"என் பெர்மிஷன் இல்லாம என்னை பெத்தது தப்பு.." பெற்றோர் மீது கேஸ் போட்ட பெண்.. அம்மாடி யாரும்மா நீ
வாஷிங்டன்: தனது அனுமதியின்றி தன்னைப் பெற்றெடுத்ததற்காகத் தனது பெற்றோர் மீது பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளது இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.
அமெரிக்காவில் எப்போதுமே பல வினோதமான சம்பவங்கள் நடக்கும் என்பதை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். ஆனால், இந்தச் சம்பவம் அனைத்தையும் தூக்கிச் சாப்பிடுவதாக இருக்கிறது.

கேஸ்: அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்த காஸ் தியாஸ் என்ற பெண், தனது அனுமதியின்றி தன்னைப் பெற்றெடுத்ததற்காகத் தனது பெற்றோர் மீது வழக்குத் தொடுத்தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவே தலை சுத்துகிறது என்றால் வெயிட் பண்ணுங்க.. இது குறித்து அந்த பெண் கூறுவது மேலும் பகீர் கிளப்புவதாக இருக்கிறது.
காஸ் தியாஸ் மேலும் கூறுகையில், "எனக்கு உண்மையில் பூமியில் பிறக்க ஓகே தானா என்பதை அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு கேட்கவே இல்லை.. அதற்கான முயற்சியைக் கூட எடுக்கவில்லை" என்கிறார் அந்த பெண் ரொம்ப சீரியஸாக.. தனது விருப்பத்திற்கு எதிராகத் தன்னை பெற்றெடுத்த பெற்றோர் மீது வழக்குத் தொடர்ந்ததாகத் தெரிவிக்கும் அந்த பெண், இதேபோல ஏன் தனது குழந்தைகளிடம் ஏன் பெர்மிஷன் வாங்கவில்லை என்பதையும் விளக்கி உள்ளார்.
காரணம்: அவர் மேலும் கூறுகையில், "நான் எனது குழந்தைகளைத் தத்து எடுத்தேன். எனவே தான் என்னால் பிறக்கும் முன்பு பெர்மிஷன் வாங்க முடியவில்லை. நான் அவர்களைப் பெற்றெடுக்கவில்லை என்பதால் அவர்கள் இங்கே இருப்பது என் தவறு அல்ல. அதேநேரம் நீங்கள் இப்போது கர்ப்பமாக இருந்தால், உடனே ஒரு மந்திரவாதியைப் பிடியுங்கள்.. அவர் மூலம் உங்கள் குழந்தைகளிடம் பெர்மிஷன் வாங்கும் வழியைப் பாருங்கள்.
இதுபோல பெர்மிஷன் வாங்காமல் என்னைப் பெற்றெடுத்தார்கள் என்பதால் என் பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன். என்னைக் கருவாக உருவாக்கியது., நான் பிறந்து பிறகு வளர்த்தது அவர்கள் தான். எனது சம்மதம் இல்லாமலேயே இதையெல்லாம் அவர்கள் செய்துள்ளனர். வளர்ந்த பிறகு நானே வேலை செய்து என்னைக் கவனித்தும் கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் என்னிடம் விளக்கவே இல்லை.
சம்மதிக்கவில்லை: இதற்கு நான் சம்மதிக்கவும் இல்லை. நான் உண்மையில் பிறக்க விரும்புகிறேனா என்பதை அறிய அவர்கள் முயலக் கூடவில்லை. அதனால்தான் நான் அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்தேன். இப்போது நான் மற்ற குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோருக்கு எதிராக இதுபோல வழக்குத் தொடரச் சொல்லிக் கொடுத்து வருகிறேன். இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். இதுபோல வழக்கு தொடர்ந்தால் தான் காலம் முழுக்க வேலை செய்து கஷ்டப்படும் தேவை இருக்காது.
அதேநேரம் நீங்கள் தத்தெடுப்பது என்பது வித்தியாசமானது.. ஏனென்றால் அவர்கள் பூமியில் பிறக்க நீங்கள் காரணமாக இருக்க மாட்டீர்கள். சொல்லப் போனால் ஒரு நல்ல மனிதராக அந்த குழந்தைகளுக்கு உதவவே செய்கிறீர்கள்" என்று அவர் கூறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது டிக்டாக் தளத்திலும் பகிர்ந்துள்ளார்.
விவாதம்: டிக்டாக் பிரபலமான காஸ் தியாஸ் எப்போதும் நக்கல் தொனியில் இதுபோல வீடியோவை வெளியிடுவார். அதேபோல சும்மா நக்கலடிக்கேவ அவர் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கலாம் என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். அதேநேரம் மற்றொரு தரப்பு அவர் இணையத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள். இன்னும் சிலரோ எனது பணத்தை எல்லாம் காலி செய்ததற்காக நான் தான் எனது குழந்தைகள் மீது கேஸ் போட வேண்டும் என சீரிஸயாக பதிலளித்து வருகிறார்கள்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications