10 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் கர்ப்பமான விவகாரம்.. போலீஸ் தீவிர விசாரணை
பத்து வருடங்களாக கோமாவில் இருந்த பெண்ணை சீரழித்த நபரை அமெரிக்கப் போலீசார் தேடி வருகின்றனர்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் 10 ஆண்டுகளாக கோமாவில் உள்ள பெண் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுயநினைவு இல்லாமல் இருந்த அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் விபத்தொன்றில் சிக்கினார். இதில் அவர் கோமா நிலைக்குச் சென்றார். எனவே, அவர் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பீனிக்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோமாவில் இருந்த அப்பெண்ணை பலாத்காரம் செய்தது யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர், டாஷா மெனாகர் கூறுகையில், ''கோமா நிலையில் உள்ள பெண்ணை கர்ப்பமாக்கிய கயவனை பிடிக்க, மருத்துவமனையில் பணியாற்றும், ஆண் ஊழியர்களிடம், டி.என்.ஏ., எனப்படும் மரபணு சோதனை நடத்தப்பட வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications