வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரிஸ்க்.. நீண்ட நேரம் வேலை பார்த்தால் உயிருக்கே ஆபத்து.. "ஹூ" எச்சரிக்கை

அதிக நேரம் வேலை பார்த்தால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வாரத்திற்கு 55 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால், அது உயிருக்கே ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது... இதுசம்பந்தமாக நடத்தப்பட்ட சமீபத்தில் ஆய்வில் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

Recommended Video

    நீண்ட நேரம் வேலை பார்ப்பது உயிருக்கு ஆபத்து.. WHO ஆய்வில் தகவல்

    இப்போது தொற்று அதிகமாகி உள்ளது.. கடந்த வருடமே தொற்று இந்தியாவுக்குள் வந்துவிட்டது.. அப்போதிருந்தே அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு விட்ட நிலையில், ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து வேலை பார்த்து வருகிறார்கள்..

    வீட்டிலிருந்து வேலை பார்ப்பதால், பணி சுமை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.. அதேநேரம், வேலை செய்யும் நேரமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

     கோவிஷீல்டு தடுப்பூசியால் சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது.. ஆனால் ரொம்ப கம்மி- சுகாதார அமைச்சகம் கோவிஷீல்டு தடுப்பூசியால் சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது.. ஆனால் ரொம்ப கம்மி- சுகாதார அமைச்சகம்

    நிறுவனம்

    நிறுவனம்

    இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. வாரத்திற்கு 55 மணி நேரங்களுக்கு மேல் வேலை செய்வதால் ஆரோக்கியம் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளது.. 194 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், வாரத்திற்கு 55 மணி நேரங்களுக்கு மேலாக வேலை பார்த்தால், 35% பக்கவாதத்தால் பாதிக்கப்படவும், 17% இதய பிரச்சனையால் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

     பணியாளர்கள்

    பணியாளர்கள்

    அதனால், பணியாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கி, வேலை நேரங்களை அதிகரிக்க செய்யாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. அதுமட்டுமல்ல, அதிக நேரம் வேலை செய்வதால் வருடத்துக்கு ஏராளமானோர் உயிரிழந்துவிடுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.. இந்த தொற்று காலத்தில் வேலை பளு அதிகமானால், வருங்காலத்தில், மேலும் அபாயம் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்கள்.

     வேலைப்பளு

    வேலைப்பளு

    அதிக வேலைபளு காரணமாக 2016-ல் மட்டும் 7 லட்சத்து 45 ஆயிரம் பேர் பக்கவாதம், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்களாம்.. உயிரிழந்தவர்களில் 72 சதவீதத்தினர் ஆண்கள், அதிலும் நடுத்தர வயதான 30 முதல் 45 வரை கொண்டவர்கள் தான் அதிக அளவு இறந்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

     தொற்று

    தொற்று

    எனவே, வாரத்திற்கு 35 முதல் 40 மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு குறைந்த அளவே பாதிப்பு ஏற்படும் என்றும், கொரோனா காலத்தால் இதன் ரிஸ்க் அதிகரிக்கலாம் என்றும் ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பும் சர்வதேச தொழிலாளர் அமைப்பும் இணைந்து நடத்திய இந்த ஆய்வில் இத்தகவல்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Working 55 hours or more per week is increases risk of death, UNO research
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X