பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த அதிபர் பைடன்! அமெரிக்கா செல்லும் பிரதமர்.. ஏன் ரொம்ப முக்கியம்
அமெரிக்க அதிபர் பைடன் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வாஷிங்டன்: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நெருக்கமான ஒரு உறவே இருந்து வரும் நிலையில், அமெரிக்கா வருமாறு பிரதமர் மோடிக்கு அதிபர் பைடன் அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே மிகச் சிறப்பான ஒரு உறவே இருந்து வந்துள்ளது. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான ஏற்றுமதி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தே வருகிறது.
அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே நல்ல ஒரு உறவே இருந்து வருகிறது. பல சர்வதேச பிரச்சினைகளில் இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா ஆதரித்தே வருகிறது.

இந்தியா அமெரிக்கா
அதேபோல உச்சி மாநாடுகள் போன்ற பொது இடங்களில் இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் இடையே தொடர்ச்சியாகப் பல கேஷுவல் சந்திப்புகள் நடைபெறுகிறது. கடந்தாண்டு இந்தோனேசியாவில் நடந்த ஜி20 மாநாட்டில் கூட கிளம்பும் முன், பிரதமர் மோடிக்கு ஒரு சல்யூட் அடித்துவிட்டுக் கிளம்பினார் ஜோ பைடன். அந்த மாநாடு நடந்த போதும், பிரதமர் மோடியைத் தேடி வந்து பேசினார் அதிபர் பைடன். இப்படிப் பல சம்பவங்கள் நடந்துள்ளன

அழைப்பு விடுத்த பைடன்
இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடியை அழைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக அமெரிக்க அதிபரின் இந்த அழைப்பு கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.. இப்போது இரு தரப்பு அதிகாரிகளும் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் ஏற்ப தேதியை இறுதி செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மேலும், இது ஆரம்பக்கட்ட திட்டம் தான் என்றும் திட்டம் இறுதியாக இன்னும் பல நிலைகள் உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது
இந்த ஆண்டு ஜி-20 தொடர்பாக இந்தியா தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. செப். மாதம் ஜி20 உச்சி மாநாடு நடக்கும் நிலையில், அதில் எப்படியும் அதிபர் பைடன் கலந்து கொள்வார். இதனால் தேதிகளை இறுதி செய்வதில் அதிகாரிகளுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜூன் அல்லது ஜூலை மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் சில நாட்கள் தான் பிரதமர் மோடிக்கு உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி எந்தவொரு திட்டமும் இல்லை. எனவே, இந்த மாதங்களில் தான் தேதி இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.

அமெரிக்க நாடாளுமன்றம்
மேலும், அப்போது அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டும் செயல்படும் என்பதால் அதில் கூட பிரதமர் மோடி பங்கேற்கலாம். இந்தாண்டு இறுதியில் ஜி20 மாநாடு மட்டுமின்றி ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்குத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதையும் கருத்தில் வைத்தே பயண தேதி இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது. இந்தத் திட்டத்தின் பணிகள் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் இது குறித்து அதிகாரிகள் கூடுதல் தகவல்கள் தரத் தயங்குகின்றனர். அமெரிக்காவிடம் இருந்து இந்த அழைப்பு எப்போது வந்தது. கொடுத்தது யார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இல்லை எனத் தெரிகிறது.

ஏன் முக்கியம்
அமெரிக்க அதிபர் பைடன் முன்னணி அறிவுசார் பொருளாதாரங்களாக இருக்கும் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வலுவான உறவு நிச்சயம் தேவை என்று நம்புவதாகவும் எனர்ஜி, சுகாதாரம், பருவநிலை மாற்றம் எனப் பல விஷயங்களில் இந்தியாவுக்கும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பைடன் நம்புவதாலேயே பைடன் இந்தியாவுடன் நல்ல ஒரு உறவை வைத்துக்கொள்ள விரும்புகிறார். மேலும், இந்தோ பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் நிலையில், அதைச் சமாளிக்கவும் இந்தியாவுடன் நல்ல உறவை அமெரிக்கா வைத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா
இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. ஜி20 என்பது உலகின் தலைசிறந்த டாப் 20 நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பாகும். இந்த கூட்டமைப்பின் தலைவர் பதவி சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டிற்கும் வழங்கப்படும் நிலையில், இந்தியாவுக்கு இந்தாண்டு தலைமை பதவி கிடைத்துள்ளது. இந்தச் சூழலில் அமெரிக்காவில் இருந்து பிரதமர் மோடிக்கு அழைப்பு வந்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
அமெரிக்காவின் 'ஹார்முஸ்' முற்றுகையில் இங்கிலாந்து பங்கேற்காது.. ட்ரம்ப்புக்கு 'நோ' சொன்ன பிரிட்டன் -
அமெரிக்க போர் கப்பல்கள் கண்ணில் மண்ணை தூவிய சீனா.. அசால்டாக ஹார்முஸை கடந்து பயணம்! அது எப்படி -
ஆப்பு வச்சுடுச்சே அமெரிக்கா..ஈரானை வட்டமிட்ட ஸ்டீல் அரக்கன்கள்! படபடவென பறந்த எண்ணெய் ரேட்! சிக்கல்? -
"5 vs 20.." விட்டு கொடுக்காத ஈரான்.. விடாப்பிடியாக இழுக்கும் அமெரிக்கா.. அடுத்து என்ன நடக்கும்? -
இஸ்லாமாபாத் டூ இஸ்ரேல்! இடையே வந்த அந்த ஒரு போன் கால்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை பெயிலானது ஏன்? -
அதிபர் பதவியை இழக்கும் டிரம்ப்? களத்தில் இறங்கிய அந்த 70 பேர் + மாஜி அமெரிக்க உளவு துறை தலைவர்! -
டிரம்ப்பிற்கு பதிலடி கொடுக்க வரும் புதின்? அமெரிக்காவுக்கு ‘செக்’ வைத்த ரஷ்யா! உலக போர் ஆபத்து? -
ஹார்முஸ் ஜலசந்தியில்.. அமெரிக்கப் படை முற்றுகை.. ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு.. உலகளவில் பதற்றம்! -
ஈரான் பிடிவாதம்.. விடாமல் காய் நகர்த்திய டிரம்ப்.. உலகையே உலுக்கிய அந்த 20 மணி நேரம்.. நடந்தது என்ன? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி












Click it and Unblock the Notifications