"சர்வநாசம்.." அடுத்து போலந்து உடன் ரஷ்யா போர்? இது மட்டும் நடந்தால் 3ஆம் உலக போர் கன்பார்ம்.. எப்படி
வாஷிங்டன்: உக்ரைனுக்குப் பிறகு போலந்து நாட்டை ரஷ்யா தாக்கலாம் எனச் சொல்லப்படும் நிலையில், இது மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கமாக இருக்கும் என்று உலக நாடுகள் அஞ்சுகின்றனர்.
ரஷ்யா தங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதால் போருக்கான தயாராகும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாக போலந்து பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அவர் அஞ்சியபடி நடந்தால் அது மூன்றாம் உலகப் போரையே தொடங்கி வைக்கும் நிகழ்வாக அமைந்துவிடும். அது ஏன் போலந்தை தொட்டால் அது எப்படி உலகப் போராக மாறும் என்பது குறிக்கு நாம் பார்க்கலாம்.
ரஷ்யாவில் சமீப காலமாக நடக்கும் நடவடிக்கைகளையும் கூட நாம் கவனித்தே ஆக வேண்டும். அங்கே ராணுவத்தின் பலத்தைத் திரட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும், முக்கியமான கொள்கை முடிவையும் ரஷ்யா எடுத்துள்ளது. அதாவது ரஷ்ய இராணுவத்தில் சேரும் வெளிநாட்டு நபர்கள் ரஷ்ய குடியுரிமையை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டினரையும் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்க புதின் ஆர்வமாக உள்ளது தெரிகிறது.
மேலும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து, குறிப்பாக ஜெர்மனியில் இருந்து கசிந்த பாதுகாப்பு ஆவணங்கள் சர்வதேச பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது. ஜெர்மனியின் அந்த லீக் டாக்குமெண்டில் ரஷ்ய மிகவும் ஆக்ரோஷமான போக்கை கையாண்டு வருவதாகவும் இந்த ஆண்டு ஜூன் மாதமே கூட ரஷ்யா அண்டை நாடுகள் மீதான தாக்குதலை ஆரம்பிக்கலாம் என்றும் கூறியிருந்தது. அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இதைப் பயன்படுத்தி நேட்டோ நாடுகள் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், போலந்து மீது ரஷ்யா தாக்குதலை ஆரம்பித்தால் அது மூன்றாம் உலகப் போருக்கே காரணமாக அமைந்துவிடும். உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் போதும் இதே தான் சொன்னார்கள்.. அப்படி எதுவும் நடக்கவில்லையே என்ற கேள்வி உங்களுக்கு வரும். ஆனால், உக்ரைனுக்கும் போலந்து நாட்டிற்கும் இடையே முக்கியமான ஒரு வேறுபாடு இருக்கிறது. அதுதான் நேட்டோ அமைப்பு.
போலந்து ஏற்கனவே நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருக்கிறது. ஆனால், உக்ரைன் இல்லை. உக்ரைன் நேட்டோவில் இணைவது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தியதால் தான் கோபமடைந்து புதின் உடனடியாக போரை ஆரம்பிக்க உத்தரவிட்டார். அதென்ன நோட்டோ.. அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் எனக் கேட்கிறீர்களா.. North Atlantic Treaty Organization என்பது தான் நேட்டோ..
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் சர்வதேச அளவில் சக்திவாய்ந்த நாடுகளாக உருவெடுத்தது. அப்போது சோவியத் ஒன்றியம் தனது கம்யூனிச கொள்கைகளைப் பரப்ப மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கும் என்று சந்தேகப்பட்ட மேற்குலக நாடுகள் இணைந்து உருவாக்கியது தான் நேட்டோ அமைப்பு.
ஆரம்பத்தில் இந்த அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் என 12 நாடுகள் தான் இருந்தன. அதன் பின்னர் பல்வேறு நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைந்த நிலையில், இப்போது மொத்தம் 31 நாடுகள் இதில் உறுப்பு நாடுகளாக இருக்கிறது.
நேட்டோ ஒப்பந்தத்தின்படி ஒரு நேட்டோ உறுப்பு நாடு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டால் மற்ற நாடுகள் வந்து உதவும்.. அதாவது இப்போது போலந்து மீது ரஷ்யா தாக்குதலை ஆரம்பித்தால் அதற்கு அமெரிக்கா உட்பட அனைத்து நேட்டோ நாடுகளும் நேரடியாகவே வந்து உதவும். ஒரு பக்கம் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் திரண்டால் மறுபக்கம் ரஷ்யா தனது நட்பு நாடுகளைச் சேர்க்கும் இது அடுத்த உலகப் போருக்கு வித்திட்டும் வாய்ப்பு இருப்பதாக உலக நாடுகள் அஞ்சுகின்றன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications