளது. டிக்டாக் பாலிசிக்கு எதிராக இந்த கடிதம் உள்ளதாகவும் வெளிப்படையாகப் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்தக் கடிதம் இருப்பதால் இதை தங்கள் தளத்தில் இருந்து நீக்குவதாக டிக்டாக் அறிவித்துள்ளது. மேலும், #lettertoamerica என்ற அந்த ஹேஷ்டேக்கையும் டிக்டாக் நீக்கியுள்ளது.
-
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம் -
‘குட்டி இந்தியா’வை தாக்கிய ஈரான்.. திடீர் கோபம் ஏன்? இஸ்ரேல் டிமோனோ அட்டாக்கின் பின்னணி -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
ஈரான் அணுசக்தி மையத்தை குறி வைத்த அமெரிக்கா! ருத்ர தாண்டவம் ஆடிய டிரம்ப்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications