உலகம் முழுக்க வீரியமாக பரவும் கொரோனா...புதிய உச்சமாக ஒரே நாளில் 15,86,732 பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகிறது. புதிய உச்சமாக ஒரே நாளில் 15,86,732 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கொரோனா அலை மீண்டும் பல நாடுகளில் தீவிரமாக வீசத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் ஒரே நாளில் 15,86,732 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 28,48,63,906 பேர் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து 5,85,483 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,23,93,917 பேராக உள்ளது. கொரோனாவால் மருத்துவமனைகளில் 2,70,31,830 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் ஒரே நாளில் 6,910 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 54,38,159 ஆக அதிகரித்துள்ளது.

World Coronavirus update - 15,86,732 victims in single day - 6,910 deaths

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா வைரஸ் தொற்றினால் உலக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மரபணு மாறிய வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. டெல்டா வைரஸ், ஓமிக்ரான் வைரஸ் என பலவித வைரஸ் தொற்றுகள் பல லட்சம் பேரை பாதித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 4,64,135 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 78,286 பேர் மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். மருத்துவமனைகளில் 1,24,07,305 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் கொரோனாவால் 1,666 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரிட்டனில் கொரோனா வைரஸ் 1,83,037 பேரை பாதித்துள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,25,59,926 பேராக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் 7வது இடத்தில் உள்ளது.பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் 2,08,099 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மொத்தம் 95,34,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 184 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தம் 1.23 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் ஒரே நாளில் 1,00,760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மொத்தம் 61,33,057 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 78 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவில் கொரோனாவால் ஒரே நாளில் 21,119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 10,458,271 பேர் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் ஒரே நாளில் 932 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஓமிக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ஆம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 110க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+